Archive for August, 2014

ஒரு நாட்டில் ஒடுக்கப்படும் மக்களுக்கான தீர்வாக அந்த நாட்டில் இருந்து அவர்களின் நிலப்பகுதியை பிரித்து தனியான தேசம் ஒன்றை அமைத்து கொடுப்பது என்பது இயலாத காரியம் ஒன்றாகவே தன்னைத்தானே மிகப்பெரும் ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் இந்தியா என்ற தேசம் தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றது. அதற்கு வலுச்சேர்க்கும் பொருட்டு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் சிறீலங்கா என்ற ஒரு தேசத்திற்குள் தான் தீர்வைத்தேடுவதாக தெரிவித்துள்ளார். இந்த   [ மேலும் படிக்க ]

சர்வதேச காணாமல் போதலுக்கு எதிரான தினமான இன்று வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்தவிற்கும் கோத்தா மற்றும் படையினருக்கெதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் வீதி மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை தடை விதித்தமைக்குப் பல தரப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன. முன்னதாக வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை காணாமல் போதலுக்கு   [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான ஆணையத்தின் (OHCHR) சிறிலங்காவின் மனித உரிமைக்கான விசாரணையில் (OISL) நீங்களும் துணை நிற்கும் வகையில் நமது நடுவம் உங்களுக்கு துணை செய்ய தயாராகவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனிதவுரிமை மீறல்களை ஆவணப்படுத்தியும், இன்று இந்த சாட்சியங்களை உறுதிப்படுத்தி மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்கு துணை செய்ய தயாராகியுள்ளோம். இப்பொமுது நாம் வெளியிட்டுள்ள விசாரணை பற்றிய வினா விடைக்கொத்து உங்களனைவருக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை   [ மேலும் படிக்க ]

உலகின் தற்போதைய மக்கள் தொகை 724 கோடி. உலகின் மக்கள் தொகை வேகமாகப் பெருகிவருகிறது. ஆனால், உலக மக்களின் பல மொழிகள் அதைவிட வேகமாக அருகி மறைந்து வருகின்றன. சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால் மொழிகள் மரணமடைகின்றன. உலக அளவில் இப்போதைக்கு 7,105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார்   [ மேலும் படிக்க ]

வயலூர் கிராமப் படுகொலை தமிழின அழிப்புக்களை பறைசாற்றுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி. கலையரசன் தெரிவித்தார் அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்;த அடையாளமே இல்லாமல் போன வரிசையில் வயலூர் கிராமமும் ஒன்றாகும். தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முதல் முதல் விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்த சமாதான ‘திம்பு’ பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா மற்றும் இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கிவரும் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையின் கபடத்தனம் குறித்து தமிழகத்தை தளமாகக் கொண்ட மே 17 இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன்காந்தி வெளியிட்டுள்ள முகநூல் குறிப்பு வருமாறு: ”ஓன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” , ”13வது சட்டதிருத்த அமல்” , ”அதிகார பகிர்வு” , ”நல்லிணக்கம்” என சம்பந்தன், மோடி முதல் லோக்கல் பத்திரிக்கை தலையங்கம் வரை பேசி   [ மேலும் படிக்க ]

இன்று 26-08-14 லண்டன் சென்.ஜோர்ஜ்ஸ் வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக மரணத்தை தழுவிக்கொண்டார்.இவர் லண்டனில் பிரபல சட்டதரணியாக திகழ்ந்தார்.தமிழ் சமுதாய பணிகளில்முன்நின்று சேவையாற்றினார். தாயகத்தில் விடுதலைப்போராட்டம் முகி்ழ்விட்ட காலங்களில் தன்னை தமிழ் தேசிய விடுதலைக்காக இணைத்துக்கொண்டார்.யாழ் பல்கலைகழகத்தில் கடமையாற்றும் போது தேசவிரோத குழுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு,இந்திய இராணுவத்தினால் மிகவும் மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பிரிட்டன் வந்த பின்பும் தனது தேசியகடமையை செய்து கொண்டே இருந்தார்.தனது உழைப்பின் பெரும் பகுதியை அகதிகளுக்கும், தாயகத்தில் இன்னலுறும்   [ மேலும் படிக்க ]

நாம் இங்கு இன்றியமையாத வரலாற்றுப் பணிகளை செய்ய வேண்டிய காலத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த காலத்தில் செய்ய வேண்டிய எம் இனத்துக்கான கடமைகளில் அவசியமானவற்றில் ஒன்றாக ஐ. நா. விற்கு சமர்ப்பிக்க வேண்டிய சாட்சியங்களை திரட்டும் பணி எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அன்புறவுகளே அடுத்து வரும் மூன்று மாதத்திற்குள் நமக்கு இரண்டு லட்சம் சாட்சியங்களை ஐ.நா.வில் சமர்பிக்க வேண்டி உள்ளது, இப்போது வெறும் நாற்பதாயிரம் சாட்சியங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என   [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் லைகாவின் நுழைவை அடுத்து பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லைகா எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் இனஅழிப்பு அரசுடன் அது கைகோர்த்துள்ள தன்மைகள் அத்தகையவை. ஆனால் முள்ளவாய்க்கால் இனஅழிப்பை அடுத்து பொருளாதாரரீதியாக ஒரு இனமே முடங்கியுள்ளது. எமதுசொத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு முடக்கப்பட்டு பணப்பரிமாற்றம், பணப்புழக்கம் இல்லாத ஒரு இனமாக நாம் மாறியுள்ளோம் அல்லது மாற்றப்பட்டுள்ளோம். இது நடந்த இனஅழிப்பின் பக்க விளைவு. எனவே லைகா போன்ற   [ மேலும் படிக்க ]

மே 18 இற்கு பிறகு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஓரளவேனும் முன்னோக்கி நகர்த்திய சக்திகள் என்று பார்த்தால், 01. மாணவர்கள் யாழ்பல்கலைக்கழக மாணர்களின் சில துணிச்சலான நடவடிக்கைகளும், குறிப்பாக தமிழக மாணவர்களின் உச்சகட்ட போராட்டமும் ஜெனிவா தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தி தமிழக முதல்வர் “தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு” தீர்மானம் போடுமளவிற்கு சாதனையை நிகழ்த்தியது வரலாறு. 02. மக்கள் சிறியளவிலேனும் தாயகத்தில் மக்கள் நடத்திய துணிச்சலான போராட்டங்கள், குறிப்பாக நவிபிள்ளை மற்றும் டேவிட் கமருன்   [ மேலும் படிக்க ]