sampurஇன்று இந்த அர­சி­யல்­கை­திகள் விடு­தலை விவ­கா­ரத்தில் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மட்­டு­மன்றி கொழும்பில் பல சிங்­கள, முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் தலை­யிட்­டுப் ­போ­ராட்­டத்தை நடத்திக் கொண்­டுள்­ளனர். இந்­நி­லையில் இச்­ச­பையில் உள்ள சிலர் பொருத்­த­மற்ற வகையில் பிரே­ணைக்குப் புறம்­பான விட­யங்­களை பேசு­வது கவ­லை­ய­ளிக்­கின்­றது என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் எஸ்.கலை­ய­ரசன் குறிப்­பிட்டார்.

 

மாகாண சபையின் 47 ஆவது அமர்வில் தமிழ்ச் சிறைக்­கை­தி­களை பொது­மன்­னிப்பு வழங்கி விடு­விக்க வேண்டும் என்ற அவ­சரப் பிரே­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 

நாங்கள் ஆல­யங்­க­ளிலும் வேறு இடங்­க­ளிலும் கொலை செய்­ப­வர்கள் பற்றி இங்கு பேச­வில்லை. இங்கு உறுப்­பி­னர்கள் பல படு­கொ­லைகள் பற்­றிப்­பே­சி­னார்கள். நான்­ஒரு விட­யத்தை ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.

 

கடந்த 1956 ஆம் ஆண்டு அம்­பாறை நகரில் எத்­தனை தமிழ் குடும்­பங்கள் இருந்­தன. அங்கு இன்றும் ஆலயம், பாட­சாலைகள் உள்­ளன. அந்த மக்கள் எங்கு போனார்கள். அந்தக் காலத்தில் எமது தந்தை செல்வா போன்ற தலை­வர்கள் இவற்றை எதிர்த்து அகிம்சை வழியில் போரா­டி­னார்கள். அதனை அப்­போது இருந்த பெரும்­பான்மை ஆட்­சி­யா­ளர்கள் மதிக்­க­வில்லை. அதன் பய­னா­கத்தான் ஆயுதப் போராட்டம் வந்­தது.

 

இந்த ஆயுதப் போராட்­டத்தை வளர்த்­த­வர்கள் யார்? இதனை எமது உறுப்­பி­னர்கள் விளங்கிக் கொள்­கின்­றார்­களா?

 

அந்தக் காலத்தில் அம்­பா­றை­யில் ­வி­டு ­த­லைப்­பு­லிகள் இருக்­க­வில்லை. அவர்களை அந்த இடத்தை விட்டுத் துரத்­தி­ய­வர்கள் யார்? நான் அம்­பா­றையின் எல்லைக் கிரா­மத்தைச் சார்ந்­தவன். 1990 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் என்­னுடன் இருந்த எத்­த­னையோ பேர் எங்கேயோ தெரி­யாமல் போனார்கள். ஆயுதம் தரித்த விடு­த­லைப்­ பு­லி­க­ளுடன் இருந்­த­வர்கள் மட்டும் உயிர்­பி­ழைத்த வர­லாறும் உள்­ளது.

 

இங்கு பிரே­ர­ணைக்கு வெளியில் சென்று பேசி­ய­த­னால்தான் நான் ­பேசும் நிலை மைக்குத் தள்­ளப்­பட்டேன். கடந்த மாகாண சபையில் பல ஜன­நா­யக போராட்­டங்­களை இந்தச் சபை­யிலும் நடத்­தி­யுள்ளோம்.

 

ஏனெனில் கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த சபையில் மட்­டு­மல்ல, நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஜன­நா­யகம் இருக்­க­வில்லை.

 

இந்த நிலையில் நீண்­ட­கா­ல­மாக எந்­த­ வி­த­மான விசா­ர­ணை­க­ளு­மின்றி எமது தமிழ் சகோ­த­ரர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளது உற­வி­னர்­களும் அவர்­களின் விடு­த­லை­வேண்டி வாடு­கின்­றனர். ஜன­வரி 8 ஆம் திக­திக்குப் பின்னர் ஏற்­பட்ட நல்­லாட்சி சூழலில் அவர்களின் விடுதலையை வேண்டி இன்று இந்தப் பிரேணையை எமது பிரதிநிதி சமர்ப்பித்துள்ளார்.

 

இந்த நிலையில் அவர்களின் விடுதலைக்காக நாம் வலியுறுத்தி நிற்கின்றோம். இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.