Archive for the ‘ஆய்வு கட்டுரைகள்’ Category

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன.   பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சிலமணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா   [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய கடற்பரப்பில் இனஅழிப்பிலிருந்து தப்பி தம் உயிரை காக்க போராடும் தமிழ் ஏதிலிகள் விவகாரம் மனதை உலுக்குகின்றது. இது முதற் தடவையல்ல.. பல தடவை இந்த அவலத்திற்கு தமிழர்கள் முகம் கொடுத்தே வந்துள்ளனர்.   பல நூற்றுக்கணக்கனவர்களை நாம் இந்த கடற்பயணங்களின் போது இழக்கவும் நேரிட்டிருக்கிறது.   2009 மே 18 இற்கு பிறகு இந்த அகதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படவேண்டும் என்றும் இவர்கள் அனைவரும் ”இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள்” மற்றும்   [ மேலும் படிக்க ]

தமிழினி எழுதியதாகக் கூறப்படும் நூலை “அவர்தான் எழுதினாரா?” என்ற பகுப்பாய்வை நாம் செய்வதற்கு பதிலாக அவரது மரணத்தை நாம் ஆய்வு செய்வதனூடாக பல உண்மைகளைப் புரிந்து கொள்ளமுடியும்.   இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் படுகொலைசெய்யப்பட்டவர் தமிழினி.   ‘புனர்வாழ்வு ‘ என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும், இறுதி   [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் ரோனி பிளேயர் அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்குள் சிறீலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஒகஸ்ட் 24ம் திகதி சந்தித்த ரோனி பிளேயர், தனது இரண்டாவது பயணத்தின் போது இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களை கடந்த சனவரி 3ம் திகதி சந்தித்துள்ளார்.   சர்வதேச ரீதியில் சிறீலங்கா தொடர்பாக நிலவும் தவறான எண்ணங்களை களைவதற்கு தான் உதவத்   [ மேலும் படிக்க ]

இருபதுபேரோடு 2012 மார்ச் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கற்றலன் தேசியஅவை, ஆறு மாதங்களில் ஒன்றரை மில்லியன் மக்களை ஒரு பேரணியில் ஒருங்கிணைத்தது.   ஏழரைமில்லியன் மக்களைக் கொண்ட கற்றலோனியாவில் ஒன்றரை மில்லியன் மக்கள் 2012 செப்டெம்பர் 11 தமது தேசத்துக்கான சுதந்திரத்தை வேண்டி பேரணியாய் திரண்டார்கள்.   சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும்,   [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார்.   ஆறு தசாப்த காலங்களுக்கு   [ மேலும் படிக்க ]

1. முன்னுரையும் பின்னணியும்   2. திட்மிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் 2.1 சிங்களக் குடியேற்ற உத்திகள்   3. வடமாகாண மீள்கட்டமைப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகள்   4. வடக்கு, கிழக்கு. மலையகப் பகுதிகளில் பெயர் மாற்றங்கள்   5. சிங்களமயமாக்கலுக்கும் இராணுவக் குடியேற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு   6. எல்லைகளை மாற்றி அமைத்தலும் தமிழ் அடையாளங்களை சிதைத்தலும், எஞ்சிய வரலாற்று, பாழடைந்த தொல்பொருட் சின்னங்களைச் சிதைத்தலும் 6.1   [ மேலும் படிக்க ]

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, அண்மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்கப்பட்ட இருவர் மட்டக்களப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட போது, அவர்களை முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்றே பொலிஸ் தரப்பு அடையாளப்படுத்தியிருந்தது.   அதுபோலவே, சிங்கள, ஆங்கில ஊடகங்களும், அவர்களை முன்னாள் விடுதலைப் புலிகளாகவே அடையாளப்படுத்தி செய்திகளை வெளியிட்டன.   ஆனால், பிரதீப் மாஸ்டர், புலிகள் இயக்கத்தில் இருந்து, கருணாவோடு   [ மேலும் படிக்க ]

உள்ளகப் பொறிமுறையென்பது, சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வதற்கான ஒரு பொறியே தவிர, தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பொறிமுறையல்ல என்று கருத்து மேலோங்கி வருகிற சூழலில், ஈழப் போர் நான்கின் இறுதிக் கட்டங்களில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, தமிழ் மக்களுக்கு நீதியைத் தன்னிலும் வழங்குமா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.   இலங்கைத் தீவில் கடந்த சனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, கடந்த   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் நான்கு திசைகளிலும் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்த் தேசியம், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பான உறுதிமொழிகள் அள்ளி வீசப்படுகின்றன.   இந்த நிலையில் ஒரு சம்பவம் தான் என் நினைவில் வருகின்றது. அதாவது 1980 களின் முற்பகுதியில் நல்லூரில் உள்ள வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது அங்கு நவராத்திரி விழாவுக்கு வழை வெட்ட வைத்திருந்த வாளை எடுத்து   [ மேலும் படிக்க ]