Archive for April, 2014

மாமனிதர் தராகி சிவராமின் நினைவு நாளை முன்னிட்டு ஈழம்ஈநியூஸ். இந்த கட்டுரையை மீள பதிவு செய்கிறது. தீர்க்க தரிசனம் மிகுந்த எழுத்துக்களை தமிழீழ விடுதலைப்போராட்ட களத்திற்கு வழங்கிய சிவராமின் எழுத்துக்களில் இது சமகால தமிழ் அரசியல் தலைமைகள் கடைப்பிடிக்க வேண்டிய வரலாற்று கடமையை நினைவுறுத்துகிறது. தமிழர் தம் இறைமையை விட்டுக் கொடுக்க இயலாது போரால் பறிக்க முடியாமல் போன நாகலாந்தின் இறைமையை இன்று பேச்சுவார்த்தைகள் மூலம் மடக்கிப் போட முனைந்து   [ மேலும் படிக்க ]

மாமனிதர் தராகி சிவராம் இனஅழிப்பு அரசின் கொலைக்குழுவால் கடத்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நாளை. சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலரும் நம்பினோம். இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் இன அழிப்பு அரசு திட்டமிட்ட தூர நோக்கில் அந்தப் படுகொலையை நிகழ்த்தியதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. தமிழ்த்தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. அவர்   [ மேலும் படிக்க ]

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிமீழத்தைக் கட்டியெழுப்பத் தமிழர்கள் – தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதே தமிழீழ அரசின் நோக்காக இருந்தது. நெடுந்தீவு கடல்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான ஆராய்ச்சி மையமாக இருந்தது. நாட்டின் நிருவாகத்தை பொதுநலன் கொண்டு நிருவகிக்கக் கூடிய சிற்பிகள் செஞ்சோலையில் வளர்ந்து   [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது. ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும்   [ மேலும் படிக்க ]

எல்லைப்புற கிராமங்களின் ஆலயங்களை பாதுகாப்பதிலேயே எமது மதத்தின், இனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். அண்மையில் மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசங்களின் எல்லைப்புற ஆலயங்களுக்கு சென்று அங்கு அவ்வாலயங்களின் நிலை பற்றி ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று எமது நாட்டில் எமது இனம் மாத்திரம் முடக்கப்படவில்லை. எமது கலை, கலாசாரம்,   [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையோடு நெருங்கியிருந்து நீதிக்காக குரல் கொடுத்துவரும் கிறிஸ்தவ மதப் பெரியார்கள் மீது அவதூறு பூசும் வகையில் அண்மைக் காலமாக விசமிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்களின் வாழ்வுப் பாதையில் இந்தக்காலம் மிகவும் இருண்ட காலமாகவே இருக்கின்றது. இப்போது நம்மண்ணில் அதர்மம் கடை விரித்திருக்கின்றது. யாரை எப்போது வேண்டுமானாலும் எத்தகைய அவதூறு சுமத்தியும் இந்த சமுகத்தில் இருந்து   [ மேலும் படிக்க ]

கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு குறித்து மக்களை விழிப்படைய செய்வதே நமது உடனடி பணியாக இருக்கிறது என பெண்ணிய உளவியலாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான திரு பரணி கிருஸ்ணரஜனி அவர்கள் கனடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேற்படி அறைகூவலை விடுத்திருக்கிறார். கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் பல கூறுகள் பற்றியும் அதற்கு எதிராக மக்களை விழிப்படைய செய்து போராட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம். பரணி கிருஸ்ணரஜனி வழங்கிய   [ மேலும் படிக்க ]

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவுபோல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும் அபாயகரமான குடாரப்பு தரையிறக்கத் திட்டத்தை தயாரித்திருந்தார். தற்பாதுகாப்பு தாக்குதலுக்கேற்றவாறே ஆனையிறவு களமுனை அமைந்திருந்தது. ஆனால், அதை தாக்குதலுக்கேற்ற களமாக மாற்றிய பிரபாகரனின் திட்டத்திற்கு பால்ராஜ் செயல்வடிவம் கொடுக்க தயாரானார். ஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம்   [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர் பற்றி அதிக அக்கறை உள்ளவர், எனவே எம் தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க இற்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒபாமா தமிழர்கள் அன்புடன் கேட்டுகொள்கிரர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது கட்சி அ.தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்கின்றார். அவர் கடந்தகாலங்களில் ஈழத்தமிழர்கள் விடையத்தில் மேற்கொண்ட தைரியமான முடிவுகள் மக்கள் இதயங்களில் அவருக்கொரு நல்ல இடத்தினைக் கொடுத்துள்ளது. அவருக்கு ஆதரவளிப்பதே தமிழ்ச் சொந்தங்களின் சரியான   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலையை வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் அரசியல்வாதிகளாலும், கோட்சூட் போட்ட படித்த மேதாவிகளாலும் என்றும் பெற்றுத்தரமுடியாது. இது தமிழீழத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிற நடந்து முடிந்த அனைத்துப் போராட்டங்களுக்கும் பொருந்தும். போராளிகளின் புரட்சிகர வன்முறைப் போராட்டத்திற்கும், உழைக்கும் மக்களின், மாணவர்களின் புரட்சிக்கும் ஒரு தொய்வு ஏற்பட்டு அதற்கான சாதகமான சூழல் உருவாகும்வரை அந்த போராட்டத்தை தற்காலிகமாகத் தாங்கிப்பிடிக்க அல்லது அதை முழுமையாக நீர்த்துப் போகாமல் செய்ய ஒரு தற்காலிக   [ மேலும் படிக்க ]