Archive for November, 2014

இந்நாடு இன்று ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கும் இந்த வேளையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன்பிறப்புகளும், அவர்களது அமைப்புகளும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, உள்நாட்டிலே செயற்படும் தமிழ் தேசிய சிந்தனையாளர்களும் மிகவும் சாணக்கியத்துடன் பணியாற்றிட வேண்டுமென முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற, இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பான ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கலந்துரையாடலின் போது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ   [ மேலும் படிக்க ]

கனடா ரொறன்ரோவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றது. கனடிய நேரப்படி நேற்றுக்காலை 7:05 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டு கனடியக் கொடி, தமிழர் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின. தேசிய நினைவெழுச்சி அகவத்தினால் இன்றைய நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாக மார்க்கம் Fair Ground மைதானத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெற்றது. கனடாவில் நேற்றைய நாள் நவம்பர் 27 அன்று மார்க்கம் நகரில் கனடிய தமிழ் மக்களின் தேசியக்   [ மேலும் படிக்க ]

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு பிரான்சில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 27 – 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்த திலீபன் அவர்கள் தமிழகத்தில் இருந்து வருகைதந்து மாவீரர்கள் பற்றி உரையாற்றினர்.

மாவீரர்கள் நமது வழிகாட்டிகள்; நமது முன்னோடிகள். நமது பாட்டன்கள் பாரி,பேகன், போன்றவர்கள் மயிலுக்குப் போர்வையும், முல்லைக்குத் தேரையும் தந்ததே வள்ளல்தன்மை என்றால்,தமது உயிரையே இந்த இனத்திற்காக கொடையாகக் கொடுத்தவர்கள் எவ்வளவு பெரிய மாவீரர்கள். பனைமரம் தமிழர்களின் தேசிய மரம். ஈழத்தில் களத்தில் பலியான மாவீரர்களாக விழுந்தவர்களின் எண்ணிக்கைவிட பனைமரங்களின் எண்ணிக்கை அதிகம். சுவரொட்டியில் துப்பாக்கியை பொதித்து வீரவணக்கம் செலுத்தமுடியாதபோது பனைமரத்தை பொதித்து வீரவணக்கம் செலுத்துகிறோம். ஏனென்றால், பனைமரம் நம் இனத்தின்   [ மேலும் படிக்க ]

27.11.2014. வியாழக்கிழமை அன்று Newington Reserve, Holker Street, Silverwater எனும் இடத்தில் திறந்த வெளி அரங்கில் மாவீரர் நினைவு எழுச்சி நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டார்கள். தமிழீழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டிருந்த நுளைவு வாசல் போன்று, மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நுளைவு வாசல் ஊடாக, நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் யாவரும், மாவீரர்துயிலும் இல்ல வாளாகத்தினுள் வந்து உணர்வுபூர்வமாக   [ மேலும் படிக்க ]

இரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந்திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது. இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடத்திக் கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி   [ மேலும் படிக்க ]

டென்மார்க்கில் மாவீரர்நாள் மிகவும் உணர்புபூர்வமாக வழமை போல் கேர்ணிங் மற்றும் கொல்பெக் ஆகிய இரு நகரங்களில் நடைபெற்றது. இம்மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு, தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை வித்தாக்கிய மாவீரர்களை வணங்கிச் சென்றனர். மாவீரர்நாள் நிகழ்வானது பிராந்தியப் பொறுப்பாளரினால் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து தேசியக்கொடியினை டென்மார்க் கிளைப்பொறுப்பாளர் ஏற்றிவைத்தார். ஈகச் சுடரினை மாவீரர் வீரவேங்கை வினிதா அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர் நிகள்வுகளாக   [ மேலும் படிக்க ]

27.11.2014 ஒஸ்லோவில் அமைந்துள்ள கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மதியம் 12;:45 மணிக்கு மிக சிறப்பாக ஆரம்பமாகியது மாவீரர்நாள், இந்நிகழ்வில் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களின் உதிரத்தால் உருவாகிய தேசியக்கொடீ ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழீழ மாவீரர்நாள் அறிக்கையும் தொடர்ந்து உலகத்தில் எந்த மூலையில் வாழந்தாலும் தமிழீழத்தின் விடுதலைக்காக உறுதியோடு உழைப்போமென உறுதிமொமி மக்களோடு சேர்ந்து எடுக்கப்பட்டதை தொடர்ந்து மணி ஒலி மூன்று தடவைகள்   [ மேலும் படிக்க ]

அய்யா எஸ்.பொ. அவர்களை சந்தித்து பழகத்தொடங்கி சரியாக 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. என்னுடைய முதல் நூல் “எரியும் வண்ணங்கள்” வெளிவந்தவுடன் அவரை நானும், எனது நண்பர் தாமரைசெல்வி பதிப்பகத்தின் திருநாவுக்கரசுவும் (தற்போது நிழல்) கோடம்பாக்கத்தில் உள்ள A.R. அச்சகத்தில் முதன் முதலாக சந்தித்து எனது நூலை கொடுத்தோம். நேரடியான அறிமுகம் இல்லாவிட்டாலும் இதழ்கள் வழி அறிமுகம் இருந்ததால் சந்திப்பதில் சிக்கல்கள் எதுவும் இல்லை. நூலைப் பெற்றுக் கொண்டு சிறிது நேரம்   [ மேலும் படிக்க ]

மாவீரர் நாளில் கனடா பாராளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்த கனடா பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன். கனடா பாராளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூற முடிகிறது, ஆனால் தாய்த் தமிழகத்திலோ மாவீரர் நாளை அனுசரிக்கக் கூட தடை விதித்தது தமிழக அரசு. உலகில் தமிழினத்திற்கு என்று ஒரு நாடு வேண்டும் என்று போராடியவர்கள் மாவீரர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர்கள் மாவீரர் நாளில் மரியாதை செலுத்துவது தமிழர்களின் கடமையாகும்.   [ மேலும் படிக்க ]