srebrenicaஸ்ரெப்ரெனிசா படுகொலை தொடர்பில் விசாரணை நடத்திவந்த முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான ஐநாவின் போர்க்குற்ற விசாரணை தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பினை வழங்குவதற்கு தயாராகிவருகின்றது.

 

பொஸ்னியாவில் 1995-ம் ஆண்டில் நடந்த ஸ்ரெப்ரெனிசா படுகொலையில் தொடர்புடைய 5 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரெப்ரெனிசாவில் சுமார் எட்டாயிரம் முஸ்லிம் ஆண்களும் இளைஞர்களும் மூன்று நாட்களில் கொல்லப்பட்டனர்.

 

ஐரோப்பாவில் ஹோலோகோஸ்ட் படுகொலைகளுக்குப் பின்னர் நடந்துள்ள மிக மோசமான இனப்படுகொலை சம்பவமாக ஸ்ரெப்ரெனிசா பார்க்கப்படுகின்றது.

 

பொஸ்னியசெர்பிய இராணுவத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தவர்களில் 5 பேரே இந்தப் படுகொலை விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.

 

பொஸ்னியசெர்பிய இராணுவத்தின் முன்னாள் கமாண்டர் ராட்கோ மிலாடிச்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றியவர்களே இந்த ஐந்து பேரும்.

 

த ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றத்திற்கான வழக்கு விசாரணையை ராட்கோ மிலாடிச் எதிர்கொண்டுள்ளார்.

 

பி.பி.சி.