Archive for January, 2014

இது சென்ற வருடம் நக்கீரன் இதழில் வெளியாகிய அட்டைப்படம், ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் இந்த அட்டைப் படத்தில் உள்ள தலைப்புச் செய்தி பொருத்தமாகவே உள்ளது. மகிந்த, அவரது துணைவியார், அவரது அமைச்சர்கள் என்று அனைவரும் பல நாடுகளுக்குப் பறந்துகொண்டு இருக்கிறார்கள் ஐநாவில் தங்களுக்கு எதிரான தீர்மானத்தை தோல்வியடையச் செய்வதற்கான ஆதரவினை பெறுவதற்காக. பீரிஸ் வழமை போன்றே இனப்படுகொலைப் பங்காளிகளான காங்கிரஸின் ஆதரவினை நாடிச் சென்றிருக்கிறார். பிரித்தானிய பிரதமர் டேவிட்   [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மகிழடித்தீவு இறால் பண்ணைப் படுகொலை நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணையில் 133 தமிழர்கள் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நகருக்கு மேற்கே உள்ள 6கிராமங்களை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினர் தரை மற்றும் வான்வழியாக நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி 28ஆம் திகதி ஆரம்பமான இத்தாக்குதல் மூன்று நாட்களாக   [ மேலும் படிக்க ]

பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவும், இணைந்து எதிர்வரும் 31ம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்திலும், பெப்ரவரி 1ம் திகதி, UCL பல்கலைகழகத்தின் Kennedy Lecture Theatre லும், தமிழர் தாயக பிரதேசங்களில், இனவாத சிங்கள அரசுகளால் கடந்த 60 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பாக மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளனர், இவ் மாநாட்டில் பல சர்வதேச ஊடகங்கள் கலந்து கொள்ளவிருப்பதால், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும்   [ மேலும் படிக்க ]

வெறி பிடித்த சிங்கள அரசு நிகழ்த்திய ஈழப் படுகொலைகளையும் இனவெறிக் கொடூரங்களையும் உலகமே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த நிலையில், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி ரத்தமும் சதையுமான தனது உடலை தீக்குத் தின்னக் கொடுத்துப் போராடியவன் தம்பி கொலுவைநல்லூர் கு.முத்துக்குமார் என நாம்தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். தியாகி முத்துக்குமாரின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சாலச் சிறந்த பேரறிவாளனாக, பெருங்கனவு கொண்டவனாக, அரசியல்   [ மேலும் படிக்க ]

காலம் காலமாக திட்டமிட்ட வகையில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமிழீழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது உயிரினும் மேலான தாயக மண்ணை மீட்டெடுப்பதற்காகவும் தணியாத தமிழீழத் தாகத்துடன் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு   [ மேலும் படிக்க ]

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து 19 பேர் தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும்   [ மேலும் படிக்க ]

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது   [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் நேர்காணல் ஒன்று நேற்றைய இந்து பதிப்பில் வெளிவந்திருக்கிறது. வரிக்கு வரி அபத்தம் மட்டுமல்ல பல ஆபத்துக்களும் நிறைந்த நேர்காணல் அது. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. சம்பந்தர் எதிர்ப்பு அரசியல் குறித்தும் தமிழர்கள் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். இந்த நேர்காணலுக்கு எதிர்வினையாற்றுவதென்றால் இந்த ஜென்மம் முழுக்க எழுதினாலும் எழுதித் தீராது. நாங்களும் மே 18 இற்கு பிறகு சம்பந்தர் குறித்து   [ மேலும் படிக்க ]

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும் இதனை சர்வதேச விசாரணையின் மூலம் அனைத்துலக சமூகம் வெளிப்படுத்த முன்வர வேண்டும் இலங்கையின் வடமாகாண சபை கோரியிருக்கிறது. திங்கட்கிழமை நடந்த இலங்கை வட மாகாண சபைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்றை சபை நிறைவேற்றியிருக்கிறது. இலங்கையில் நடைபெற்று முடிந்த படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு இலங்கை அரசின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்ற அதேவேளை சர்வதேச சமூகத்தின் பங்களிப்பின்றி நீதியோ அல்லது   [ மேலும் படிக்க ]

“காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின் உறவுகளால் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தான் தொடர்ந்து பலரும் வற்புறுத்தியும் வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் வடமகாணசபை உறுப்பினரான அனந்தி எழிலன் அவர்கள் “காணாமல் போயுள்ளவர்களின் பிரச்சனைக்கு உள்ளூரிலேயே தீர்வு காண வேண்டும்” என்று சாட்சியமளித்துள்ளதாக பிபிசி   [ மேலும் படிக்க ]