Archive for the ‘ஆசிரியர் தலையங்கம்’ Category

மாமனிதர் தராகி சிவராம் இனஅழிப்பு அரசின் கொலைக்குழுவால் கடத்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நாளை. சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலரும் நம்பினோம். இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் இன அழிப்பு அரசு திட்டமிட்ட தூர நோக்கில் அந்தப் படுகொலையை நிகழ்த்தியதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. தமிழ்த்தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. அவர்   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலையை வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் அரசியல்வாதிகளாலும், கோட்சூட் போட்ட படித்த மேதாவிகளாலும் என்றும் பெற்றுத்தரமுடியாது. இது தமிழீழத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிற நடந்து முடிந்த அனைத்துப் போராட்டங்களுக்கும் பொருந்தும். போராளிகளின் புரட்சிகர வன்முறைப் போராட்டத்திற்கும், உழைக்கும் மக்களின், மாணவர்களின் புரட்சிக்கும் ஒரு தொய்வு ஏற்பட்டு அதற்கான சாதகமான சூழல் உருவாகும்வரை அந்த போராட்டத்தை தற்காலிகமாகத் தாங்கிப்பிடிக்க அல்லது அதை முழுமையாக நீர்த்துப் போகாமல் செய்ய ஒரு தற்காலிக   [ மேலும் படிக்க ]

மே 18 இற்கு முன்பே தென்னாபிரிக்கா தமிழர் தேசத்துடன் நெருங்கிய உறவைப் பேணத்தொடங்கிவிட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகளின் அரசியல் தலைவர்கள் அடிக்கடி சென்று வரும் இடமாகவும் அது மாறியிருந்தது. நிறவெறியிலிருந்து விடுதலை அடைந்த தேசம் என்ற அடிப்படையில் புலிகள் அங்கு கற்றுக்கொள்ள நிறையவே இருந்தது. புலிகளின் பேரம்பேசும் வல்லமையும் தமக்கென ஒரு தெளிவான அரசியலை வரையறுத்துக் கொண்டதும் தென்னாபிரிக்க தமிழீழ உறவில் ஒரு தெளிவான அரசியல் பரிமாணமாக அது   [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹமூத் உட்பட பாகிஸ்தானிய இராணுவ உயரதிகாரிகள் குழு தற்போது சிறீலங்காவில் முகாமிட்டுள்ளனர். வடபகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்க பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. இது குறித்து முன்பே தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் நிமித்தமே சிறீலங்கா மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட   [ மேலும் படிக்க ]

இனஅழிப்பு அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்த வேகத்தில் அந்த அமைப்புக்களோடு “தொடர்புபட்டவர்கள்” என்று ஒரு தடைப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் சிங்களத்தின் நகர்வுகளில் இதுவும் ஒன்று. அனைத்துலக மட்டத்தில் இதன் விளைவாக சிங்கள அரசு எதிர்பார்க்கும் அல்லது எதிர்கொள்ள இருக்கும் விளைவுகளை பின்பொரு தருணத்தில் பார்ப்போம். தமிழ்ச்சூலுக்குள் சிங்களம் எதிர்பார்க்கும் விளைவுகளை மட்டும் தற்போது பார்ப்போம். ஆனால் சிங்களம் நினைப்பது எதுவுமே நடக்கப்போவதில்லை   [ மேலும் படிக்க ]

சிலருக்கு Multiple Personality Disorder அதுதான் அடிக்கடி சில ஞாபகங்கள் வந்து வந்து போகிறது.. புலிகளை எப்படியும் போர்க்குற்றவாளிகளாக்கினால்தான் நடந்தது இன அழிப்பு இல்லை என்று நிருபிக்கலாம் என்ற திட்டத்துடன் சிங்களம் மட்டுமல்ல இந்தியா முதல் மேற்குலகம் வரை படாதபாடு படுகிறார்கள். அதற்கு நமக்குள்ளேயே இருக்கிற பலர் மாடாய் உழைக்கிறார்கள். தற்போது ஐநா விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் சிங்களம் பழையபடி “புலிகள் மக்களை சுட்டார்கள், மனித கேடயமாகப்   [ மேலும் படிக்க ]

ஜெனிவா திருவிழா தமிழர்களுக்கு பல கசப்பான அனுபவங்களை மட்டுமல்ல இனி தமிழர்கள் தோந்தெடுக்க வேண்டிய பாதையையும் கோடுகாட்டியுள்ளது. 2009 இற்கு பிறகு ஒரு சடங்கு போல் ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் இந்த முறைதான் பல அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த செய்திகளை தமிழினத்திற்கு அது தெளிவாக வழங்கியிருக்கிறது. 01. இந்தியா என்றுமே தமிழின விடுதலைக்கு முட்டுக்கட்டைதான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்திருக்கிறது. இது ஒரு பயங்கரமான   [ மேலும் படிக்க ]

2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தை சிங்கள அரசு ஆயிரக்கக்கில் படுகொலை செய்தபோது அதனை அரசியல் ஆக்கிய திராவிட முன்னேற்றக்கழகமும், சிறீலங்கா அரசின் படுகொலைகளுக்கு எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்ட இந்திய காங்கிரஸ் கட்சியினரும் ஈழத்தமிழ் மக்களின் குருதியில் அன்று வெற்றியும் பெற்றிருந்தனர். ஐந்து வருடங்கள் சென்றபின்னர் தற்போது மீண்டும் ஒரு தேர்தல் இந்தமுறையும் தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தி.மு.கவும், காங்கிரசும் களம் இறங்கியுள்ளன. ஆனால் சூழ்நிலை முன்னையது   [ மேலும் படிக்க ]

இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அவர்கள் இனஅழிப்பு இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கருவற்றிருந்தமை தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழ் யுவதிகள் இருவரும் தமக்கு முகாமில் முன்னெடுக்கப்பட்டுவரும் பாலியல் சித்திரவதைகளை வெளிப்படுத்தியதுடன் தமது கருக்களை கலைத்துவிடவும் கோரியுள்ளனர். எனினும் இதற்கு மருத்துவர்கள் மறுதலித்துள்ளதுடன் பெற்றோரிற்கு அறிவிக்க முற்பட்டுள்ளனர். ஆயினும் வன்னி படைத் தலைமை யகத்திலிருந்து வைத்திய சாலை   [ மேலும் படிக்க ]

தமிழ்ப்பரப்பில் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்ற கூச்சலுக்கு குறைவில்லை. ஆனால் இன்றைய நாளில் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அதை ஒரு போராட்ட பொறிமுறையாக மாற்றிக்காட்டியது தமிழக மாணவர்கள்தான். தலைவர் பிரபாகரனின் படத்தையும் தமிழீழ தேசியக்கொடியையும் பாலச்சந்திரனின் படத்தையும் காவியபடி போராட்ட களத்தில் நிற்கும் மாணவர்கள் தாம் யாரின் சார்பாக களத்தில் நிற்கிறோம் என்பதை தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மற்றவர்களால் வாய்கிழிய பேச முடியும். ஆனால் எதையும்   [ மேலும் படிக்க ]