Archive for October, 2013

ஒரு வருடத்துக்கு மேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த, தம்புள்ளை அம்மன் ஆலயத்தை இறுதியாக பாதுகாப்பு தரப்பினரே பின்னணியில் இருந்து உடைத்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்கள் என ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடு முழுக்க இப்போது நகர அமைப்பு கட்டுமான வேலைகளை செய்து வரும் பாதுகாப்பு தரப்பினரே, கட்டிடங்களை உடைக்கும் பாரிய இயந்திரங்களை பாவித்து இந்த பாவ காரியத்தை செய்து முடித்துள்ளனர். உலகின் கவனத்தை இலங்கை மீது திருப்பியுள்ள   [ மேலும் படிக்க ]

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தென்னிலங்கையில் தீவிரமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கொழும்புக்கு வரும் பயணிகள் விமானங்களை மாத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திசை திருப்பிவிடலாமா என்கிற யோசனை கூட முன்வைக்கப்பட்டதாம். 253 பில்லியன் ரூபாயை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்க முயல்வது சரியென்று நியாயப்படுத்தும் வகையில் , நகரின் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, நவம்பர் 17,18 களில் நடைபெறவுள்ள இம்மாநாட்டினால் பெரும் இராஜதந்திரச் சிக்கலில் மாட்டுப்பட்டுள்ள நாடுகள்   [ மேலும் படிக்க ]

கடந்த சில நாட்களாக வலிகாமம் வடக்கிலுள்ள சட்டவிரோத உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகளை மீண்டும் இராணுவத்தினர் இடித்து அழித்து வருவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தது. இன்றைய தினம் அங்கு நிலைமைகளை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் கடுமையாக அச்சுறுத்தபட்டதுடன் அவர்களது புகைப்படக் கருவிகளும் பறித்து அதிலிருந்த புகைப்படங்களையும் அழித்துள்ளனர். இத்தகைய செயற்பாடுகள் இலங்கை அரசின் சொந்த சட்ட ஆட்சியையே கேலிக்கூத்தாக்குவதுடன், மனித உரிமை மீறல்   [ மேலும் படிக்க ]

வடமாகாணசபை தேர்தல் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடைபெற்று முடிந்துள்ளது. சிறீலங்கா அரசின் ஆயுதக்குழுக்களையும், சிறீலங்கா அரசையும் புறம்தள்ளிய தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமத்தின் கீழ் போட்டியிட்ட தமிழர் தரப்பை வெற்றியடையச் செய்துள்ளனர். வடமாகாணசபைத் தேர்தலின் முடிவு என்பது சிறீலங்காவில் முனைவாக்கம் வலுவடைந்துவரும் இரு இனங்களின் அளவை காட்டிநிற்கின்றது. நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை, இனங்களுக்கு இடையிலான இணக்கப்பாடுகள் என தமது ஏமாற்றும் உத்திகளை தமிழ்   [ மேலும் படிக்க ]

அன்பான தமிழீழ மக்களே! பிரான்சு நாட்டின் மனிதநேய அமைப்புகளினதும், விடுதலை அமைப்புகளினதும் அரசியல் இராஐதந்திரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய எங்கள் மாவீரன் கேணல்பரிதி அவர்களின் ஓராண்டு நினைவாக 08.11.2013 அன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் நீதி மன்றத்திற்கு அண்மையிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான சென்மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள எமது பேரணி ஊர்வலம் பிரதான வழியினூடாகச் சென்று பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நிறைவடையும்.   [ மேலும் படிக்க ]

கடந்த 24-10-2013 திகதியன்று தமிழ் நாடு சட்டசபையில் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கொமென்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இந்தியப் பிரதமர் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கேனும் அம்மாநாட்டில் அமையக்கூடாதென்றும், அத்துடன் தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களவர்களுக்கு இணையாகவும் இலங்கையில் வாழக்கூடிய சூழலை சிறீலங்கா அரசு உருவாக்கும் வரையில் கொமென்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கை தற்காலிகமாக நீக்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ் நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.   [ மேலும் படிக்க ]

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொலை செய்துவிடுமாறு விடுக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றியிருந்தால், வவுனியா சிறையில் காவலர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருக்காது என மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே தெரிவித்ததாக லங்கா நியூஸ் வெப் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த 2012 யூன் மாதம் வவுனியாவில் சிறைக் காவலர்கள் மூவரைப் பிடித்துவைத்து தமிழ் அரசியல் கைதிகள்   [ மேலும் படிக்க ]

வடமாகாண தேர்தலுக்குப்பின் வடக்கைப் பொறுத்தவரை மக்களின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மாவீரர்கள் மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக மக்கள் திடுக்கிட்டு விழித்ததைப்போல் விழித்திருக்கிறார்கள். தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இல்லாது செய்யபட்டபின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிழலில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில்நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தலை மக்கள் சந்தித்திருந்தாலும் வடமாகாணத் தேர்தல் என்பது வடக்கைப்பொறுத்தவரை மக்களை உசாரடையச்செய்திருக்கிறது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நரித்தனமான அரசியல் இதுவரைகாலமும்   [ மேலும் படிக்க ]

இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி   [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத் தீர்மானத்தை திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன.தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதை ஏற்று தமிழக சட்டசபையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா   [ மேலும் படிக்க ]