Archive for June, 2014

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார். மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜெஹாங்கிர் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். ஐநா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம்,   [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள தமிழ் தேசிய அமைப்புகளில் திராவிடக் கொள்கை இல்லாத அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய சிந்தனையுள்ள அமைப்புகள், ஈழத்திற்காக போராடிய மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு   [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் பிரபல நடிகையான அன்யலினா ஜொலி அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னர் இலண்டனில் யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தடை செய்யவதற்கு ஒரு மாநாட்டினை நடத்தியிருந்தார். இம்மாநாடானது 2009ம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பெருமளவு பெண்கள் இராணுவத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுதிய சம்பவங்களின் பின்னர் தான் இப்படியான ஒரு மாநாடு நடத்துவதற்கு காரணமாய் அமைந்தது. இம்மாநாட்டில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோரை பார்வையிட அன்யலினா   [ மேலும் படிக்க ]

அரசுகளோ அல்லது வேறு குழுக்களோ மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அந்த நாடுகளின் விமானங்களில் பயணிப்பதை தவிருங்கள். அரசுகளின் விடுதிகளை புறக்கணியுங்கள் என மனிதாபிமான செயற்பாட்டாளர் அம்ரா லீ (Amra Lee) கடந்த 27 ஆம் நாள் ரைற்நைவ் (http://rightnow.org.au) என்ற இணையத்தளத்தில் எழுதிய பத்தியில் தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவத்தை ஈழம் ஈ நியூஸ் இங்கு தருகின்றது: கடந்த மார்ச் மாதம் 27 ஆம் நாள் ஐ.நாவின் மனித   [ மேலும் படிக்க ]

இன்று ஜெனிவாவில் முஸ்லிம்கள் தம் மீது நடாத்தப்பட்டு வரும் “தாக்குதல்களுக்கு” எதிராக ( அது இன அழிப்புத்தான்.. ஆனால் நாம் அப்படி வரையறுப்பதை முஸ்லிம்களே ரசிப்பதாக தெரியவில்லை. எனவே அவர்களின் மொழியிலேயே “தாக்குதல்” என்போம்) ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.. அப்போது சிறீலங்கா தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்திருந்ததை அவதானிக்க முடிந்தது. சில நாட்களுக்கு முன்பு லண்டனில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் அதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இது அவர்களின் நம்பிக்கை. இதை   [ மேலும் படிக்க ]

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களுக்கு யூன் 9 அன்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் பொதுவாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் வலியுறுத்தி எழுதப்படிருந்தது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தென் சூடானில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு போன்றதொரு பொதுவாக்கெடுப்பை வடகிழக்கு தமிழர்கள் மற்றும் போரினால் புலம்பெயர்ந்து உலகில் பல பாகங்களிலும் பரந்து வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை விரும்பியது. அதனையே தமிழக   [ மேலும் படிக்க ]

சிங்கள தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு வரலாற்று நிகழ்வை சொன்னார். தொடர் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்டிருந்த போர் நிறுத்த காலத்தில் தமிழீழ அரசு யாழ்ப்பாணத்தில் ஒரு கலைவிழாவினை ஏற்படுத்தியது. இந்த கலைவிழாவிற்கு சிங்களவர்களில் முதன்மையாகவும், சிறந்த கலைஞர்களாகவும் விளாங்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என சிங்கள ஜனநாயக சக்திகளாலும், கலையுலகினாலும் கொண்டாடப்பட்டவர்களை அழைத்திருந்தார்கள் தமிழீழ அரசின் பிரதிநிதிகள். இந்த நிகழ்விற்கு யாழ்ப்பாண மக்களும் தமது சிங்கள   [ மேலும் படிக்க ]

“எல்லோரும் அடுத்த சந்திக்குப் போய்விட்டார்கள். புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சோஷலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தீவிரவாதிகள், ஆண்கள் பெண்கள். வெற்றியின் கணத்தில் எழுகிற மமதையும் கவர்ச்சியும் ஒன்றுசேர, வீரியம் பெறுகிற காற்றில் கொண்டாட்டத்தின் வெடியோசையும் மத்தாப்பூக்களும். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆர்வக் கிளர்ச்சியின் மென்சூட்டில் திளைக்கிறார்கள் சிங்களர்கள். இந்தச் சந்தியில் நான் மட்டும் தனியே. கையில் எதிர்ப்புப் பதாகை தாங்கியபடி . . .” முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளை அடுத்து மகேஷ் முனசிங்ஹ   [ மேலும் படிக்க ]

“உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள் கூடியே இருந்த தமிழர்களுக்கு இரவுத் துரோகம் செய்தமையின் ஒரு சாட்சிதான் நாகம்மாள். அது கெவிலியாமடு. இப்போது கெவிலியாமடு (அழுத்தமாக சொல்லப்படுகிறது). அதற்குள் இருக்கும் குடும்பமொன்றின் கதையை மேற்கண்ட வசனங்களில்   [ மேலும் படிக்க ]

ஈழத்தின் வடக்கு-கிழக்கு நிலப்பகுதியின் இடையில் இருதய பூமியாக உள்ள கொக்கிளாய்ப் பிரதேசத்தில் அரங் கேற்றப்படும் விடயங்கள் ஒட்டுமொத்த ஈழத்தையும் அதிரப் பண்ணியுள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதியைப் போலவும் ராணுவத்தினரால் மூடிவைக்கப்பட்டு ஆளப்படும் பகுதியைப் போலவும் இருக்கும் கொக்கிளாயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்கிறார்கள். வடக்கு-கிழக்கு நிலத்தின் இணைவிடம் என்பதால் அந்த இருதய நிலத்தில் ஈழத் தமிழர்களின் இருப்பைச் சிதைத்து அதைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அரசு முழுநடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ராணுவத்தின்   [ மேலும் படிக்க ]