Archive for December, 2013

ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரை:- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் பேருவகை அடைகின்றேன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபகார்த்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் எவ்வாறு தனது இயலாமையை இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே எடுத்தியம்புகிறானோ அவ்வாறு நானும் இப்பேருரையை ஆற்ற அரசியலில் பழுத்த பேராசான்கள்   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலை என்பது களம், புலம், தமிழகம் என்று மூன்று தளங்களில் தங்கியிருக்கும் ஒரு அம்சம். அதுவும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்களுக்கு பிறகு தமிழகம்தான் ஏனைய இரு தளங்களுடனும் ஒப்பிடும்பொழுது பெரும் சுமையை தாங்கி நிற்கிறது. சட்டமன்ற தீர்மானங்கள், மாணவர் – மக்கள் போராட்டங்கள் என்று தமிழீழ விடுதலை சார்ந்து பிராந்திய அரசியலில் குறிப்பிடத்தகுந்தளவு சாதனைகளை நிகழ்த்தியதும் – நிகழ்த்திக்கொண்டிருப்பதும் தமிழகம்தான். களத்தில் எமது போரட்டத்தை முறியடித்த எதிரிகள் மே 18   [ மேலும் படிக்க ]

புதிய வருடம் பிறப்பதற்குமுன்பு, டிசம்பர் கடைசி வாரம் ஒவ்வொரு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் என அணைத்துநிறுவனங்களும் அந்த வருடத்தின் நிகழ்வுகளை தொகுத்து வெளியீடும் மற்றும் சில நிறுவனங்கள்சிறந்த செயல் புரிந்தவர்களுக்கு விருது அளிக்கும். ஆனந்த விகடன் தமிழில் முன்னனியில்இருக்கின்ற வெகுசன வார இதழ் என்பதை நாம் அறிவோம். ஆனந்த விகடன் பத்திரிக்கையும் வருடஇறுதில் விருது பட்டியல், வருடத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்த பட்டியல் வெளியீடும்.தமிழ் சூழலில் பரவலாக ஏற்றுகொள்ளப்படும் உண்மையான   [ மேலும் படிக்க ]

01. மட்டக்களப்பில் பாம்பு தீண்டி 12 வயதுச் சிறுவன் மரணம் 02. திருகோணமலையில் மர்மப்பொருள் வெடித்து சிறுவன் பலி 03. யாழ். அராலியில் 11 நாள் குழந்தையை அந்தரிக்கவிட்டு இளம் தாய் சுருக்கிட்டு தற்கொலை! 04. மன்னாரில் மலேரியா தாக்கத்தினால் இளம் தாய் பலி இது இன்று கண்ணில்பட்ட மரணங்கள் இப்பதானே விடிஞ்சிருக்கு.. ஒரு நாள் 10 பேர் என்ற கணக்கிற்கு ஏற்றவாறு இரவுக்குள் மிச்ச மரணங்களும் வந்து சேர்ந்துவிடும்.   [ மேலும் படிக்க ]

ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து 1987ஆம் ஆண்டு வரை அந்த போராட்டத்திற்கும், போராளிகளுக்கும் இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பணம், ஆயுதம், அரசியற்குரல், பயிற்சி, பயிற்சி இடம் போன்ற எல்லா உதவிகளையும் செய்து வந்தன. தமிழ் நாடு அரசு உத்தியோகபூர்வமாக அப்போதே ஐந்து கோடி ரூபாய் விவிடுதலைப் புலிகளுக்கு கொடுத்தது. தமிழ்நாட்டு மக்கள் ஈழப்போராளிகளை போற்றிக் கொண்டாடிய காலம் அதுவாகும். நளினி சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு சாதரண   [ மேலும் படிக்க ]

எப்படி தமிழகம் தமிழர்களுக்குச் சொந்தமானதோ அப்படியே ஈழம் ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்று தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இந்தியாவின் மூத்த மொழியியல் மற்றும் ஆய்வுப் பேராசிரியருமான பொற்கோ ஈழத்தில் மீண்டும் எழுச்சி ஏற்படும் என்றும் பேசியுள்ளார். சென்னையில் தமிழ் நாடு அரசின் உலகத்தமிராய்ச்சி நிறுவனம் ‘அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம்’ என்ற மாநாட்டை அண்மையில் நடத்தியது. இந்த மாநாட்டில் உலகெங்கும் உள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.   [ மேலும் படிக்க ]

கவிஞர் ஜெயபாலன் “கைதின்” போது எழுதியது இது. தற்போது மகாபிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளதால் சில திருத்தங்களுடன்… மே 18 இற்கு பிறகு இலங்கைக்கு செல்வதற்கு என்று சில நிபந்தனைகள் இருக்கின்றன. தமிழர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் இது பொருந்தும். முதலில் வெனிநாட்டவர்களுக்கு வருவோம். ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் பலருக்கு இலங்கைக்குள் நுழைய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மீறி வேறு வகையில் நுழைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பொதுநலவாய மாநாட்டு தருணத்தில்   [ மேலும் படிக்க ]

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,வணக்கம். சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற,தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை,உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை   [ மேலும் படிக்க ]

தமிழகத்திலிருந்து சென்ற வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கிளிநொச்சியில் வைத்து படையினரால் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில் கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் தம்முடன் குறித்த தமிழக பத்திரிகையாளரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.செல்லும் வழியில் சேதமடைந்து குன்றும் குழியுமாக இருந்த வீதியின் மோசமான   [ மேலும் படிக்க ]

மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். திருக்கேதீஸ்வரம் பகுதியில், நீர் விநியோக குழாய் பதிப்பதற்காக குழி தோண்டிய போது, கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் புதைகுழி கண்டுபிக்கப்பட்டது. இதையடுத்து மன்னார் நீதிவான் முன்னிலையில் அந்தப் பகுதியைத் தோண்டிய போது, இதுவரை 10 மனித சடல எச்சங்களும், மண்டையோடுகளும் மீட்கப்பட்டன.   [ மேலும் படிக்க ]