Archive for the ‘ஆய்வு கட்டுரைகள்’ Category

உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது   [ மேலும் படிக்க ]

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014 – தமது ஆட்சி காலம் சட்டரீதியாக முடிந்த பின்னரும், தாம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக அரசியல்யாப்பை மாற்றி, தில்லுமுல்லு மோசடி தேர்தல்களை நடத்தி தமது ஆயுட்காலம் வரை ஆட்சியில் இருக்க திட்டமிட்ட, ஆட்சி வெறி கொண்ட பல தலைவர்கள், மக்கள் எழுச்சியினால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். “தேர்தல் முடிவுகளை முகபேயே முடிவு செய்வதனால்,தேர்தல்களில் பங்குகொள்வதில் எந்த பிரயோசனமுமில்லை” — மோகன்சங்கராய், சிம்பாப்பேயின் எதிர்க்கட்சி தலைவர் உலகில்   [ மேலும் படிக்க ]

வரும் சனவரி மாதத்தில் அதிபர் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்~ மேற்கொண்டிருக்கும் நிலையில், மகிந்தரை வீழ்த்தும் நோக்கில் பொது வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் பொருந்திய அதிபர் முறைமையை கிழட்டு நரி என்று பெயர்போன ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனா அறிமுகப்படுத்தும் வரை அரசுத் தலைவர் பதவி என்பது சம்பிரதாயபூர்வமான ஒன்றாகவே இருந்து வந்தது. ஈழத்தீவின் ஆட்சியதிகாரத்தை   [ மேலும் படிக்க ]

சிங்களம் ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து பல கூத்துக்களை அரங்கேற்றத் தொடங்கி விட்டது. ஆட்சி மாற்ற கனவுடன் பல புதிய கூட்டணிகளும் உருவாகத் தொடங்கி விட்டன. தமிழ் அரசியல்வாதிகளும் வரலாற்றிலிருந்து எந்தப் பாடத்தையும் படிக்காமல் இவற்றின் பின்னே இழுபடத் தொடங்கி விட்டார்கள். இத்தகைய புறச்சூழலில் 2004 ம் ஆண்டு மாமனிதர் தராகி சிவராம் சிங்கள ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து எழுதிய கட்டுரையை காலத்தின் தேவை கருதி நாம் மீள பதிவு செய்கிறோம்.   [ மேலும் படிக்க ]

தமிழ்நாட்டிற்கு ‘தனிப்பட்ட’ விஜயம் மேற்கொண்ட வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், ‘தந்தி’ தொலைக்காட்சியிலும், கண்ணபிரான் நினைவு நிகழ்ச்சியிலும் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் கூறும் நல் ஊடக வெளியில் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வடக்கின் முதல்வர் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் ஏதோவொரு அமானுஷ நெருக்கடி அவரை தந்தி தொலைக்காட்சிக்கு முன்னால் நிறுத்தியிருக்கிறது. அத்தோடு இந்தியா இல்லாமல் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையென்று அவர் அண்மையில் உதிர்த்த வார்த்தைகள்தான் இப்போது   [ மேலும் படிக்க ]

“ஏனென்று கேட்க நாங்கள் யார்?. நாங்கள் உழைக்கவும் சாகவுமே பிறந்தவர்கள்!”….. வாழும் ‘கவி’, ரிஷான் ஷெரிப்பின் மகத்துவமிக்க கவிதைகள் போல, மலையக கல்லறை ஒன்றில் பதியப்பட்டுள்ள பேருண்மை இதுவன்றோ…. நீங்கள் உழைக்கவும், சாகவும் மட்டுமே பிறந்தவர்கள் அல்ல, இப்புவியில் வாழவும் பிறந்த உன்னத ஆத்மாக்கள் என்பதனை இவ்வுலக மக்களுக்கு உரத்துக் கூறுங்கள். பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்த பிரதேசத்தில் மக்கள் புதையுண்டு போனார்கள் என்கிற செய்தி உலகத்தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்குள்ள மீரியபெத்தவில்,   [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய அரசியலில் ஒரு பிரச்சினைக்குரிய களமாக , வடமாகாணசபை மாறிவிடும்போல் தெரிகிறது. முல்லைத்தீவைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவர், முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அத்தோடு, சிவாஜிலிங்கத்தின் ‘இன அழிப்பு’ பிரேரணையும் புதிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. ஐ.நா.தீர்மானத்தில் மனித உரிமை மீறல், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தேசிய இனத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை என்று கூறவில்லை. ‘அது விசாரணையின் பின்பே தெரியவரும்’   [ மேலும் படிக்க ]

‘இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள்’ என்கிற இந்த கட்டுரையானது, இலங்கையில் வசித்தவரும் பிரபல தமிழ் பத்திரிக்கையாளருமான, மறைந்த ‘தராக்கி’ சிவராம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். முதலில் கிழக்கு பகுதி. இந்த துணைக்கண்டத்தின் கிழக்குப்பகுதி பர்மாவை மற்றும் பிற நாடுகளை கொண்டது. பர்மாவுக்கும் அமெரிக்காவுக்குமான உருவில் பல பிணக்குகள் உள்ளன, பர்மா சீனாவுக்கு அரசியல் பொருளாதார ராணுவ உறவில் மிக நெருக்கமாக இருப்பதாலும், பிற்காலப்போர்சூழலில் அமெரிக்காவை விட இயற்கையாக   [ மேலும் படிக்க ]

நானும் எனது நண்பன் லியோவும் அண்மையில் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றோம். முள்ளிவாய்க்கால் ஊடகா பேருந்தில் பயணித்திருந்தபொழுதும் அன்றுதான் முள்ளிவாய்க்கால் தெருவில் நடந்தோம். கிளிநொச்சியிலிருந்து பேருந்தில் பயணம் செய்து புதுமாத்தளனில் இறங்கி அங்கு இராணுவம் கைப்பற்றியிருந்த விடுதலைப்புலிகளின் போர்த்தளவாடங்களைப் பார்த்தோம். சிங்களவர்கள் வந்து பார்த்துவிட்டு ஆச்சரியமடையும் அந்தப் போர்த்தளவாடக் கண்காட்சி பெரும் சுற்றுலாத்தளமாகிவிட்டது. அங்கு விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விதவிதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் போர் படகுகளையும் போர் விமானங்களையும் செய்யும் தொழில்நுட்பங்களைப்   [ மேலும் படிக்க ]

‘இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ நலன்கள்’ என்கிற இந்த கட்டுரையானது, இலங்கையில் வசித்தவரும் பிரபல தமிழ் பத்திரிக்கையாளருமான, மறைந்த ‘தராக்கி’ சிவராம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். ஐக்கிய அமெரிக்க அரசு உலக நாடுகள் மத்தியில் ஒரு ராணுவ பொருளாதார வல்லரசாக திகழ்கிறது என்பதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அது உலக புவியியல் பரப்பில் அதனுடைய நலன்கள் வேறு வேறு மாதிரிகளில் வடிவம் கொள்கிறது. இந்து மகாசமுத்திரம் என்ற பெரும்நீர்பரப்பை   [ மேலும் படிக்க ]