Archive for July, 2016

இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் மலே­ஷிய தமிழர் பேரவை அமைப்­பினால் திரட்­டப்­பட்ட நிதி செல­வி­டப்­பட்­டமை தொடர்பில் விப­ரங்­களை அறியத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.   இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,   இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்­ட ­மக்­க­ளுக்­கு­ உ­தவும் நோக்கில் உலகின் பல்­வே­று ­நா­டு­க­ளிலும் பல ­அ­மைப்­புக்கள் பெருந்­தொ­கை­ நி­தியைத்   [ மேலும் படிக்க ]

இறுதி யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வின்போது தமக்கு இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற முன்னாள்   [ மேலும் படிக்க ]

ஐபிசி தமிழ் தொலைக்காட்சி இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் பணியை தனது தாயக நிகழ்ச்சிகளினூடாக திறம்பட நடத்தி வந்ததை அதன் ஆரம்ப காலங்களிலேயே நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இது குறித்து விரிவாக பேச வேண்டிய தேவையை அதன் அண்மைய செயற்பாடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஐபிசி மட்டுமல்ல இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் எந்த ஊடகங்களையோ அமைப்புக்களையோ நாம் தமிழ்ப்பரப்பிற்குள் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது இந்த இனம் தனக்கு தானே தோண்டும் சவக்குழி என்பதை நாம் தனியாகச் சொல்ல   [ மேலும் படிக்க ]

ஆறிப்போன காயங்களின் வலி- என் மனதில் நீறாகிப் பூத்திருந்த ரணங்கள் மீது மீளவும் காயங்களை உருவாக்கி விட்டது. இந்த நூல் ஆயுதம் தரித்துப் போரிட்ட போராளிகளுக்கு மட்டுமல்ல காலத்தின் தேவை கருதி அந்த நீரோட்டத்தில் கலந்து தங்களுக்கான கடமையினைச் செய்திருக்கின்றோம் என்ற ஆன்ம திருப்தியினைக் கொண்டுள்ள அனைத்து உறவுகளுக்கும் சமர்ப்பணமாகும் என நான் உணர்கின்றேன். என்னதான் முயன்றும் அந்த கசப்பான காலகட்டத்தை ஏழு வருடங்கள் கடந்த இன்றைய பொழுதிலும் எங்கள்   [ மேலும் படிக்க ]

சுன்னாகம் தண்ணீரில் கழிவு எண்ணெய் பரப்பிய காரணம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் வடமாகாணசபை மக்களை ஏமாற்றும் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தெல்லிப்பழை பொதுச்சுகாதார பரிசோதகர் இராஜமேனகனால் பொதுமக்கள் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2016 மே 3 ஆம் திகதி பிறப்பித்த கட்டளை இங்கு பிரசுரமாகின்றது.   நீதிவான் நீதிமன்றம், மல்லாகம் மாண்புமிகு நீதிவான் அ. யூட்சன் அவர்கள் முன்னிலையில்     [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியத்தை சிங்களத்திடம் விலைபேசி விற்று, அது வீசும் எலும்புத் துண்டில் வயிறு வளர்க்கும் ரிசி என்ற கே.பியின் கையாளிற்குத் தளம் அமைத்துக் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் வீரியத்தைச் சிதைக்கும் நிகழ்ச்சிகளைக் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒளிபரப்பி வந்த ஐ.பி.சி தொலைக்காட்சி, அவற்றின் உச்சகட்டமாகச் சிங்களப் படையினரைப் புகழ்ந்துரைக்கும் நிகழ்ச்சியை அண்மையில் ஒளிபரப்பியிருக்கின்றது.   யார் நல்லிணக்கம் பேசினாலும், எவர் நடுநிலைவாதம் பற்றி உபதேசங்களைப் புரிந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை   [ மேலும் படிக்க ]

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.   பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.   சமீபத்திய ஈழப் போர் மற்றும்   [ மேலும் படிக்க ]

கறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை.   தமிழர்கள் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த கோரமான ஒரு நிகழ்வாகும்.   இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு   [ மேலும் படிக்க ]

70ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இல்லை. ஆனால் 1000ஆண்டுகளாக காஷ்மீரிகள் இருக்கிறார்கள். அவர்களின் காஷ்மீரம் இருக்கிறது அப்போதும் அவர்கள் தனிநாடுதான். பிரிட்டிஷ் இந்தியாவில் கூட காஷ்மீர் இருந்ததில்லை .அப்போதும் அது தனிநாடுதான். 1947-க்கு பிறகும் அது தனிநாடுதான்.   பிரிட்டிசார் ‘இந்துக்கள்’அதிகமுள்ள நாடு இந்தியா என்றும், ,முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்றும் நாடுகளை பிரித்து கொடுத்தனர். அப்போதும் காஷ்மீர் தனிநாடுதான்.   அப்போது காஷ்மீரை இந்து   [ மேலும் படிக்க ]

இலங்கை அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை, தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலென, சிவில் சமூக பேச்சாளர் எழில்ராஜன் தெரிவித்துள்ளார்.   மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் கருத்துப்பகிர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்- ”இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள், முதலாளித்துவ வர்க்க நலன்கள் சார்ந்தவை. ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் நிலைமாறு   [ மேலும் படிக்க ]