13வது சட்டதிருத்தம், மாகாண தேர்தல் மற்றும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்து 25ம்தேதி சென்னையில் போராட்டம் – பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

0
568

Bala-studentதமிழீழ கோரிக்கையை குழி தோண்டி புதைக்கும் நோக்கோடு இந்திய-இலங்கை மற்றும் சர்வதேசம் ஒன்றிணைந்து 13வது சட்டத்திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கையை திணிப்பதை தமிழகமாணவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் அரசியலைமைப்பு சட்டம் தமிழர்விரோத சட்டமாகும். அதனை ஏற்காத ஈழத்தமிழர்களிடம் தனிதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்காமல் துப்பாக்கி முனையில் மாகாணதேர்தல் என்ற ஒன்றை நடத்தி தனது கைப்பாவை ஒருவரை முதல்வராக்க துடிக்கின்ற இனப்படுகொலை கூட்டாளிகளான இந்தியாவையும், இலங்கையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த துரோகத்தை முறியடிக்கவும் ”மோசடியான” மாகாண தேர்தலை புறக்கணிக்கவும் தமிழீழ மக்களையும், மாணவர்களையும்w தமிழக மாணவர்கள் சார்பாக பாலசந்திரன் மாணவர் இயக்கம் வேண்டுகிறது. மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை இந்த புறக்கணிப்பு முயற்சியினை முன்னெடுக்க கோருகிறோம். வருகின்ற நவம்பர் மாதம் 10-17 தேதிகளில் காமன்வெல்த் மாநாட்டினை ஈழத்தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கையில் நடத்தி இலங்கையை காப்பாற்ற முயற்சிக்கின்ற இந்தியா, இலங்கை மற்றும் சர்வதேசத்தை வன்மையாக கண்டிக்கிறோம். காமன்வெல்த் கூட்டமைப்பின் அடிப்படை விதிகள் அனைத்தையும் மீறியிருக்கின்ற இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து உடனடியாக வெளியேற்ற கோருகிறோம்.

இவைகளை தடுத்துநிறுத்தும் வண்ணமாக வருகின்ற 25ம்தேதி சென்னை வள்ளுவர்கோட்ட்த்திலும், நெல்லை பாளையங்கோட்டையிலும் மாலை 5.00 மணியளவில் மாணவர்களின் சார்பாக ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் முன்னெடுக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பும் பங்கெடுக்க உள்ளது.

கோரிக்கைகள்:
1) தனித்தமிழீழ கோரிக்கையை சிதைக்க இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை புறக்கணிக்கின்றோம்.

2) இந்திய-இலங்கை கூட்டுச்சதியால் நடத்தப்படவிருக்கின்ற மாகாணத்தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழீழமக்களையும், மாணவர்களையும் கோருகிறோம்.

3)தனித்தமிழீழத்திற்கான ஒரே தீர்வான பொதுவாக்கெடுப்பை சர்வதேசசமூகமே உடனே நடத்து.

4)இனப்படுகொலையை மறைக்கும் பொருட்டு இந்தியா, இலங்கை மற்றும் உலகநாடுகளின் கூட்டுச்சதியால் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது.

5) காமன்வெல்த்தின் அடிப்படை விதிகளை மீறிய இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும்.

6) இனப்படுகொலை மண்ணில் காமன்வெல்த்மாநாடு நடைப்பெற்றால் இந்தியா காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும்.

பங்கேற்ப்பாளர்கள்:

பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் சார்பாக
ஆனந்த், பன்னீர் செல்வம்,மகாராஜன்,கார்த்திக்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக
சிபி லக்சுமன், நவீன் குமார், பாலாஜி

தொடர்புக்கு: 9677226318, 9489235319