Archive for August, 2013

சிறீலங்கா அரசின் இனஅழிப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதி வேண்டியும், தொடர் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்களின் விடுதலைகோரியும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மேற்கோண்டுவரும் போராட்டத்தின் ஒரு பலனாகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்களின் சிறீலங்காவுக்கான பயணம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் செறிந்துவாழும் மற்றும் சிறீலங்கா அரசின் கொடூரமான இனஅழிப்புக்கு உள்ளாக வடபகுதிக்கு சென்ற அவர், சாட்சிகள் அற்ற   [ மேலும் படிக்க ]

திருமலைப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஒரு மனுவை சர்வதேச மன்னிப்புச் சபைசமர்ப்பித்துள்ளது. இந்த உலகில் வாழும் எவரும் இதில் கையெழுத்திடலாம். நவநீதம் பிள்ளை அம்மையார் சிறீலங்காவில் நிற்கும் வேளை இந்த மனு சமர்பிக்கப்பட வேண்டும். 10 ஆயிரம் கையெழுத்துக்கள் தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. இதுவரை கிடைத்தது 6488 கையெழுத்துக்கள். இணைப்பு:- http://campaigns.amnesty.org/actions/demand-truth-from-sri-lanka-president  

“இலக்கிய சந்திப்பு” என்ற போர்வையில் அண்மையில் யாழப்பாணத்தில் நடந்த இனஅழிப்பு அரசின் கைக்கூலிகளின் சந்திப்பு குறித்து தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபல இலக்கிய சமூக ஏடான “உயிர்மை” இற்கு தாயகத்திலிருந்து தீபச்செல்வன் எழுதிய பதிவு இது. நடந்த – நடக்கும் இன அழிப்பிற்கு வெள்ளையடிக்கும் இந்த கைக்கூலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். இலக்கியச் சந்திப்பின் அரசியல் – ஈழத்திலிருந்து ஒரு கண்டனக் குரல் “வெளிநாட்டிலிருந்து வந்து இலக்கியச்சந்திப்பெல்லாம் நடத்துறாங்களே   [ மேலும் படிக்க ]

உலகெங்கும் பரந்து வாழும் பத்துக் கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்களில், தமிழகம் ஏறத்தாள ஏழு கோடி மக்களைக் கொண்டுள்ளது. சிங்கள அரசின் இனஒடுக்கு முறைகளில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக போராடும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தமிழகத்தின் ஆதரவு மிக மிக அவசியமானது. தனக்கு சார்பான பௌத்த நாடுகளை ஒருங்கிணைத்து தமிழ் மக்கள் மீது ஒரு முழு அளவின இனஅழிப்பை சிறீலங்கா அரசு முனைப்பாக முன்னெடுக்கும் போது அதனை முறியடிப்பதற்கு ஈழத்தமிழ்   [ மேலும் படிக்க ]

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களை விடுவிக்க கோரியும், இராணுவத்தினராலும், அரசினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலங்கள், கிராமங்கள், வீடுகளை விடுவிக்கவும் தடுத்து நிறுத்தக் கோரியும் யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மேற்படி   [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஒரு வார கால பயணம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் நிலைமை குறித்து ஆராய்வதற்காக நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் நேற்று தலைநகர் கொழும்பில் முகாமிட்டு தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். தலைநகர் கொழும்பில் மட்டுமல்லாது தமிழர் வாழும் வடக்கு மற்றும்   [ மேலும் படிக்க ]

இன்னும் ஒரு மாதத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. கூட்டமைப்பும் களத்தில் நிற்கிறது. தமிழ்த்தேசியத் தளத்தில் நின்று பலதரப்பாலும் முன்வைக்கப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையையும் அல்லது அதில் பங்கு பற்றுவதற்கான முன் நிபந்தனைகளையும் புறம்தள்ளிவிட்டு கூட்டமைப்பு தன்னிச்சையாக இயங்கும் இந்த சூழலில் கூட்டமைப்பு தமது தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் – தேர்தல் விஞ்ஞாபனத்திலாவது தாயக கோட்பாட்டை சிதைக்காததும் நடந்த இன அழிப்பிற்கு அனைத்துலக விசாரணையை கோரும்   [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக் வருமாறு: நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்புவிடுக்கின்றோம். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையில் 27-08-2013 அன்று காணாமல் போனோரை கண்டறியும்   [ மேலும் படிக்க ]

பேரன்புக்குரியோரே வணக்கம். 26-08-2011 எமது சாவுக்கான தேதி குறிக்கப்பட்டு ஓலை (Black Warrant ) வழங்கப்பட்ட நாள். 30-08-2011 சென்னை உயர்நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடையாணை வழங்கிய நாள் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முன்மொழிவால் தண்டனை குறைப்பிற்கு ஒருமனதாக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள். இடைப்பட்ட 5 நாட்கள் உணர்சிகரமான போராட்டங்களும், உள்ளம் நெகிழும் வேண்டுதல்களும், வாழ்வில் என்றுமே ஈடு செய்யமுடியாத தியாகங்களும், சொற்களால் விவரிக்கமுடியாத உணர்வுகளும்   [ மேலும் படிக்க ]

எப்போது பார்த்தாலும், இந்தியா -சீனா ,விடுதலைப்புலிகள், இந்துசமுத்திரப் பிராந்தியம், மகிந்தா- பசில் என்று எழுதிக்கொண்டிருக்கிறார், பொருளாதாரம் பற்றியும் எழுதுகின்றார், சமூக வாழ்வின் பக்கங்கள் குறித்து எழுதுவதில்லை என்கிற ஆதங்கம் பலரிடம் உண்டு. அரசியல் கலவாத காற்றுவெளி இல்லை. அது சில இடங்களில் மேற்பரப்பில் துருத்திக்கொண்டு நிற்கும். அநேகமான துறைகளில் அடியில் ஒளிந்திருந்து எல்லாவற்றையும் இயக்கும். இப்போது அன்றாட வாழ்வுச் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பொதுமையான ஒருசில விடயங்களைப் பார்ப்போம். சராசரி   [ மேலும் படிக்க ]