Archive for September, 2014

பிரதமர் மோடியிடம் ஜெயலிதாவின் வழக்கை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஒபாமவுக்கான தமிழர்கள் கேட்டு உள்ளார்கள் ஜெயலலிதா இந்தியாவில் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. அவர்கள் ஈழத்தமிழர்களின் துன்பத்திற்கு மிகவும் அனுதாபமும் ஆதரவு கொண்டவர். இவர் ஈழத்தமிழர்களின் தலைவர் மட்டும்மல்ல நெருங்கிய சிறந்த நண்பரரும் என ஒபமவுக்கான தமிழர்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்புட்டுருந்தார்கள் . ஜெயலலிதாவின் திறமையையும், அவரின் செல்வாக்கையும் தாங்க முடியாத அவருடைய எதிரிகள்   [ மேலும் படிக்க ]

அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.பின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு   [ மேலும் படிக்க ]

புன்னகைக்கும் இதயம் கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும் அழத் தோன்றும் முகத் தோற்றம் நேசத்தை யாசிக்கும் யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! திலீபன் ! காற்றில் உதித்தவன் ! நெஞ்சங்களில் அநேகமானவற்றை விட்டுச் சென்ற முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில் ஒரு ‘கமா’வாக மறைந்த விலைமதிப்பற்ற யௌவனத்தை கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த நேர்மையான புன்னகையும் தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன் அன்றிலிருந்து இன்று வரை கண்ணீர்   [ மேலும் படிக்க ]

ஊடகத்துறை மீதான வன்முறைகளிற்கு முகம்கொடுப்பது என்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தொடர் அச்சுறுத்தலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்களும் வன்முறைகளுமே அதிகமானது. தாய்நாட்டில் வைத்து எம்மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள்; தற்போது அகதிகளாக வந்து தஞ்சமடைந்துள்ள புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது. 2009 ஆண்டில் எமது இனம் முள்ளிவாய்காலில் சந்தித்த இழப்பின் பின்னர், தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுத்திறன் புலம்பெயர் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழ் மக்களிடமுமே   [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கொண்டாட எதுவுமேயில்லை. மாறாக இந்த தீர்ப்பினூடாக பிராந்திய அரசியலில் எமது விடுதலைக்கு எதிரான ஒரு “செக்” வைக்கப்பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா எமக்கான நிரந்தர நேச சக்தி கிடையாது. அவரது ஆரம்ப கால நவடிக்கைகளை பார்த்தாலே அது புரியும். அத்தகைய ஒருத்தரை எமது தொடர் போராட்டங்களினூடாக எமக்குச் சார்பாகத் திருப்பியது சமகால வரலாறு. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணப்பிரதிபலிப்பாய், தமிழீழ   [ மேலும் படிக்க ]

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகள் பாரிய இராணுவமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் கணேஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 85 வீதமான சிங்கள இராணுவத்தினர் தமிழ் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். 96 வீதமான தமிழ் மக்கள் 5 கிலோ மீற்றருக்கு ஒரு இராணுவ முகாம் அல்லது சோதனை சாவடிகள் என்ற நிலையிலேயே வாழ்ந்து   [ மேலும் படிக்க ]

ஊடகத்தின் மேலான மிரட்டலும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிலைப்பாடும் அன்பான தமிழீழமக்களே ! புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் வாழ்வியலில், ஊடகங்கள் ஒரு வளர்ச்சிப்பாதையில் இருக்கின்றன. இன்றைய கணனி உலகில் ஒரு தனிமனிதன்; தனது கருத்துகளை இலகுவாக மற்றவருக்கு எடுத்துச்செல்கின்ற நிலையில், ஒரு பத்திரிகையின் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாது மிரட்டல் வன்முறை மூலம் எதிர்ப்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது முற்றும் முழுதாக நிராகரிக்கின்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது பிரான்சு நாட்டில் பதிவு செய்ததோர்   [ மேலும் படிக்க ]

எல்லாளன் படை என்ற பெயரில் பிரான்ஸ் இலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகைக்குமின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் “துப்பாக்கி முனையில் பதில் சொல்ல வேண்டிவரும்” என்ற மிரட்டல் காரணமாக அந்த பத்திரிகை தற்காலிகமாக தமது பணிகளை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகமெங்கும் ஊடகச் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டு இருக்க ஒரு வளர்ச்சி பெற்ற நாட்டில் அகதிகளாக வந்து தலையெடுத்து வாழும் தமிழர்களை வந்தேறு குடியோடு கூடி வந்த பதர்கள்   [ மேலும் படிக்க ]

இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிர போர் செய்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. திலிபனின் 27ம் ஆண்டு நினைவு நாள் வடக்கில் பெருமளவில் நினைவு கூரப்படாத நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைதியான முறையில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பெரும் புலனாய்வு கண்காணிப்பிற்குள் பல்கலைக்கழகம் வைக்கப்பட்டுள்ள போதும் நுணுக்கமான முறையில் நடைபெற்ற இந் நிகழ்வினையடுத்து மேலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்­கையின் முழு­மை­யான விபரம். 1. ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் சார்­பாக நான் இந்த வாய்­மூல அறிக்­கையை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கின்றேன். ‘இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­வித்­தலும் பொறுப்­புக்­கூ­றலும்’ என்ற தலைப்பில் மனித உரிமை பேர­வையில் மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமை­வாக முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை குறித்தே இந்த வாய்­மூல அறிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. 2. இந்தப்   [ மேலும் படிக்க ]