Archive for September, 2015

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான தமது தந்தையரை விடுதலை செய்யக் கோரி, இரணை இலுப்பைக்குளத்தில் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.இதேபோன்றதொரு ஆர்ப்பாட்டம் செட்டிகுளத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சிறுவர் தினவாரம் தற்போது அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டியே தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.   இதேவேளை நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் தமது தந்தையரை பொதுமன்னிப்பளித்து விடுதலை   [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டுயுத்தத்தின் துஸ்பிரயோகங்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில் வலுவான சர்வதேச பிரசன்னம் காணப்படுவதை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அதன் ஜெனீவா இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளதாவது.   இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டிய தருணம் வந்துவிட்டதை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகின்றது.சர்வதேச பங்களிப்புடனான நீதிபொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதிவழங்குவதற்கு சர்வதேசபங்களிப்பு அவசியம்என்ற முக்கியமான   [ மேலும் படிக்க ]

இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக –   திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6  மணியளவில்  சென்னை  தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய  “வேண்டும்   [ மேலும் படிக்க ]

எரியும் அனலில் தேகத்தை உருக்கி உயிரால் பெருங்கனவை எழுதிய ஒரு பறவை அலைகிறது தீராத் தாகத்தில்   ஒரு சொட்டு நீரில் உறைந்த நிராகரிக்கப்பட்ட ஆகுதி வேள்வித் தீயென மூழ்கிறது   சுருள மறுத்த குரல் அலைகளின் நடுவில் உருகிய ஒளி உறங்கமற்ற விழியில் பெருந்தீ இறுதிப் புன்னகையில் உடைந்தது அசோகச் சக்கரம்   எந்தப் பெருமழையாலும் தணிக்க முடியாத அனலை இன்னமும் சுமந்து திரிபவனுக்காய் ஒருநாள் எழுமொரு நினைவுதூபி   [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த அறிக்கை, அது தொடர்பில் கலப்பு நீதிமன்றம் பற்றிய பரிந்துரை என்ற தொடரில், இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.   இந்த மாற்றங்கள் என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் நீதி கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.   ஆக, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடரில் நடைபெறுகின்ற விவாதங்கள் இலங்கை அரசுக்கு உதவி செய்வதாக அமைகிறதே தவிர பாதிக்கப்பட்ட   [ மேலும் படிக்க ]

கலப்பு நீதிமன்றம் என்பதே ஒரு மோசடி என்னும் போது அதையும் நீக்கிவிட்டு, அமெரிக்கா அப்பட்டமான ஒரு உள்ளக விசாரணைப் பொறிமுறையை அதுவும் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் சட்டத்தரணிகள் மேற்பார்வையுடன் ஒப்படைப்பது எத்தகைய அயோக்கியத்தனம் என்பதை நாம புரிந்து கொள்ள வேண்டும்.   இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தி இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க முற்பட்ட பொதுநலவாய அமைப்பு மற்றும் கமலேஸ் சர்மா கும்பல் குறித்த வரலாற்றை நாம் மறந்து விடவில்லை..   இதை   [ மேலும் படிக்க ]

சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது.   ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்த சட்ட வல்லுனர்கள் குழுவே இந்த துணை ஆவணத்தினை தயாரித்துள்ளது.   http://tgte-us.org/pressrelease/TGTE-GD-Resource%20Paper%20.pdf   கம்போடியா விவகாரத்தில் ஐ.நாவின் கலப்பு விசாரணை   [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆட்சி நடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தமிழர்களை ஒழிப்பது மட்டும் தான் ஒரே இலக்கு. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு இலங்கைக்கு சாதகமாக செயல்படுவதன் மூலம் இன்னொரு இனப்படுகொலை நடப்பதற்கான அடித்தளத்தை அமெரிக்கா அமைத்து தருவதாகவே கருதவேண்டியுள்ளது என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்த இரண்டாவது   [ மேலும் படிக்க ]

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகளிடம், ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் தமிழர்கள் மீதான எள்ளளவு இரக்கமும் இல்லை என மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகே தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் 30வது அமர்வில் மனித உரிமை ஆணையர் அல் செயித் ராஃப் ஹுசைன் தாக்கல் செய்த 19 பக்க அறிக்கையும், 2014 இல் மனித உரிமை ஆணையர் நியமித்த மார்ட்டி   [ மேலும் படிக்க ]

தமிழீழ இனப்படுகொலையை மறைத்து, கொலைகார இலங்கை அரசையே நீதிபதியாக்கி, தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கும் அமெரிக்கத் தூதரக முற்றுகை அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் வரும் செப்டம்பர் 28, திங்கள் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(25-9-2015) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடத்தப்பட்டது.   இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். தனது பிராந்திய நலன்   [ மேலும் படிக்க ]