Archive for September, 2013

நான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து விவகியதும் இத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியதும் சிலரால் தவறாகவே பார்க்கப்படுகின்றது. கூட்மைப்பை இவ்வளவு காலமும் விமர்சித்துவிட்டு இப்போது கூட்டமைப்பில் சேர்ந்து விட்டார் என்றும், மாகாண சபை முறையை இவ்வளவு காலமும் எதிர்த்துவிட்டு இப்போது ஏற்றுக்கொண்டவிட்டார் என்றெல்லாம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது 1987ல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை என்பன தமிழ் மக்களின் விருப்பமின்றி   [ மேலும் படிக்க ]

மேற்கு ஹரோவிற்கான (Harrow West) தொழில்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னை நாள் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சருமான, கரெத் தொமஸ் (Gareth Thomas) அவர்களுடனான, அத்தொகுதி தமிழ்மக்களின் சந்திப்பின் போது, CHOGM மாநாட்டில், பிரதமர் கமரூன் மற்றும் இளவரசர் சார்ல்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்றும்,மேலும் இம்மாநாட்டில் பிரித்தானிய சார்பில் எந்தவிதமான பிரதிநித்துவம் இருக்கக் கூடாதென்றும் 300ற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன், இலங்கை தொடர்பான பல பிரச்சனைகள் சந்திப்பில்   [ மேலும் படிக்க ]

எந்தவொரு சக்தியையும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்த முடியும், அதற்கு மிகவும் பொருத்தமானது அணுசக்தியே. திணிவை சக்தியாக மாற்ற முடியும் என அணுவிஞ்ஞானி அயன்ஸ்ரீன் தெரிவித்தபோது அதனை முதன் முதலாக தான் தேடிவந்த மிகச்சிறந்த ஆயுதத்திற்கு பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. அதன் விளைவுகளை நாம் ஹிரோசிமாக மற்றும் நாகசாகியின் அழிவுகளில் கண்டோம். அதன் பின்னர் அணுசக்தியை மின்சார உற்பத்திக்கு உலகம் பயன்படுத்திக் கொண்டாலும், அதனைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுதம் தொடர்பில் உலகம்   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கருத்தில் எடுக்காது சிறீலங்கா அரசுக்கு சார்பாக செயற்படும் இந்தியாவை சேர்ந்த, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிறீலங்கா அரசு மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்மா மௌனம் சாதிப்பது மிகவும் வெக்கப்பட வேண்டிய விடயம் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும்   [ மேலும் படிக்க ]

இதற்கு மேலும் ஜெயா கடிதம் எழுவது தமிழர்களை ஏமாற்ற மட்டுமே உதவும். மீனவர்களை பாதுகாக்க தமிழக கடற்படையை உருவாக்குவேன் என்று ஜெயா கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று ? தமிழர்களை குறித்து உண்மையான அக்கறை ஜெயாவிற்கு இருந்தால் இப்படி கடிதம் எழுதிக் கொண்டே இருப்பாரா ? என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த   [ மேலும் படிக்க ]

இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார். வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.   [ மேலும் படிக்க ]

இலங்கை உள்நாட்டு போர் தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு இலங்கை உட்படுத்தப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை எச்சரித்துள்ளார். கடந்த மாதம் ஆகஸ்ட்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கைக்கு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரது சார்பில், மனித   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வேளை மாணவர் பொது அறையில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கு தியாகி திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 26 வருடங்களுக்கு முன்னர் திலீபன் உயிர்நீத்த இதே நாளன்று 10.48 மணிக்கு மாணவர்கள்   [ மேலும் படிக்க ]

ஐ. நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது இலங்கை விஜயம் தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில் சமர்ப்பித்துள்ள வாய் மூல அறிக்கையில் மக்களின் சகஜநிலையை பாதிக்கும் காரணிகள் விரைவாக நிவர்த்தி செய்யப்படாதவிடத்து அவை எதிர்கால முரண்பாட்டுக்கான விதைகளாக அமையும் என்று எச்சரித்துள்ளதோடு இலங்கயின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகள் கடந்துள்ள   [ மேலும் படிக்க ]

இந்த மாதம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் அதேசமயம் சிறீலங்காவில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கக்கோரி தமிழ் மக்கள் தமது போராட்டங்களை ஐ.நா அலுவலகத்தின் முன்னிலையில் ஆரம்பித்துள்ளனர். சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று மனிதநேயச் செயற்பாட்டாளர் லோகநாதன் என்பவரால் ஐ.நா முன்றலில் நடத்தப்பட்டுவருகின்றது. அது   [ மேலும் படிக்க ]