Archive for the ‘நேர்காணல்கள்’ Category

சிறீலங்கா படையில் இணைக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் படையில் இணைக்கப்பட்ட பெண்கள் பயிற்சியின்போது துன்புறுத்தப்படும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில் பின் போர்க்கால சூழலில் பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அதன் விளைவான உளவியல் தாக்கங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவரும், குறிப்பாக தமிழ்ப்பெண்களை சிங்களப்படையில் இணைத்தமை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவருமான ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனியிடம்   [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் டிசம்பர் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜேர்மனியில் உள்ள பிரெமன் நகரில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது! இத் தீர்ப்பாயத்திற்கு மே17 இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் தலைவர் திரு. திருமுருகன் காந்தி அவர்களும் அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. உமர் அவர்களும் நேரடியாகச் சென்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை சம்மந்தப்பட்ட பல ஆதாரங்களை வழங்கியிருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாதாரங்கள் பற்றியும், நிரந்தர   [ மேலும் படிக்க ]

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் அந்த முருகனின் தாயார் சோமணி, இருபத்து மூன்று வருடங்களாக மகனைப் பற்றி வாய் திறக்காதவர் தற்போது மனம் விட்டு பேசியிருக்கிறார். தமிழக சஞ்சிகையொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு, ‘இலங்கையில் எங்கே வசித்தீர்கள்? அங்கே எப்படி இருந்தீர்கள்? யாழ்பாணத்தில் இருந்து முப்பது கிலோமீற்றர் தூரம் இருக்கிற இத்தாவில், ‘பளை’, யாழ்ப்பாணம்தான் எங்கட ஊர். நல்ல உழைப்பாளி குடும்பம். விவசாய காணியெல்லாம்   [ மேலும் படிக்க ]

மே 18 இற்கு பிறகு இலக்கியவாதிகள் பலர் இலக்கிய’வியாதி’களாக தமிழர்களுக்கும் அவர்கள் விடுதலைக்கும் எதிராக மாறிப்போன சூழலில் தீபச்செல்வனின் எழுத்துக்கள் எமது மக்களோடு மக்களாக, மக்களுக்குள்ளிருந்து மக்களின் மொழியில் பேசத்தொடங்கின. இழந்த எமது நிலமும், மண்ணும் தீபச்செல்வனின் கவிதைகளுக்குள் பேசுபொருளாகின. மே 18இற்கு பிறகான எமது அரசியலை நிலத்தை குறியீடாக்கி அறச்சீற்றத்துடன் பேசத்தெடங்கின. மண்ணின் கவிஞனாக மக்களின் கவிஞனாக தீபச்செல்வனை வரலாற்றில் நிறுத்தும் புள்ளி இதுதான். அவல, அடிபணிவு, ஒப்படைவு   [ மேலும் படிக்க ]

கடந்த நான்கு வருடங்களாக தமிழ் இன அழிப்பின முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டு பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்ற முயன்றும் வரும் ஒரு உளவியலாளர் குழுவின் சார்பாக பெண்ணிய உளவியலாளரும் அரசியற்செயற்பாட்டாளருமான பரணிகிருஸ்ணரஜனியுடன் நாம் நடத்திய பிரத்தியேக நேர்காணல் இது. ஈழத்தில் நடத்தப்பட்டது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான – அமைதிக்கெதிரான குற்றம். இதுவே இன அழிப்பாக மாறியது. இது ஐநாவின் பூரண அறிவுடன் நடத்தப்பட்டதாக குற்றம்   [ மேலும் படிக்க ]

2009 தமிழின இன அழிப்பில் ஐநாவின் கட்டமைப்பு ரீதியான தோல்வி குறித்த இறுதி அறிக்கையை INNERCITY PRESS கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஐநா செயலர்Ban ki Moon ஐநா வின் பிரதி பொது செயலாளர் Jan Eliasson கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பிலிருந்து இது குறித்து எந்த கருத்துக்களையும் கண்டனங்களையும் காண முடியவில்லை. ஒரு இன   [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்திற்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் தமது வாசகர்களுக்கு தமிழில் தருகின்றது. தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தமிழரான பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்காவின் முதலாவது வெள்ளை இனமல்லாத உயர் நீதிமன்ற நீதிபதியாவார். அதன் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். றுவான்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான   [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் அவுஸ்த்திரேலிய வானொலி நிலையத்திற்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் தமது வாசகர்களுக்கு தமிழில் தருகின்றது. தென்னாபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தமிழரான பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்காவின் முதலாவது வெள்ளை இனமல்லாத உயர் நீதிமன்ற நீதிபதியாவார். அதன் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். றுவான்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான   [ மேலும் படிக்க ]

இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார். வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.   [ மேலும் படிக்க ]

இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழீழ‌ர்களு‌க்கு எ‌திரான தா‌க்குத‌லி‌ல் ஈழ ம‌க்க‌ளி‌ன்படுகொலைகளையு‌ம் த‌மி‌ழ் ம‌க்க‌ள் அனுப‌வி‌த்த இ‌ன்ன‌ல்களையு‌ம் ஓ‌வியமாக வரைந்த ஓ‌விய‌ர் புகழே‌ந்‌தியை அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் செ‌ன்று ச‌ந்‌தி‌‌த்தோ‌‌ம்.இ‌னி அவருட‌ன். தமிழ்.வெப்துனியா.காம்: ‘உயிர் உறைந்த நிறங்கள்’ என்ற உங்களுடைய ஓவியக் கண்காட்சி எல்லா இடத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஈழப் பிரச்சனை தொடர்பாக, அங்கு நடந்து முடிந்த படுகொலை, ஈழத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் சேர்த்து ஒரு மிகப்பெரிய ஓவியப் படைப்பை வெளியிட்டு   [ மேலும் படிக்க ]