சிங்கள பேரினவாத வெறியும் அரச பயங்கரவாதமும் ஈழத்தமிழினத்தைத் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு ஆளாக்கி வருகின்றது. கொலை, பாலியல் வன்முறை, தமிழர் பிரதேச அபிவிருத்திப் புறக்கணிப்பு, தமிழர் பிரதேச வலிந்த சிங்கள குடியேற்றம், தமிழ் கிராமங்களுக்கு தொடர் சிங்களப் பெயர் சூட்டல், என இனப்படுகொலை பல ரூபங்களில் கொடூர தாண்டவமாடுகின்றது. இக்கொடூரம் ஈழத்தமிழினத்தையும் தாண்டி சுற்றுலாப்பயணியாக ஸ்ரீலங்கா சென்ற பிரித்தானியர் ஒருவரைப் படுகொலை செய்ததுடன், அவருடன் சென்ற சினேகிதியையும் பாலியல் வன்செயலுக்குட்படுத்திய சம்பவம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்படி சுற்றுலாப்பயணியின் படுகொலைதாரிகளில் ஒருவர் மகிந்த இராசபக்சவுக்கு வேண்டியவர் என்பதால் அவருடன் தொடர்புபட்ட எண்மரும் கைதின்பின், எதுவித விசாணையுமின்றி விடுதலை செய்யப்பட்டது, உலகத்திற்கு வியப்பாக இருப்பினும், ஈழத்தமிழர்களுக்கு வியப்பானதன்று.

இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு 1948இல் இருந்து இன்றுவரை தமிழர்கள் தொடர்ச்சியாக முகம் கொடுத்துவரும் இனப்படுகொலைகளுக்கு உள் நாட்டிலோ சர்வதேச ரீதியாகவோ எதுவித விசாரணைகளோ தண்டனைகளோ இடம்பெறவில்லை. எதிர்வரும் நவம்பர் 2013இல் ஸ்ரீலங்கா அரசினால் பெரும் பணச்செலவில் முன்னெடுக்கப்பட இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கினறன. ஸ்ரீலங்காப் பேரினவாத அரசினால் இம்மாநாடு எதிர்ப்பின்றி நடத்தி முடிக்கப்படுமாயின், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், தமிழர் தேசம் மீது ஏவி விடப்பட்ட இன அழிப்புகள் முழுமையாக மறைக்கப்பட்டுவிடும் அபாயத்தினை நாம் பொறுப்புடன் அவதானித்தல் வேண்டும். சிங்கள பேரினவாத அரசின் இக்கபடத்தனத்தை முறியடிக்கக் கூடிய பலம், புலம்பெயர் தமிழர்களிடமும், உலகளாவிய ஈழத்தமிழ் உறவுகளிடமுமே தங்கியுள்ளது எனபதனை கருத்திற் கொண்டு செயற்படுதல் வேண்டும்

அன்பு உறவுகளே!

கனடா வாழ் தமிழ் மக்களும், அரசாங்கமும் பொருத்தமான முடிவை எடுத்துள்ளனர். நாமும் ஓரணியில் திரண்டு உறுதியான செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்போமாயின்

1) பொது நலவாய நாடுகளின் மாநாடு ஸ்ரீலங்காவில் நடைபெறுமிடத்து சில பொதுநலவாய உறுப்புரிமை நாடுகள் அதனை புறக்கணிக்கவைக்க முடியும்.

2) பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் ஸ்ரீலங்காவை புறக்கணிக்க வைக்க முடியும்.

3) உச்ச பட்சமாக பொதுநலவாய கட்டமைப்பிலிருந்து ஸ்ரீலங்காவை தடுத்து வைப்பதும் சாத்தியமே.

அன்புறவுகளே!

இடையறா செயற்பாட்டினூடகவே போராட்டத்தை துரிதமாக முன்னெடுத்துச் செல்லமுடியும். பிரித்தானியாவில் தமிழ் மக்களுக்கான நற்பணிகளை ஆற்றிவரும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களிடமும் பிரித்தானிய தமிழர் பேரவை அன்புரிமையுடன் நேசக்கரம் நீட்டுகின்றது.

இம்மாபெரும் தொடர் போராட்டப்பணியில் அனைத்து அமைப்புகளும் தம்மால் முடிந்த உச்ச பங்களிப்பினைப் பொறுப்புணர்வுடன் நல்கி உதவுமாறு வேண்டுகின்றது. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், தமிழ்பாடசாலைகள், ஊரக நலன்புரிச் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், கோவில்கள், ஏனைய சமைய நிறுவனங்கள், மற்றும் சமூக நிறுவனங்கள், ஊடகங்கள் அனைத்தையும் நம்பிக்கையுடன் தம்முடன் கை கோக்குமாறு பிரித்தானிய தமழர் பேரவை உரிமையுடன் வேண்டுகின்றது.

BTF இதுவரை கணிசமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து பிரித்தானிய அரசு ஸ்ரீலங்காவிற்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வேண்டியதை MPக்கள் நியாயமான கோரிக்கையென ஏற்றுள்ளனர். மேலும் மீதமான 600 உறுப்பினர்களைச் சந்தித்து நேர்காண உதவும்படி தமிழ் மக்களை அழைக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொள்ள நீங்கள் செய்யவேண்டியது:

Go to Google and type- “Find your MP”

First, type your “UK postcode” and click Find MP.

அது உங்கள் MP இன் பெயர் மற்றும் ஈமெயில் விபரங்களைத் தரும்.

பின்வரும் விபரத்தினை உங்கள் இமெயிலில் இருந்து உங்கள் MP யின் ஈமெயில் இற்கு அனுப்பி வையுங்கள்.

———————————————————————————-

உங்கள் முகவரி
திகதி

Dear “உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பெயர் ”

I shall be much obliged if you could grant me an appointment at your earliest to see you along with some Tamil constituents. We would like to discuss and handover petitions, requesting the Prince of Wales and the Prime Minister to refrain from attending the CHOGM in Srilanka.

Thank you

Yours truly

“உங்கள் பெயர் ”

மேலதிக விபரங்களுக்கு:

BTF Telephone: 020 8808 0465,
Mobile: 079 1418 8769, 075 1746 1685

E-mail: admin@tamilsforum.com