Archive for the ‘செய்திகள்’ Category

பெரியாரியவாதிகளுக்கே உரித்தான பொதுவான நோய்தான் டாக்டர் ஷாலினியையும் தாக்கியிருக்கு. நிறைய முற்போக்கு கருத்துக்கள் பேசுவாங்க, பெரியார் அதை சொல்லியிருக்கார், இதை சொல்லியிருக்கார்னு பேசுவாங்க.   அதையெல்லாம் எப்படியாவது மடை மாற்றி திமுகவிற்கு வாக்குகளாக விழச்செய்ய வேண்டும் என்ற பதட்டம் மட்டும் பெரியாரியவாதிகளிடம் எப்போதும் இருக்கும்.   பெரியாரிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் கருத்தியல் ரீதியாக, செயல்பாட்டு ரீதியாக யாரேனும் முன்னேறி செல்ல முயற்சித்தால் பெரியாரிஸ்ட் சித்தாந்த கருப்பு சங்கிகள் உக்கிரமாகி   [ மேலும் படிக்க ]

அமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி.   ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பை முன்நிறுத்துவது மற்றுமொரு உத்தி. அதனைத் தான் நேட்டோ படையினர் செய்துவருகின்றனர்.   அதேசமயம் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு   [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் போராடுவது எவரையும் நம்பியல்ல… தமிழ் மக்களாகிய எம்மை நம்பி மட்டுமே!   தமிழ் மக்களின் குரலாக இருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் அரசின் ஊதுகுழல்ககளாக விளங்கி அரசு விருந்து படைத்த எலும்பு துண்டுகளுக்காக அரசுக்கு வாலாட்டி செய்த இரண்டகத்தால் எமக்கான நீதி மறுப்பு என்பது அனைத்துலகிற்கு இலகுவானது.   வாக்களித்த மக்களுக்கு இரண்டகம் செய்த தமிழ் தலைமைகள் வரலாற்றில் தவறு இளைத்திருந்தாலும் தமிழ் மக்களின் போராட்டம்   [ மேலும் படிக்க ]

2013 ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய வேல்முருகனும் நானும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினோம். அந்தப் பேச்சில் வேல்முருகனை எப்படியாவது ஈவேரா கருத்தியலிலிருந்து பிரித்து முழு தமிழ் தேசியவாதியாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு நான் பேசினேன் அனைத்தையும் கேட்டு கொண்டு சில இடங்களில் பதிலளித்த அவர் சற்றே ஒரு வாரம் கழித்து ஈவேரா இல்லைன்னா…. என பேட்டி   [ மேலும் படிக்க ]

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கிறது – பிரபாகரன்.   புலிகள் இயக்கம் புலிப்பண்பாட்டின் மூலம் உணர்வுகளின் வழியாக, பலமான அடித்ததளத்தில் இருந்து கட்டப்பட்ட இயக்கம்[9]. எதிரிகள் தலைமையை அழித்தாலும், அது மீண்டும் பலமான தலைமையைப் பெரும் வல்லமையுடையது. இதை எதிரிகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் தராகி சிவராம் பலமுறை கூறியுள்ளார்கள்.   புலிவீரர்கள் உணர்வுகளின் அடிப்படையில் விடுதலைக்குப் போராடுவதானால், அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் போராட முடிந்தது. மாறாக   [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையை 99 வருடங்களுக்கு தனதாக்கிக் கொண்ட சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு காலாவதியான திருமலைத்துறைமுகத்தின் ஒப்பந்தத்தை பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா புதுப்பித்துள்ளது.   அதாவது திருமலைத்துறைமுகத்திலுள்ள அமெரிக்காவின் பிரசன்னம் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன், இந்தியாவையும் கண்காணிக்க அமெரிக்காவுக்கு பெரும் உதவிகளை வழங்கும்.   ஆனால் தற்போது அமெரிக்கா மற்றுமொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது சீனா வடக்கு நோக்கி தனது   [ மேலும் படிக்க ]

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பு தொடர்பில் தீர்மானம் ஒன்றை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநாகரசபை அண்மையில் தனது வருடாந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது.

தான் மேற்கொண்ட தமிழினப்படுகொலையை நியாயப்படுத்தி அதனை பயங்கரவாதப் பிரச்சனையாக சித்தரிப்பதற்கு சிறீலங்கா அரசதரப்பு மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றது. 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து துன்புறுத்தல்களை மேற்கொண்ட சிறீலங்கா அரசு தமிழ் மக்களை குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என வேறுபாடின்றி படுகொலை செய்த சிங்களப்படையை வழிநடத்திய தளபதிகளை வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு ஒரு சுகபோக வாழ்க்கையை ஏற்படுத்தியதுடன், தமிழ்   [ மேலும் படிக்க ]

ஏழு தமிழர் விடுதலைக்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருந்தும் ஆளுநர் தாமதிப்பது முறையல்ல- டாக்டர் ராமதாஸ்   அற்புதம்மாளுக்கு துணை நில்லுங்கள் – ஏழு தமிழர் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ்   அற்புதம்மாளின் நடைப்பயணத்தில் கலந்துகொள்ளும் ஆயிர மாயிரம் தமிழர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன் – நடிகர் ஜீ.வி.பிரகாஸ்   ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் இன்று ஆரம்பித்துள்ள பயணத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.   [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, பொது மக்கள் காணிகள் விடுவிப்பு, படையினரை வடக்கில் இருந்து நீக்குதல், சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துதல் என்பனவற்றில் கவனம் செலுத்தாமல் ஐ. நா. வுக்கு நல்லிணக்கம் காட்ட நாடகங்களை நடத்துகின்றது சிறிலங்கா அரசு.   அதற்கு முண்டு கொடுக்கின்றனர் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள். ரணிலுக்கு முண்டு கொடுக்க முன்பு நிபந்தனைகள் விதிக்காமல் வக்காலத்து வாங்கியவர் சனாதிபதி சட்டத்தரணி.   ஐ. நாவில்   [ மேலும் படிக்க ]