Archive for November, 2016

“மாவீரர் நாளை மக்கள் நினைவு கூர்வதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை?” இதுதான் இன்று எல்லோரையும் குடையிற கேள்வியாக இருக்கிறது.   பலர் தமது துறை சார்ந்து பல காரணங்களை அடுக்கினாலும் 2009 இற்கு பிறகு ஒவ்வொரு மே 18 மற்றும் மாவீரர் நாள் நிகழ்வின் பின்னான மக்கள் உளவியலை ஓரளவிற்கேனும் எடைபோட்டு அதை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் எமக்கு என்று இது தொடர்பாக ஒரு வாசிப்பு இருக்கிறது.   கடந்த முறைகளுடன்   [ மேலும் படிக்க ]

எங்கள் தேசத்தில் மாவீரர் நாள் பல்வேறு இடங்களிலும் அடக்குமுறைகளை மீறி பேரெழுச்சியாக நடைபெற்ற மகிழ்ச்சியோடு நேற்றைய நாள் கனடிய மண்ணில் மார்க்கம் பாயர் திடலில் கனடா தமிழர் நினைவெழுச்சி அகவம் ஒழுங்கமைப்பில் கனடா தமிழர் மகளிர் அமைப்பினர், கனடா தமிழ் கலை பண்பாட்டு கழகம், கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் என பல கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ஒரே அரங்கில் 3 நிகழ்வுகளாக தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் வணக்க   [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணி இன்று காலை முதல் இடம்பெறுகிறது. தற்போது அதிகளவான மக்கள் தொடர்ந்து வருகை தந்து துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனர்.

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் விடுதலைக் கோட்பாடுகள் குறித்து விரைவில் வெளியாக இருக்கும் “Velupillai Prabhakaran : Being and Nothingness – (May 18 :Before and After) ” என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் நீண்ட கால தமிழீழ அரசியற் செய்பாட்டாளரும், போருக்கு பின்னான பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவருமான திரு பரணி கிருஸ்ணரஜனியிடம்   [ மேலும் படிக்க ]

இது வலி மிகுந்த மாதம். மாவீரர்கள் நினைவு சுமக்கும் மாதம். எல்லா நாட்களையும் போல் இந்த நாட்களை சாதாரணமாகக் கடந்து செல்வது கடினம். அத்தோடு சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு எதாவது எதிர்வினையை பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலை இந்த வலி மிகுந்த நாட்கள் உருவாக்கிவிடுகின்றன..   மே 18 இற்கு பிறகு இப்படி எதிர்வினையை பதிவு செய்வதற்கு எண்ணற்ற விடயங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் பதிவு செய்ய முடியாத   [ மேலும் படிக்க ]

அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்   தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம்   முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள்   நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்க்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண்   முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து பறந்தது   [ மேலும் படிக்க ]

அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இனஅழிப்பு அரசின் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ் வன்முறைக் குழுக்கள் தொடர்பான கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியை பலர் புரிந்திருந்தாலும் அது இன்னும் ஆழமாக சென்று அலசப்பட வேண்டிய விடயமாகும்.   நேரடியான இனஅழிப்பு நடந்து முடிந்த தேசங்களில் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள நேரடி உத்திகளை கையாள முடியாத சூழலில் நுட்பமான உத்திகளை இனஅழிப்பு அரசுகள் கவனமாகக் கையாளும். அதற்காக அவர்கள்   [ மேலும் படிக்க ]