Archive for the ‘ஆய்வு கட்டுரைகள்’ Category

கடந்த செப்ரம்பர் மாதம் 22 ஆம் நாள் காச்சல் காரணமாக தமிழகத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபபட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா டிசம்பர் 6 ஆம் நாள் இறந்துள்ளதாக இந்திய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஏறத்தாள 70 இற்கு மேற்பட்ட நாட்கள் அவர் வைத்தியசாலையில் இருந்தபோதும் அதனை இரும்புத்திரை கொண்டு உலகின் பார்வையில் மறைத்த இந்திய பாதூப்பு மையயத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது அவர்கள் மிகப்பெரும் ஒரு அரசியல்   [ மேலும் படிக்க ]

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் விடுதலைக் கோட்பாடுகள் குறித்து விரைவில் வெளியாக இருக்கும் “Velupillai Prabhakaran : Being and Nothingness – (May 18 :Before and After) ” என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் நீண்ட கால தமிழீழ அரசியற் செய்பாட்டாளரும், போருக்கு பின்னான பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவருமான திரு பரணி கிருஸ்ணரஜனியிடம்   [ மேலும் படிக்க ]

அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இனஅழிப்பு அரசின் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ் வன்முறைக் குழுக்கள் தொடர்பான கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியை பலர் புரிந்திருந்தாலும் அது இன்னும் ஆழமாக சென்று அலசப்பட வேண்டிய விடயமாகும்.   நேரடியான இனஅழிப்பு நடந்து முடிந்த தேசங்களில் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள நேரடி உத்திகளை கையாள முடியாத சூழலில் நுட்பமான உத்திகளை இனஅழிப்பு அரசுகள் கவனமாகக் கையாளும். அதற்காக அவர்கள்   [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பொது சந்தை நேற்று எரிந்து வானில் பரவிய புகை மண்டலத்தை இணையத்தில் பார்த்தபோது முள்ளிவாய்க்காலில் இருந்து 2009 மே 18 அன்று மேலெழும்பிய புகைமண்டலத்தை நினைவூட்டியது.   ஏனென்றால் முள்ளிவாய்க்கால் என்பது இனஅழிப்பின் குறியீடு. பேரழிவை சந்தித்து இனஅழிப்பிலிருந்து தம்மை சிறிது சிறிதாக மீட்டெடுக்க – தக்கவைக்க போராடும் தமிழர்களின் பொருண்மிய மையத்தின் ஒரு குறியீடுதான் ‘கிளிநொச்சி பொதுசந்தை’.   இத்கயை ஒரு குறியீட்டு பரிமாணத்தை கொண்ட கிளிநொச்சி   [ மேலும் படிக்க ]

ஈழத்தில் போர் முடிந்து ஏழாண்டுகளாகிவிட்டன. ஆனாலும் சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழின அழிப்பு வேலைகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இதை வெகுமக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் “அறிவாயுதம் – தமிழ்த்தேசிய ஆய்விதழ்” தொடரும் இனப்படுகொலை என்கிற விழிப்பரங்கம் நடத்தியது.   ஆகஸ்ட் 28 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடந்த அந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அதில் எழுத்தாளர் மற்றும் களச்செயற்பாட்டாளரான பூங்குழலி ஆற்றிய   [ மேலும் படிக்க ]

ஐபிசி தமிழ் தொலைக்காட்சி இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் பணியை தனது தாயக நிகழ்ச்சிகளினூடாக திறம்பட நடத்தி வந்ததை அதன் ஆரம்ப காலங்களிலேயே நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இது குறித்து விரிவாக பேச வேண்டிய தேவையை அதன் அண்மைய செயற்பாடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஐபிசி மட்டுமல்ல இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் எந்த ஊடகங்களையோ அமைப்புக்களையோ நாம் தமிழ்ப்பரப்பிற்குள் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது இந்த இனம் தனக்கு தானே தோண்டும் சவக்குழி என்பதை நாம் தனியாகச் சொல்ல   [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியத்தை சிங்களத்திடம் விலைபேசி விற்று, அது வீசும் எலும்புத் துண்டில் வயிறு வளர்க்கும் ரிசி என்ற கே.பியின் கையாளிற்குத் தளம் அமைத்துக் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் வீரியத்தைச் சிதைக்கும் நிகழ்ச்சிகளைக் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒளிபரப்பி வந்த ஐ.பி.சி தொலைக்காட்சி, அவற்றின் உச்சகட்டமாகச் சிங்களப் படையினரைப் புகழ்ந்துரைக்கும் நிகழ்ச்சியை அண்மையில் ஒளிபரப்பியிருக்கின்றது.   யார் நல்லிணக்கம் பேசினாலும், எவர் நடுநிலைவாதம் பற்றி உபதேசங்களைப் புரிந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை   [ மேலும் படிக்க ]

அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின் பையின் உறுதியெடுக்க, அதனைத் தொடர்ந்து, அதன் இராணுவக் கட்டமைப்பென கூறப்படுகின்ற அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA) ) அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான கெரில்லா போராட்டத்தை ஆரம்பித்தது. (அயர்லாந்து தொண்டர்கள் என்ற இராணுவ அமைப்பே 1916 தோல்விக்குப் பின்னர் ஜ.ஆர்.ஏ ஆக மாற்றம் பெற்றதென பரவலாக   [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Féin), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.   இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் சனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது,   [ மேலும் படிக்க ]

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர்.   இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் தலைவர் தமிழினி மற்றும் இனந்தெரியாத நோயினால் இறந்த தமிழரசன் ரோகினி   [ மேலும் படிக்க ]