fasting-tn8ஈழத்தில் நடைபெற்றுவரும் தமிழினப்படுகொலை குறித்த சர்வதேச விசாரனை கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

சர்வதேச விசாரனை வேண்டும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்த ஆறு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரும் நெருக்கடி கொடுத்து கைவிடச்செய்துள்ளார்கள்.

கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் நெருக்கடிக்குள்ளாகி ஆறு மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்து செல்ல மேலும் 12 மாணவர்கள் இன்று காலை 11மணிமுதல் உண்ணாவிரதப் போராட்டைத் தொடர்ந்து வருகின்றார்கள்.

கல்லூரி வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கல்லுரிக்கு வெளியில் வீதியோரமாக தரைவிரிப்புகளை போட்டு அதன் மீது தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள்.

இந்திய மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வேறு வழியில் போராட்டத்தை விரிவுபடுத்த மாணவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஈழதேசம்.