Archive for May, 2015

நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் மீதும் 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு, அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!   நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மீதும், மற்றும் அக்கட்சித் தோழர்கள் 40 பேர் மீதும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 124A, 143, 153A,   [ மேலும் படிக்க ]

புரொஜெக்ட் பெக்கன் 2 என்னவென்று பார்க்க முன்பு புரொஜெக்ட் பெக்கன் 1 குறித்து பார்ப்போம். புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் குறித்து நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். இந்த இணைத்தலைமை நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)   புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல்   [ மேலும் படிக்க ]

தற்பொழுது எமது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொடூரமானதும் அருவருக்கத்தக்கதுமான சமூக விரோத சம்பவங்கள் கடந்த காலத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போரின் பின்னான கட்டமைக்கப்பட்ட போரின் விளைவுகளாகவே காணப்படுகின்றது என  பா.உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.   எமது மக்களின் மனோநிலை பண்பாடு என்பன சிதைக்கப்பட்டு இன அடையாளங்கள் அற்ற நிலையில் வாழ விடுவதே ஆக்கிரமிப்பாளனின் நோக்கமாக இருக்கின்றது என ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்   [ மேலும் படிக்க ]

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.   சம்பூரில் மீள்குடியேற முயன்றவர்கள் வெளியேற்றம்சம்பூரில் மீள்குடியேற முயன்றவர்கள் வெளியேற்றம்   தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.   குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என   [ மேலும் படிக்க ]

பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும் துயர் பகிர்வோடு நிறைவுற்றன. கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள், குறிப்பாக கிரிசாந்தி மீதான சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் கூட்டு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் பேசப்பட்டும் கூட, மக்கள் போராட்டத்திற்கான ஒரு உடனடியானதும்   [ மேலும் படிக்க ]

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.   தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும் அந்த சுயாதீன அறிக்கை, ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள்   [ மேலும் படிக்க ]

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வில் முதலாவதாக ஆதி தமிழர் கலைநிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.   ஏராளமான மக்கள் வரிசையாக மாநாட்டு திடலில் வந்தமர்ந்து கொண்டிருந்த வேளையில் பிரபாகரனின் பதாகையை ஒரு சில இளைஞர்கள் மாநாட்டு மைதானத்திற்கு எடுத்து வந்தனர்.   அவ்வேளையில் அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார்கள்.   சில உணர்வாளர்கள் தங்களையும் மீறி கண்களில்   [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அந்த அறிக்கையில், பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.   என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ்மக்கள் மத்தியில்   [ மேலும் படிக்க ]

போரின் போது போர்க்குற்றமிழைத்த இராணுவத்தினரை எமது மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   இணுவில் இந்துக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,   எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர்   [ மேலும் படிக்க ]

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சாவகச்சேரிக்குச் சென்றுவிட்டு யாழ்ப்பாணத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது, கைதடி பகுதியில் பாரம் தூக்கும் கரனகர வாகனம் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது,   தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய 39 வயதுடைய கஜேந்திரன், கூட்டமைப்பில் இருந்து பிரிந்துள்ள கஜேந்திரகுமாருடன்   [ மேலும் படிக்க ]