Archive for October, 2014

தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. சிங்கள இனவெறியுட்   [ மேலும் படிக்க ]

இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில்   [ மேலும் படிக்க ]

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததையடுத்து காஞ்சிபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரத்திலும்   [ மேலும் படிக்க ]

கடந்த வாரம் தமிழ் நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று திங்கட்கிழமை (27.10.14) மாலை 4:30 இலிருந்து 6:30 வரை லண்டன் Aldwych இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் பிரித்தானிய வாழ் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டவர்களால் “Free students now”, “India respect freedom of speech”,   [ மேலும் படிக்க ]

கத்தி திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் எதிரொலியாக சென்னை சத்தியம் மற்றும் வுட்லண்ட் திரையரங்குகள் தாக்கப்பட்ட வழக்கில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 தோழர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பின்பு மாணவர்கள் மூவரையும் கைது செய்து காவல் துறையினரால் உறவினர்கள் அலைகழிக்க வைத்ததுடன் உலகத்திலேயே மிகப் பெரிய குற்றவாளிகள் போல அவர்களை ரகசியமாக வைத்திருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வராமல் நீதிபதி வீட்டுக்கு சென்று சிறையில் அடைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவைப்   [ மேலும் படிக்க ]

மீளிணக்கம் முக்கியம் வஞ்சத்தீர்வு அல்ல. நாங்கள் இந்தத் தவறுகளை எல்லாம் செய்தோம் என நாங்கள் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் மருத்துவமணைகளின் மீது குண்டுவீசினோம், பொதுமக்களைக் கொன்றோம் என நாங்கள் சொல்லிக் கொண்டு அலையப்போவதில்லை. ஏனென்றால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. இதே மாதித்தான் இந்திய அமைதிப்படை பெருமளவிலான மக்களைக் கொன்றது என்றும் பாலியல் வல்லுறவு புரிந்தது என்றும் பழிசுமத்திக் கொண்டிருந்தார்கள் என்பதனை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எமது ஜனாதிபதி   [ மேலும் படிக்க ]

(27-10-2014 திங்கள்கிழமை ) மாலை 4:30 இலிருந்து 6:30 வரை WC2B 4NA, Aldwych இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் இம்மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர்   [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய அரசியலில் ஒரு பிரச்சினைக்குரிய களமாக , வடமாகாணசபை மாறிவிடும்போல் தெரிகிறது. முல்லைத்தீவைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவர், முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அத்தோடு, சிவாஜிலிங்கத்தின் ‘இன அழிப்பு’ பிரேரணையும் புதிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. ஐ.நா.தீர்மானத்தில் மனித உரிமை மீறல், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தேசிய இனத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை என்று கூறவில்லை. ‘அது விசாரணையின் பின்பே தெரியவரும்’   [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் ஊடுருவியுள்ள சிங்கள மற்றும் இந்திய அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போர் அகிம்சையில் இருந்து ஆயுதப்போராக பரிணாமம் காணும் நிலையை அடைந்துள்ளது. அதற்கான சூழ்நிலையை தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையும், இந்திய மத்திய அரசும் உருவாக்கியுள்ளது. இந்திய மத்திய அரசின் தமிழின விரோதப்போக்கிற்கும், அதற்கு துணைநிற்கும் துரோகக் கும்பல்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் எதிராக இதுவரையிலும் அகிம்சைப்போரை நடத்திய தமிழக மக்கள் மீதும், மாணவர்கள் மீதும் தனது அடக்குமுறைகளை பிரயோகித்த தமிழக அரசு   [ மேலும் படிக்க ]

‘இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ மூலோபாய நலன்கள்’ என்கிற இந்த கட்டுரையானது, இலங்கையில் வசித்தவரும் பிரபல தமிழ் பத்திரிக்கையாளருமான, மறைந்த ‘தராக்கி’ சிவராம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். முதலில் கிழக்கு பகுதி. இந்த துணைக்கண்டத்தின் கிழக்குப்பகுதி பர்மாவை மற்றும் பிற நாடுகளை கொண்டது. பர்மாவுக்கும் அமெரிக்காவுக்குமான உருவில் பல பிணக்குகள் உள்ளன, பர்மா சீனாவுக்கு அரசியல் பொருளாதார ராணுவ உறவில் மிக நெருக்கமாக இருப்பதாலும், பிற்காலப்போர்சூழலில் அமெரிக்காவை விட இயற்கையாக   [ மேலும் படிக்க ]