Archive for January, 2016

இந்திய வரலாற்றின் கருப்புச்சட்டங்களினால் காலம் கடந்தும் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்களின் கதை நாம் எல்லோரும் அறிந்ததே!   தினமும் ஏதாவதொறு பத்திரிக்கையின் ஒரு மூலைப்பகுதியையாவது இந்த ஏழுபேரைப்பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கும். காலம் காலமாக நாம் இந்தசெய்திகளை படித்துக்கொண்டுவருகின்றோம். கண்ணீர்விடுகின்றோம் கலங்கித்தவிக்கின்றோம். எனினும் அவர்கள்இன்னும் விடுவிக்கப்படவில்லை,   இத்தனை காலமாக அவர்களை சிறையில் அடைத்துவைக்கும் அளவுக்கு அவர்கள் செய்த குற்றம் பாரியதா? அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிறுபிக்கப்பட்டதா? உண்மையில் அந்தக்குற்றங்களில் இவர்கள்   [ மேலும் படிக்க ]

அனைத்து காணாமலாக்கல்களை வெளிப்படுத்துமாறு கோரியும் அரசியல் கைதிகளை விடுதலையை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இந்த ஆர்ப்பாட்டமானது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.   இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமது பிள்ளைகள் மற்றும் அரசியல் கைதிகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு அரசாங்கத்திடம்   [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்புலவு மக்கள் தம்மை செந்த இடத்தில் குடியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.   இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம் பெற்ற, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக இன்று நடைபெற்றுள்ளது.   குறித்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   கூட்டம் முடிவடைந்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் வந்தபோது அவர்களை சந்தித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.     [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் ‘சர்வதேசத்தின் தலையீட்டை’ அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.   ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்குவதாக   [ மேலும் படிக்க ]

தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கனடிய மண்ணில் கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் கனடிய தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழ் வானொலி, கனடா தமிழ் கலை தொழில்நுட்பக் கலூரி, அறிவகம் கனடா ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடா வாழ் தமிழ் மக்கள், கலைஞர்கள் கூடி தமிழ் எழுச்சியோடு சிறப்புடன் நடைபெற்றது.   ஊர் கூடி பொங்கல் பொங்கி கதிரவனுக்கு படைத்து மகிழ்வும் தாயக பொங்கல் காட்சியை கனடிய மண்ணில்   [ மேலும் படிக்க ]

தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மகரத்திருநாளாக தமிழர்களால தமிழீழம்,தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.   இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.   6வது வருடமாக இளையோர் அமைப்பினரால்   [ மேலும் படிக்க ]

தைப்பொங்கல் என்பது உழவர் திருநாளாக தமிழர்கள் கடைப்பிடித்து வந்தபோதும் தமிழீழ விடுதலைப்போராட்டம் வீச்சு பெற்று புலிகளின்ஆளுகைக்குள் தமிழீழத்தின் பெரும்பகுதி வந்தபோது அது தமிழர் திருநாளாகவும் தமிழ்ப் புத்தாண்டாகவும் எந்த அறிவிப்புமின்றியே இயல்பாக மாறியது.   கடந்த முறை கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரச அறிவிப்பாக தமிழகத்தில் இதை முன்மொழிந்த போதும தமிழீழத்தில் ஏற்கனவே இது நடைமுறைக்கு வந்து விட்டது.   பலர் இது இந்துக்களின் விழா என்று கருதுகிறார்கள். இது   [ மேலும் படிக்க ]

இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே.   இலங்கையில் நடந்த இன அழிப்பு யுத்தம் குறித்து தமிழ் தலைமைகள் கூட மௌனித்திருந்த நிலையில் அதை தன்னுடைய தெளிவான பார்வை ஊடாக முறையாக முன்வைத்தார் அல்லது கேள்வி எழுப்பினார்.   ஈழத்தில் பல மதபோதகர்களுக்கு என்ன நடந்தது   [ மேலும் படிக்க ]

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம்.   14.05.1976 அன்று தந்தை சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் தலைமையில்; நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது தமிழ் மக்கள் தாம் பட்டறிந்த அனுபவங்களின்;படி எக்காலத்திலும் சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புக்குள்; வாழ்தல் சாத்தியமற்றது என்பதனைத் தெளிவாக முரசறைந்தது.     [ மேலும் படிக்க ]

காரிருள் நீக்கி, கொடும்பகை அழித்து, புத்தொளி வீசி, புவி அருள் செய்யப் புறப்பட்டு வருகிறது தமிழரின் புத்தாண்டு.   காலங்காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் அன்னைத் தமிழினம் விழிகளின் ஓரம் நம்பிக்கைச் சிவப்பேற்றி வரும் நாட்கள் வாழ்வினைத்தரும், வசந்தத்தினை வரவேற்கும் எனக் காத்துக் கிடக்கிறது.   இத்தனை ஆண்டுகளாக உரிமை மறுக்கப்பட்டு, நிலம்,நீர்,காடு என அனைத்தையும் இழந்து விட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் தங்கள் அடிமை இருள் நீங்க தங்களைத்   [ மேலும் படிக்க ]