Archive for December, 2014

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது. வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று தெரிவித்துள்ளார் . வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம்,   [ மேலும் படிக்க ]

2015 இல் நடைபெற இருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் குறித்து வடக்கு கிழக்கு தமிழீழ மக்களுக்கு மூன்றுவிதமான கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன: அ) தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – தமிழ்த் தேசிய முன்னணி (தமிழக மே17 அமைப்பு உட்பட சில பிரமுகர்களும் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக அறிய முடிகிறது) ஆ) தேர்தலில் இருவருக்கும் வாக்களித்து சிறிலங்கா வாக்குரிமையை செல்லுபடியற்றதாக மாற்ற வேண்டும் – சிவில் சமூகம் இ) மைத்திரி தலமையிலான கூட்டணிக்கு   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியில், தமிழ் மக்களுக்கு எதிரான அவரது செயற்பாடுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை மீளப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்திலும் தமிழின அழிப்பில் முதன்மையான இடத்தை தக்க வைப்பதற்காக இன்றும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருப்பவர் மகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்புசார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ்   [ மேலும் படிக்க ]

மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் இனிய நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, “தூங்காதே தம்பி, தூங்காதே” என்று நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம். இன்று அவர் மலையகத்தின் எந்த பகுதிக்கும் சென்று சந்திரனை தருகிறோம், இந்திரனை தருகிறோம், வீடு கட்டி தருகிறோம், கடை கட்டி தருகிறோம் என்றெல்லாம் சொல்லி, எங்கெல்லாம் அடிக்கல் நாட்டினாலும் கூட, அவற்றிற்கான அனைத்து பெருமைகளும் எங்களையே சாரும். ஏனெனில், தோட்ட தொழிலாளர்களின்   [ மேலும் படிக்க ]

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தமிழினப்படுகொலைக்கான நீதி, குற்றவாளிகளுக்கான தண்டனை என தமிழர்களின் எந்த ஒரு அடிப்படை அரசியல் கோரிக்கைகளுக்கும் விவாதத்தினை நேர்மையாக நிகழ்த்தாத சிங்களப் பேரினவாதத்திடம் தமிழர்கள் எந்தவகையான அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டிய தருணமாக மே17 இதை பார்க்கிறது. அதே தருணத்தில் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலில் இருதரப்பு விசாரணை என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் வேண்டி முன்னெடுக்கப்படும் விசாரணை எந்தவித நலனையும் தமிழர்களுக்கு வழங்கிடப் போவதில்லை.   [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழி என்று (27/12/1956)அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அந்த ஆட்சி மொழி சட்டம் இன்னும் முழுமை பெறவில்லை என்பதே உண்மை. காவல்துறையில் தமிழ் இல்லை, பள்ளிகளில் தமிழ் இல்லை, வணிக நிறுவனப் பெயர் பலகைகளில் தமிழ் இல்லை, ஊடகங்களில் தமிழ் இல்லை, வங்கிகளில் தமிழ் இல்லை, அரசு நிறுவனங்களில் தமிழ் இல்லை, ஏன் ஆட்சி நடத்தும் கோட்டையில் கூட தமிழ் இல்லை. இப்படி எங்கும் எதிலும்   [ மேலும் படிக்க ]

யேர்மனியில் ஆலன்,பேர்லின் மற்றும் எஸ்சேன் நகரில் 26 .12 .2014 நேற்றைய தினம் மதியம் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முனெடுக்கப்பட்டது. ஆலன் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .அங்கு ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினர்   [ மேலும் படிக்க ]

சுனாமி தாக்கிய பிறகு, தமிழீழ அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும், கடற்கரையில் நிகழ்ந்த சேதங்களையும் சரி செய்தது. தமிழகத்தினை விட கடுமையாக தாக்கப்பட்ட பகுதி தமிழீழம். இந்தோனேசியாவிற்கு அடுத்து சுனாமியின் நேரடி ஆக்ரோசத்திற்கு ஆட்பட்ட பகுதி தமிழீழ தன்னாட்சி பிரதேசம். இலங்கை அரசின் கட்டுமானத்தினை விட வலிமை குறைந்த கட்டுமானத்தினை வைத்துக்கொண்டு தமிழீழ அரசு மிகச்சிறந்த பணியை செய்தது. சுனாமி தாக்கியபிறகு ஏற்படும் கட்டுமான சிதைப்பானது, மருத்துவ-உணவு உதவிகளை   [ மேலும் படிக்க ]

25/12/2005 அன்று நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர்   [ மேலும் படிக்க ]

இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக. கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. தமிழீழத்தில் முல்லைத்தீவு   [ மேலும் படிக்க ]