Archive for June, 2015

சுமந்திரன், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய விசாரணைக்கு உள்நாட்டு பொறுமுறையைக் கேட்பதன் மூலம் முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள வெறியர்களை காப்பாற்ற முயல்கின்றார் – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு!   ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு   [ மேலும் படிக்க ]

ஐ.நா சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 29 ஆவது அமர்வு ஜூன் 15, 2015 அன்று ஆரம்பித்து எதிர்வரும் ஜூலை 3, 2015 வரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த பலதரப்பட்ட ஆவணங்களோடும் சாட்சிகளின் வாக்குமூலங்களோடும் கனடியத் தமிழர் தேசிய அவையினரின் அரசியல் குழு உறுப்பினர்களும் இளையோர் அமைப்பினர் உட்பட 5 பேர் கொண்ட குழு ஒன்று   [ மேலும் படிக்க ]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் இறுதிக் கட்ட யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்திடம் சரணடைந்த பின் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐநாவில் சாட்சி அளிக்கப்பட்டுள்ளது.   தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இவ் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களை அளித்துள்ளனர்.   ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள்  தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (19.06.2015) வழங்கிய நேர்காணல்.   நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்   நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி

ஆட்சிமாற்றத்தின் பின் மேற்குலக நாடுகள் இலங்கை அரசிற்கு நெருக்கடி வராமல் தவிர்ப்பதற்காக மனித உரிமைக் கழகத்தில் மார்ச் 2015 இல் வர இருந்த தீர்மானம் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச விசாரணையை கைவிட்டு இலங்கை அரசின் உள்ளக விசாரணையாக அதனை நீர்த்து போகச் செய்வதற்கு திரைமறைவில் உலக அரங்கிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச்மாதத்திலிருந்து இந்தப் போக்கினை மாற்றுவதற்காகவும் இத்திரைமறைவுச் சதியினை அம்பலப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவை   [ மேலும் படிக்க ]

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் தொடர்பாக தீபம்TVக்கு யூன்15ம் திகதி வழங்கிய நேர்காணல்.     17-06-2015   புலம்பெயர் தமிழர் அரசியல் சந்தித்துள்ள சவால்கள் என்ன? அவற்றைத் தாண்டி முன்னகர மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய கனேடிய தமிழ் வானொலிக்கான நேர்காணல். http://www.ctr24.com/archive/18062015-1347-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-june-17-2015-nirmanushan-balasundram-journalist-ncct-deva     17-06-2015 நெருக்கடியை சந்தித்துள்ள தமிழ்த் தேசியம் தலைநிமிர்வதற்கான தடங்களை எடுத்து வைப்பது எப்படி என்ற   [ மேலும் படிக்க ]

1975 ஆம் ஆண்டு இலண்டன் நகாில் கருக்கொண்ட ஈழ ஆய்வு நிறுவனம் 2015 ஆம் ஆண்டு 40 வருட பயணத்தை நிறைவு செய்வதினை முன்னிட்டு, நிறுவனம் கருக்கொண்ட லண்டன் நகாில், ஈழத்தமிழர்களின் நாடற்ற துயரம் எனும் தலைப்பில் பகிரங்க கருத்தரங்கொன்றை லண்டன் நகாின் ரெட்லயன் சதுக்கத்தில் அமைந்துள்ள கொன்வெய் மண்டபத்தில் எதிா்வரும் ஜீன் மாதம் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வானது காலை 9 மணி முதல் பிற்பகல்   [ மேலும் படிக்க ]

விசாரணை என்ற சொற்பதம், மிக அண்மைகாலமாக பல சர்ச்சைகளை அரசியல் அடிப்படையில் உருவாக்கியுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு பல காரணிகள் காணப்பட்டுள்ள பொழுதிலும், இச் சொற்பதத்தின் ஆழ்ந்த கருத்துக்களை ஆராயாது அவசரமாக அர்த்தமற்று மோதிக் கொள்வதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. சுருக்கமாக கூறுவதனால், ‘ஆத்திரக் காரணுக்கு புத்தி மத்திமம்’ என்பார்கள்.   தமிழில் நாம் விசாரணை என்று பேச்சு வழக்கத்திலோ அல்லது எழுத்திலோ குறிப்பிடும் பொழுது இச் சொற்பதம் பல   [ மேலும் படிக்க ]

அண்மையில் கூட்டு பாலியல் வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் இனஅழிப்பு அரசின் காவல்துறை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது.   இதற்கான அனுமதியை இனஅழிப்பு அரசின் நீதித்துறை வழங்கியிருக்கிறது. இதை இனஅழிப்பு அரசின் அடுத்த கட்ட பாய்ச்சலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.   வித்யா படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால்   [ மேலும் படிக்க ]

பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின்  தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது.   இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக   [ மேலும் படிக்க ]