Archive for the ‘செய்திகள்’ Category

கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்குள் சிக்கியுள்ளது. போர் நிறைவடைந்த பின்னர் ஜெனீவாவில் இடம்பெற்ற சம்பவங்களின் ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் அதனை நாம் தெரிந்துகொள்ளலாம்.   போர்   [ மேலும் படிக்க ]

இந்தியத் தேர்தலுக்கான முன்னதாக, டிரம்ப்பிக்கான தமிழர்களின் பேச்சாளர் இந்தியாவில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தில், தமிழ் மக்களுக்கு சார்பாக பின்வரும் செய்தியை தெரிவிக்கின்றனர்.   சோனியாவின் காங்கிரஸ், ஸ்ரீலங்கா இனப் போரின்போது, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை வெல்வதற்கு சிங்கள மக்களுக்கு உதவுவதில் பிரதான பங்களிப்பு செய்ததோடு சிங்கள மக்களால் 145,000 க்கும் அதிகமான தமிழர்களை படுகொலை செய்ய உதவியது.   சோனியாவின் இந்தியா சிங்கள மக்களுக்கு அதிகாரம் வழங்கி,   [ மேலும் படிக்க ]

அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழக விவகாரங்களை உண்மைக்குப்புறம்பான செய்தியாக வெளியிடும் ஒரு சில ஊடகங்களின்  பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்வுகளே இருப்பதாக தெளிவாக அறிய முடிகின்றது . சில அரசியல் கடசிகளையும் அரசியல் புலப்பெயர் தமிழர் அமைப்புகளையும் பின்புலமாக கொண்ட குறித்த ஊடகங்கள் ஊடகவிழுமியங்களையும் மீறி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.   யாழ்பல்கலை கழக மாணவர்களை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அடிபணிய வைக்க   [ மேலும் படிக்க ]

அன்புத் தம்பிகளே! ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியை துவக்கினேன். இன்று எனது பெயரை வைத்துக்கொண்டு நான் உருவாக்கிய கட்சியைப் பயன்படுத்தி, எனது கொள்கையை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடன், அதன் அரசாங்கத்தை என்ன விலைகொடுத்தும் காக்கத் துணிகிறீர்களே அப்படி நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்?   எனது   [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் Aaron Berhane தனது மூன்று சொந்தச் சகோதரர்களை எரித்திரிய விடுதலைப் போரில் இழந்திருக்கின்றார். அவரது மனைவி நான்கு சகோதரர்களை இழந்திருக்கின்றார். Aaron Berhane கூட்டத்தில் உரைத்ததை முடிந்தளவு சொல்ல முனைகின்றேன்.   1890ஆம் ஆண்டுகளில் எரித்திரியாவை இத்தாலி கைப்பற்றிக் கொண்டது. 50 வருடங்கள் இத்தாலியின் எரித்திரியா மீதான காலனித்துவ ஆட்சி தொடர்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இத்தாலி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் 12 ஆண்டு காலம் தனது   [ மேலும் படிக்க ]

பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது.   900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.   அமெரிக்க மற்றும் ரஸ்யா ஆகிய   [ மேலும் படிக்க ]

பெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய  சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி  கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த நிலையில்தான் மருத்துவர் மனோஜ் சோமரத்தன கவனம்பெறுகின்றார்.   இலங்கை சுகாதாரத்துறையின் முக்கியபொறுப்பில் உள்ள தமிழ்பேசும் உயர் அலுவலர் ஒருவரால் ‘வில்லங்கமான’ஒரு அறிவுரை மருத்துவர் மனோஜ் சோமரத்தனவுக்கு வழங்கப்பட்டது.   [ மேலும் படிக்க ]

போர் நிறுத்தம் என்ற மேற்குலகத்தின் அணுகுமுறை எவ்வாறு தமிழர் படையை பலவீனப்படுத்தியது என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பத்தியை முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இங்கு மீண்டும் பதிவு செய்கின்றோம்.   சிறிலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது பலவழிகளிலும்; விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் உள்நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் பலர் அன்று சுட்டிக் காட்டியிருந்தனர்.   அவர்களின் கருத்துக்கள் அன்று சர்வதேசம்,   [ மேலும் படிக்க ]

ஈழத்தமிழர் ஆயுதப்போர் 2009 ம் ஆண்டு இனப்படுகொலை மற்றும் நீதிக்கு புறம்பான யுத்தத்தின் மூலம் இலங்கை அரசு முடித்துக்கொண்டது. இருப்பினும் சர்வதேச அரங்கில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக பலதரப்பு பிரதிநிதிகளும் முயறசிக்கின்ற வேளையில் , சர்வதேச ரீதியில் எமக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே கிடைத்துவருகிறது , இந்த நிலையில் ஐ .நா சபையில் அதிகாரம் கூடுதலாக கொண்ட உறுப்பினர்களின் ஆதரவை தமிழர் தரப்பு பெருகொள்வதில்   [ மேலும் படிக்க ]

தங்களது புகழ்பெற்ற உளவுத்துறை அதிகாரியான ரபேல் ரபி எய்த்தான் 2019 மார்ச் 23 ஆம் நாள் தமது 92 வது அகவையில் மரணமடைந்து விட்டதாக இசுரேலிய அரசு வானொலி சேவை அறிவித்துள்ளது. யூதர்களுக்கு இவர் ஒரு நாயகன், ஆனால் தமிழரை பொருத்தமட்டில் அப்படியல்ல. முக்கியமான கட்டத்தில் தமிழரின் அரசியலை மடைமாற்றி இலாவகமாக தமிழரை அழிவை நோக்கி தள்ளியவர் இவர் .   ரபி எய்த்தான், இசுரேலின் உளவு நிறுவனங்களான ‘சின்   [ மேலும் படிக்க ]