Archive for December, 2016

ஆழிப்பேரலை(சுனாமி )அனர்த்தம் இடம்பெற்ற பிற்பாடு வடமராட்சிப் பகுதிக்கு வந்த மகிந்த ராஜபக்ச அவர்களை மக்கள் விரட்டியடித்ததாக ஒரு செய்தி பரவலாக அடிபட்டது. அதன் பிற்பாடு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்கா அவர்களிற்கு எதிர்ப்பிருக்கவில்லை. ரணிலுடன் டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் காலம் சென்ற ஜயலத் ஜயவர்த்தன அவர்களும் வருகை தந்திருந்தனர்.   ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர், ஆழிப்பேரலை அழிவிலிருந்து மீண்டெழுவதற்காக அமைக்கப்பட்ட கூட்டுச் செயலணியின் பணியகத்திற்கு ரணில் தலைமையிலான குழு   [ மேலும் படிக்க ]

ஜோசப் பரராஜசிங்கம் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்.நீண்டகால அரசியல் அனுபவமும்,பாராளுமன்ற அனுபவமும் நிறைந்தவர்.மனித உரிமைகளில் மிகவும் அக்கறை கொண்டவர்.வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் நிறுவன உறுப்பினர். நான் தங்கியிருந்த அதே விருந்தினர் மாளிகையில்தான் தங்கியிருந்தார். அவருடன் அவர் மனைவியும் வந்திருந்தார்…….   என்னோடு மிகவும் நெருக்கமாகவும்,அன்போடும் பழகினார்கள்.தாய் தந்தையைப் போல என் மீது அன்பு செலுத்தினார்கள்…..கணவன் மனைவி இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றார்கள்.ஒருவர் மீது ஒருவர் வார்த்தைகளில் விவரிக்க   [ மேலும் படிக்க ]

கடந்த செப்ரம்பர் மாதம் 22 ஆம் நாள் காச்சல் காரணமாக தமிழகத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபபட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா டிசம்பர் 6 ஆம் நாள் இறந்துள்ளதாக இந்திய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஏறத்தாள 70 இற்கு மேற்பட்ட நாட்கள் அவர் வைத்தியசாலையில் இருந்தபோதும் அதனை இரும்புத்திரை கொண்டு உலகின் பார்வையில் மறைத்த இந்திய பாதூப்பு மையயத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது அவர்கள் மிகப்பெரும் ஒரு அரசியல்   [ மேலும் படிக்க ]

திடீர் சுகவீனம் காரணமாக கடந்த செப்பரம்பர் மாதம் 22 ஆம் நாள் தழிழகத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று (05) காலமானதாக உத்தியயோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.   எனினும் தமிழகத்தில் ஏற்படவுள்ள கொந்தளிப்பான நிலமையை கருத்தில் கொண்டு தழிக அரசும், இந்திய மத்திய அரசும் இந்த தகவலை வெளியிடுவதற்கு காலதாமதம் செய்துவருகின்றன. தமிழகத்தில் மேலதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு   [ மேலும் படிக்க ]

பிடல் கஸ்ரோ மறைவையடுத்து தமிழர்கள் பலர் தமிழின அழிப்பின் போது அவரது மவுனத்திற்காகவும் தொடர்ந்து ஐநா மனித உரிமை தீர்மானங்களின் போது இனஅழிப்பு அரசை கியூபா காப்பாற்ற முற்பட்டதற்காகவும்; திட்டி தீர்க்கிறார்கள். இதில் நியாயமில்லாமில்லை. இருந்தாலும் அதையும்தாண்டி ஒரு போராடும் இனமாக கஸ்ரோ தொடர்பாக நாம் அணுக வேண்டிய- சிந்திக்க வேண்டிய பல புள்ளிகள் இருக்கின்றன.   அதை பல தளங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் பல பரிமாணங்களாக விளக்க முடியும்.   [ மேலும் படிக்க ]