17 தன்னார்வப் பணியாளர்கள் படுகொலையின் 7வது ஆண்டு நினைவு

0
588

action0contre0faim_3திருகோணமலை மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் நினைவாக, பரிசின் புறநகரான கிளிச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு கல்லின் முன்பாக வணக்க நிகழ்வு நடைபெற்றது.

2006ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதியன்று சிறீலங்காப் படையினரால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிச்சியில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாநகர சபைகளின் துணை நகரபிதாக்களான வினீமீ. Mme. Mireille Gitton, M. Serge Setterahmanen, M. Fawzi ben Abdallah ஆகியோரும், இனப்பாகுபாட்டுக்கு எதிரான அமைப்பின் தலைவர் வி. M. Cristien அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர்.

action20contre20la20faim_2இதேவேளை, இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியிருந்தனர். இதேவேளை, இப்படுகொலை தொடர்பான விசாரணைகளில் சிறீலங்கா அரசாங்கம் முன்னேற்றக்கரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று 7வது ஆண்டு நினைவு நாளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க்கைத் தலைமையமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னரே இந்தக் கொலைகள் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையில் சர்வதேசத்துக்கு ராஜபக்ச அரசாங்கம் நல்ல எலும்புத்துண்டுகளை வீசியுள்ள போதிலும், குறித்த மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படப்படவில்லை என்று கண்காணிப்பகத்தின் கொள்கை பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே தமது உறவுகளை இழந்தவர்கள் இன்னும் நீதிக்காக ஏங்கி நிற்பதாக ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலைகள் தொடர்பில் அரசாங்க படையினர்மீது குற்றச்சாட்டுக்களை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ளனர். இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை மற்றும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு விசாரணை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது. இது உண்மையான முன்னெடுப்பாக இருக்காது.

எனவே சிறீலங்கா அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்காக சர்வதேசமே செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஜேம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.