Archive for December, 2015

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் தொடங்குவதை முன்னிட்டு ராஜீவ் கொலை குற்றம் சுமத்தப்பட்ட 7 தமிழர்களையும் 10 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.   வேல்முருகன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் :   “ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை இன்று நான் சந்தித்து பேசினேன். அப்பொழுது 3   [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் பேரவையின் முதல் அமர்வில் Dr.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர் , யாழ் போதனா வைத்தியசாலை)அவர்கள் ஆற்றிய உரை (19/12/15).   எமது மக்களின் அரசியல் வேட்கையும், பயணமும் தனித்துவமானது. அது எப்போதும் கொள்கைகளுக்கே முன்னுரிமை கொடுத்திருந்தது. அது ஆரம்பம் தொட்டு எத்தையோ அழிவுகளுக்கும், விலைபேசல்களுக்கும் மத்தியிலும் கொள்கைகளின் வழியே நின்றிருந்தது. அந்த பயணம் கடுமையானது என தெரிந்தும், எத்தனையோ ஆசைவார்த்தைகள் வீசப்பட்டும், அது கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுத்திருக்கவில்லை.   [ மேலும் படிக்க ]

உலகத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வள்ளுவருக்கு போதுமான சிறப்பை தமிழக அரசு வழங்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வள்ளுவர் கோட்டம், குமரி திருவள்ளுவர் சிலை போலவே சென்னையில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலும் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தான் இன்று வரை உள்ளது.   இந்த கோவிலுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை மிகக் குறைவு தான். இங்குள்ள வள்ளுவர் சந்நிதியில் பூசனை செய்வது வீர   [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்களை நடார்த்தி அதன் மூலம் இலவச மருத்துவ சிகிர்ச்சை மற்றும் இலவச மருந்துப்பொருட்களை அமெரிக்காவில் உள்ள கிளங்டனுக்கான தமிழர் அமைப்பு மற்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்புஆகியன அமைப்புக்கள் இணைந்து வழங்கியுள்ளது.   14.12.2015 அன்று தொடங்கி சென்னை மற்றும் கடலூரின் பலபகுதிகளில் இதற்கான இலவச சிறப்பு மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு குறிப்பாக   [ மேலும் படிக்க ]

வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மாகாணங்களுக்கு வரக்கூடாது. வந்தால் நாங்கள் சத்தியாகிரக போராட்டங்களை நடத்துவோம், ஆணைக்குழுக்கு செருப்பால் அடிப்போம் என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணாமல் போகசசெய்யப்பட்டோரின் உறவுகள் கூறியிருக்கின்றனர்.   இன்றைய தினம் மேற்படி காணாமல் போகசசெய்யப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருந்தனர். குறித்த கூட்டத்தின் பின்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக காணாமல்   [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார்.   ஆறு தசாப்த காலங்களுக்கு   [ மேலும் படிக்க ]

அது முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஆறு வருடங்கள் முந்திய மே மாதம். சமாதானம் மலரும் என்ற கனவோடு சாதாரண பொதுமக்கள் இருந்த காலம். சிறீலங்காவின் தென் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, உலர் உணவுப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பதற்கு வட-கிழக்கில் செயற்பட்ட சமூக அமைப்புகளை விடுதலைப் புலிகள் உள்வாங்கினார்கள். அதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களும், சிவில் சமூக அமைப்புகளும் இந்த மனிதாபிமானப்   [ மேலும் படிக்க ]

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.   விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்   கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   [ மேலும் படிக்க ]

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தோட்ட காணிக் கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது.   இவற்றை அகழ்வுக்குட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.   நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய   [ மேலும் படிக்க ]

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் ஏற்பாட்டில் மருத்துவர் குழுவொன்று சென்னை வரவுள்ளது.   அந்த குழுவினருடன் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள மருத்துவர்கள் மற்றும் வேறு வழிகளில் உதவிசெய்ய விரும்புபவர்களும் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகொள்ளவும்.   தொடர்புகளுக்கு: 078 284 5000, 0714 220002   தகவல் : திரு சி.அனுராஜ்   உதவ வாருங்கள் என வேண்டி நிற்கின்றது கனடிய தமிழர் தேசிய அவை     [ மேலும் படிக்க ]