Archive for the ‘செய்திகள்’ Category

பாடம் 2: தமிழ்த்தேசியத்தை பரிணமித்துதான் வெல்ல முடியும்   புலிகளால் ஈழப் போர்களில் உலகை வியக்கவைக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது. இது எவ்வாறு சாத்தியமானது?  இதற்கு பெரும்பாலானோர் கூறும் காரணம்   பிரபாகரனின் நிகரற்ற தலைமை என்பதே. இதில் எந்த பெரிய  மாற்றுக் கருத்து யாருக்கும்  இருக்க முடியாது. ஆனால் இதுபோன்ற விளக்கங்களின் சிக்கல் என்னவென்றால், இனி வெற்றிகரமான இயக்கங்களை  எவ்வாறு கட்டி எழுப்புவது என்று  எந்த ஒரு விளக்கத்தையும்  இது   [ மேலும் படிக்க ]

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008 அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.   பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும்   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார்.   தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறை சூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் இன்று காலமானார் என்ற துயரச் செய்தியை அறியத் தருகின்றோம்.   1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதி.  தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக வர்த்தக கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்தித்தபோது,   [ மேலும் படிக்க ]

”HSBC World in Forecast 2050” வழங்கிய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price WaterHouse Coopers (PWC) அறிக்கையில், ”இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.   அதேவேளை, அமெரிக்காவின் பசிபிக் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தினை, மே 2018இல் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையமாக மாற்றி அமைத்து   [ மேலும் படிக்க ]

எம்மையறியாமலேயே ‘ஐக்கிய’ இலங்கைக்குள் வாழ எம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமல்ல இன அழிப்பு அரசு தனது இறுதி வெற்றியை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதன் அதிர்ச்சியூட்டும் ஒரு சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்து ஒரு வித கிலியை ஏற்படுத்துகின்றன.   பல மாதங்களுக்கு முன்பு நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலன் என்ற போர்வையில் இன அழிப்பு அரசின் நீதியைக் காப்பாற்ற நின்ற சிங்கள காவலாளிக்கு அந்த நீதிக்குப் பலியாகிக்   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவை பிரித்தானியர்கள் கைவிட்டுச் சென்ற பின்னரான கடந்த 70 வருடங்களில் சிங்கள பெருமன்பான்மை அரசுகள் பல அரசியல் நெருக்கடிகளை தமது பிரதேசத்தில் சந்தித்துள்ளன. சிறுபான்மை இனங்கள் மீது தனது இன அடக்குமுறைகளை பயன்படுத்திவரும் பெருன்பான்மைச் சிங்கள அரசின் இந்த நெருக்கடிகளை தமக்கு சாதகமான ஒரு பேரம் பேசும் அரசியல் காரணியாக பயன்படுத்துவதில் இருந்து பல தடவைகள் தமிழ் இனம் தவறியுள்ளது அல்லது தமிழ் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால்   [ மேலும் படிக்க ]

இனவழிப்பில் முடிந்த  ஈழப்போரைப்  பற்றிய இராணுவ மட்டும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் பெரும்பாலும் அதிலிருந்து எப்படி “தீவிரவாதத்தை” ஒழிக்கலாம்,  எப்படி இன அமைதியை ஏற்படுத்தலாம் என்ற பார்வையிலேயே இருக்கும்.  உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்த உலக ஒழுங்கு காக்கப்படவேண்டும், அப்பொழுது சிலநேரம் இனவழிப்பு ஏற்படும், அதைப் பெரிது படுத்தினால் உலக ஒழுகிற்குத்தான் ஆபத்தானது,  அவ்வொழுங்கில் எவ்வாறு தங்கள் நலனை முன்னிறுத்துவது என்ற பார்வையிலேயே இருக்கும்.   மொத்தத்தில் உலக அரசியல்   [ மேலும் படிக்க ]

தமிழீழத்தை ஆக்கிரமித்திருக்கும் சிறீலங்கா இன அழிப்பு அரசின் படைகள் வன்னி மக்களை மழை வெள்ளத்திலிருந்து மீட்டு வருவதாக சிலர் புல்லரிப்புடன் பதிவுகள் இடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.   இதே படைகள்தான், சில வருடங்களுக்கு முன் அனைத்துலக ஊடகங்கள்/ தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் கூட்டாக வெளியேற்றிவிட்டு கதறக் கதற இதே மக்களைப் போட்டுத் தள்ளினார்கள். எல்லாம் முடிந்து எண்ணிப் பார்த்தால் இந்த மக்களில் 146679 பேரைக் காணவில்லை..   எஞ்சியவர்களை   [ மேலும் படிக்க ]

தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 196 ஆவது பிறந்தநாள் (19.12.2018) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!…..   1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர்   [ மேலும் படிக்க ]

1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்படவில்லை.   ஆரம்பித்து வைத்த கலைஞர்கூட இறந்துவிட்டார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.   கடந்த 28 வருடங்களாக இந்தியாவில் ஈழ அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.   தற்போது திருச்சியில் இச் சிறப்புமுகாம் இயங்கி வருகிறது. அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி   [ மேலும் படிக்க ]