Archive for October, 2013

தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில்… பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும், சிறப்பையும் சேர்த்துள்ளார். இவர் கடந்த வருடமே பல தடவைகள் இதே போன்ற தபால்த் தலை வெளியிட பல தரப்பட்ட முயற்சிகள் எடுத்த போதிலும், அந்த நாடு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வெளியிட்டே தீர வேண்டும் என்ற வெறியுடன் பல கடினமான முயற்சிகளோடு   [ மேலும் படிக்க ]

தமிழினப் படுகொலை குற்றவாளி இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தத் துடிக்கும் இங்கிலாந்து இந்திய கூட்டுக்களவாணிகளின் தூதரகங்களை முற்றுகையிடும் மே 17 இயக்கத்தின் போராட்டம் . நாள் : அக்டோபர் 25 நேரம் : காலை 10 மணி இடம் : சாஸ்த்ரிபவன் சென்னை. இதனிடையே, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்ல்வெத் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று   [ மேலும் படிக்க ]

நாம்தமிழர் கட்சியால் மதுரை கடவுசீட்டு அலுவலகம் முற்றுகை போராட்டம்! பொதுநலவாய அமைப்பிலிருந்து இனப்படுகொலை நாடான சிறீலங்காவை நீக்க வலியுறுத்தி — நடுவண் அரசால் நடத்தப்படும் கடவு சீட்டு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 21 10 2013நடைபெற்றது. பொதுநலவாய அமைப்பிலிருந்து இனப்படுகொலை நாடான சிறீலங்காவை நீக்க வலியுறுத்தி – மதுரை நடுவண் அரசால் நடத்தப்படும் கடவு சீட்டு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நாம்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன்   [ மேலும் படிக்க ]

2009 தமிழின இன அழிப்பில் ஐநாவின் கட்டமைப்பு ரீதியான தோல்வி குறித்த இறுதி அறிக்கையை INNERCITY PRESS கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஐநா செயலர்Ban ki Moon ஐநா வின் பிரதி பொது செயலாளர் Jan Eliasson கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பிலிருந்து இது குறித்து எந்த கருத்துக்களையும் கண்டனங்களையும் காண முடியவில்லை. ஒரு இன   [ மேலும் படிக்க ]

‘புலிகள் அரசியலின் தொடர்ச்சி’, ‘உணர்ச்சி வயப்பட்ட அரசியல்’ என்கிற சொல்லாடல்கள், எதற்காக இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது?. அது மட்டுமல்லாது ‘பூகோள அரசியல்’, ‘பிராந்திய அரசியலில் சீனாவின் ஆதிக்கம்’ போன்ற பெரிய விடயங்களும் இதனோடு இணைத்தே பேசப்படுகிறது. இந்த இரண்டு உள்- வெளி அரசியலுக்கிடையே, பொருத்தப்பாடான நுண்ணரசியல் அநேகமாகக் காணப்படுவதில்லை. இழுத்து வந்து உட்கார வைத்த ‘செருகல்’ போன்றே காட்சியளிக்கின்றது. பொதுவாக, விடுதலைப்புலிகளின் அரசியல் மீதான மேம்போக்கான விமர்சனங்கள் இறுதிப்பகுதிவரை ஆக்கிரமித்து,   [ மேலும் படிக்க ]

“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் உரை! தமிழின உணர்வாளர்களுக்கு நாமக்கல் பகுதியில் துணை நின்ற திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் – திருச்செங்கோடு சாலை – சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு   [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இலங்கையில் தமிழ்ச் சமுதாயத்தினருக்கு உரிய உரிமைகள் மீண்டும் கிடைத்திட தூதரக ரீதியில் வலிமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக தங்களுக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று கடிதம் எழுதிருந்தேன். மேலும், கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவும்   [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆட்சிக்கு வரும் அனைத்து சிங்கள அரசுகளும் இடைவிடாமல் பல வழிமுறைகளில் ஈழ தமிழர்களின் மீதான இனப்படுகொலையை முன்னெடுத்து வருகிறார்கள். இதை உலகம் கண்டும் காணாதமாதிரி நடந்து கொள்கிறது. பொதுநலவாய மாநாடு அடுத்த மாதம் நடக்க இலங்கையில் இருக்கிறது. இது இலங்கையில் நடப்பதினால், தமிழர்களின் மீதான இனப்படுகொலை மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழ தமிழர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். கனடா இந்த   [ மேலும் படிக்க ]

கனடா உறங்கா விழிகள் அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (2013.10.13) கலை 10.30 மணியளவில் இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு த.தே.ம.மு வின் கல்விமேம்பாட்டுப் பிரிவுப் பொறுப்பாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு.செல்வராசா இரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் பிரதம   [ மேலும் படிக்க ]

சிங்கள பேரினவாத வெறியும் அரச பயங்கரவாதமும் ஈழத்தமிழினத்தைத் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு ஆளாக்கி வருகின்றது. கொலை, பாலியல் வன்முறை, தமிழர் பிரதேச அபிவிருத்திப் புறக்கணிப்பு, தமிழர் பிரதேச வலிந்த சிங்கள குடியேற்றம், தமிழ் கிராமங்களுக்கு தொடர் சிங்களப் பெயர் சூட்டல், என இனப்படுகொலை பல ரூபங்களில் கொடூர தாண்டவமாடுகின்றது. இக்கொடூரம் ஈழத்தமிழினத்தையும் தாண்டி சுற்றுலாப்பயணியாக ஸ்ரீலங்கா சென்ற பிரித்தானியர் ஒருவரைப் படுகொலை செய்ததுடன், அவருடன் சென்ற சினேகிதியையும் பாலியல் வன்செயலுக்குட்படுத்திய சம்பவம்   [ மேலும் படிக்க ]