Archive for the ‘நேர்காணல்கள்’ Category

சிறீலங்கா படையினர் தம்மை கண்காணித்து வருவதாக தமிழ் மக்கள்; தெரிவித்துள்ளனர். படையினர் அங்கு உள்ளதை இட்டு அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு கவனம் செலுத்த வேண்டும். பெருமளவில் மக்கள் கதறி அழுததை நான் இதற்கு முன்னர் எங்கும் காணவில்லை. இவ்வளவு பெருமளவில் மக்களிடம் வேதனை இருப்பதை நான் எங்கும் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்   [ மேலும் படிக்க ]

உலகெங்கும் பரந்து வாழும் பத்துக் கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்களில், தமிழகம் ஏறத்தாள ஏழு கோடி மக்களைக் கொண்டுள்ளது. சிங்கள அரசின் இனஒடுக்கு முறைகளில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக போராடும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தமிழகத்தின் ஆதரவு மிக மிக அவசியமானது. தனக்கு சார்பான பௌத்த நாடுகளை ஒருங்கிணைத்து தமிழ் மக்கள் மீது ஒரு முழு அளவின இனஅழிப்பை சிறீலங்கா அரசு முனைப்பாக முன்னெடுக்கும் போது அதனை முறியடிப்பதற்கு ஈழத்தமிழ்   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா அரசு அறிவித்துள்ள வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் முதலமைச்சர் வேட்பாளாராக முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரனை நிறுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறுபட்ட ஆளுமைகளிடம் இருந்து பெற்ற கருத்துக்கள் இவை. மே 18 இற்கு பிறகு போராட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் ஆளுமைகளாக தமது தளங்களில் நின்று தீவிரமாக செயற்படும் இவர்களின் கருத்துக்களை தமிழ் மக்கள் மட்டுமல்ல கூட்டமைப்பும் செவிமடுக்க வேண்டும். அனைவரின் கருத்துக்களும் பிரிக்கப்பட்ட மகாண சபை   [ மேலும் படிக்க ]

இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உன்னிப்பான பார்வையை செலுத்தி, போர்க்குற்றத்திற்கான தண்டனைகளை வழங்க வேண்டும் என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் சமாதான பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அவர், நோர்வே நாட்டின் “ஆஃப்டன்போஸ்டன்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். காலம் கடந்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் இந்த போர்க்குற்றம் தொடர்பில் உன்னிப்பான பார்வையை செலுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனை   [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான திரு சி. வரதராஐன் அவர்கள் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு செய்தி 1. தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடமாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நோக்குகின்றது? தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரையில் இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் மாகாண முறமையையும் முற்றாக நிராகரிக்கின்றது. அதற்கான காரணங்கள் பல்வேறு பட்ட தடவைகளில் விளக்கப்பட்டுள்ளது.   [ மேலும் படிக்க ]

கல்யாணப் பூரிப்பில் இருக்கிறார் சீமான்! ‘வாழ்த்துகள்’ சொன்னால், ”அட, மத்த விஷயங்களைப் பேசிக்கலாம்… அதைக் கடைசியாப் பார்த்துக்கலாம்!” என்று மடை மாற்றுகிறார். ”தர்மபுரி கலவரம், இளவரசன் மர்ம மரணம்…இந்த விவகாரத்தில் நீங்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகளை வெளிப்படையாக அடையாளம் காட்டவோ, தாக்கிப் பேசவோ தயங்குவது ஏன்?” ”சாதி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. எதிரில் நிற்பவனையும் குத்தும் எடுத்தவனையும் குத்தும். ஆனா, நாங்கள்பொது வான பிள்ளைகள்.   [ மேலும் படிக்க ]

பிரான்சிஸ் ஹாரிசன்”, பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர் இலங்கையின் இறுதிப் போரை, உள்ளதை உள்ளபடி படம் பிடிப்பது போல அவர் எழுதிய “still counting the dead” புத்தகம் இலங்கை தமிழர்கள் இறுதிப் போரின் போது பட்ட அவஸ்தையை வரிக்கு வரி படம் பிடிப்பதுடன் இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களை தொகுக்கும் ஆவணமாகவும் விளங்குகிறது. அவரை நான் கண்ட செவ்வி, உங்கள் புத்தகத்தை படித்த போது இலங்கையில் நடந்த இனப் படுகொலையை   [ மேலும் படிக்க ]

எவர் அழைப்பு விடுத்தாலும் வடக்கு மாகாணசபை தேர்தலை புறக்கணிப்பதென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முடிவினில் எந்தவொரு மாற்றமும் இல்லையென அதன் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தினில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் கலந்து கொண்டு கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாணசபை தேர்தலிற்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் தெரிவில் அதிருப்தியுற்றுள்ள அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுயேட்சைக்குழுவொன்றை போட்டிக்கு முன்னிறுத்த முற்பட்டுள்ளார்.இதற்கேதுவாக தனது பத்திரிகை ஆசிரிய   [ மேலும் படிக்க ]