Archive for October, 2013

கனடாவைப் போல இந்தியாவும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேணடும் என்று சரத்குமார் கூறியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. இதை உணர்ந்த அனைத்து நாடுகளும்   [ மேலும் படிக்க ]

விக்கினேஸ்வரனின் பதவியேற்பு நிகழ்வு ஒரு அபத்த நாடகமாக அரங்கேறியிருப்பதுடன் ஒரு இனத்தின் கூட்டு கோபத்தையும் கிளறி விட்டிருக்கிறது. இந்த மகாணசபையில் ஒன்றுமே இல்லை என்று தெரிந்தும் தமிழர் தரப்பை அதன் பின் இழுபட வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தனது முயற்சியில் சிங்களம் இந்த பதவியேற்பு நிகழ்வுடன் உச்ச வெற்றியை பெற்றிருக்கிறது. குறியீட்டு ரீதியாகவே விக்கினேஸ்வரன் முதலமைச்சராக ஒரு அபத்தமானது மட்டுமல்ல ஆபத்துமான ஒரு தெரிவு. இன அழிப்பு நடந்து   [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்கு தீர்வு என்பது கிட்டாது என்பது தெரிந்தாலும், ஒன்றும் இல்லாவிட்டாலும் அதைக்கொண்டாவது ஏதாவது செய்ய முடியாதா என்ற நப்பாசையில் தமிழர்கள் அனைவரும் ஒரணியில் நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைத்தோம். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை விடுத்து தமிழர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார்கள். ஐயா சம்பந்தன் அவர்களே, ஐயா விக்னேஸ்வரன் அவர்களே… தமிழீழ   [ மேலும் படிக்க ]

உலகின் வல்லமை பொருந்திய நாடுகளின் (Superpower) அணியில் (Elite club) இடம்பெறவேண்டுமாயின் அந்த நாட்டிடம் குறைந்த பட்சம் விமானந்தாங்கி கப்பல் இருக்க வேண்டும். உக்கிரைன் நாட்டின் பழைய விமானந்தாங்கி கப்பல் ஒன்றை கொள்வனவு செய்த சீனா அதனை நவீனமயப்படுத்தி தனது கடற்படையுடன் இணைத்து ஆழ்கடல் (blue water navy) நடவடிக்கையில் தனது கடற்படையையும் இணைத்துள்ளது. ஆழ்கடல் நடவடிக்கை என்பது கரையில் உள்ள தமது தளங்களில் இருந்து பல ஆயிரம் கடல்   [ மேலும் படிக்க ]

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கூட்டுச் சதியால் படுகொலை செய்ய முனைந்த பொழுது, கொள்கை வலி நின்று நஞ்சருந்தி வீரச்சாவடைந்த மூத்த தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவு தொடர்பான உண்மைகளை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட ஒரு ஆக்கம் இது! திலீபனின் உயிரிழப்பு விடுதலைப் புலிகளிடத்தும், யாழ் மக்களிடத்தும் மாறாத சோகத்தை ஏற்படுத்தியருந்த நிலையில், இவ்வியக்கம் அடுத்ததொரு சோகத்தையும் சந்திக்க நேர்ந்தது. கசப்பு மருந்தாக இடைக்கால நிர்வாக சபைத் தலைவர்   [ மேலும் படிக்க ]

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தாய்குலத்தை மானபங்கப்படுத்திய மகிந்த ராஜபக்ச முன் விக்னேஸ்வரன் சத்திய பிரமாணம் எடுப்பது, ஜனாதிபதியை போர்க்குற்றங்களில் இருந்து தப்புவிக்கும் நடவடிக்கை என்று புலம் பெயர் தமிழ்மக்களின் அமெரிக்கா அமைப்பான ஒபாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. சத்தியப்பிரமாணம் எடுக்கும்; திங்கள் கிழமையை துக்க நாளாக அனுஸ்டிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு ஆமோக ஆதரவு அளித்து வெற்றி வெறச் செய்தது, ஜனாதிபதியை குற்றவாளிக்கூண்டில்   [ மேலும் படிக்க ]

சமஷ்டி நிர்வாகத்தின் அரைவாசிப் பகுதியை மூடிவிட்டு, தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் அமெரிக்க அதிபர் சொன்ன செய்திதான் இக்கட்டுரையின் தலைப்பு. அமெரிக்க அரசின் பெருமளவிலான நிர்வாகத்திற்கு காலவரையறையற்ற விடுமுறை. சுமார் எட்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு. பனிப்பொழிவுக் காலம் வருமுன், மியாமி கடற்கரைக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்ளச் சொல்லும் வசந்த அழைப்பு அல்ல இது. அமெரிக்காவின் நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லை (Debt ceiling)74 வது தடைவையாக மீறப்படுகிறது. அதனால் உருவான   [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கு எதிரான சிறீலங்காவின் நடவடிக்கைகள் உலகம் எங்கும் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. அதன் ஒரு அங்கமாக நேபாளின் தலைநகர் காத்மண்டுவில் நடந்துவரும் தெற்காசிய ஆவணப்படக்கண்காட்சியில் திரையிடப்படவிருந்த இலங்கையைப் பற்றிய 3 குறும்படங்கள் கண்காட்சியிலிருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளன. கண்ணன் அருணாச்சலத்தின் ‘புரோக்கன்’, ‘தி ஸ்டோரி ஆப் ஒன்’ ஆகிய இரண்டு படங்களும், இலங்கை படையினர் போர் குற்றங்களைச் செய்த்தாக குற்றம் சாட்டும் கல்லம் மெக்ரேவின் ‘நோ பயர்   [ மேலும் படிக்க ]

அரசின் மீதான வெறுப்பினைக் கொட்டித்தீர்த்து விட்டார்கள் வடக்கு வாக்காளப்பெருமக்கள். ஏறத்தாள 85 சதவீத வாக்குகள் என்பது, பேரழிவின் பின்னான 4 வருடங்களில் தமிழ் மக்களின் மனங்களில் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அரசு மேற்கொள்ளும் அபிவிருத்திகள், இழப்பினால் வந்த இரணங்களை ஆற்றாது. கம்பள நெடுஞ்சாலைகள் யாவும் அந்நியமான கோடுகளாக வாழ்விழந்த மனிதருக்குத் தெரியும். தமிழ் மக்களின் கூட்டுமன உளவியலில் குவிந்திருந்த எதிர்ப்பரசியலின் உச்சத்தை மாகாணசபைத் தேர்தல் ஆழமாகப் பதிவு   [ மேலும் படிக்க ]

தமிழீழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, அவ்வாறு நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை, சென்னை உயர்நீதிமன்ற அனுமதியோடு 01.10.2013 அன்று மாலை முதல் தொடங்கியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்று(03.10.2013)   [ மேலும் படிக்க ]