Archive for January, 2017

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் கடந்த 9 நாட்களாக அறப்போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென இன்று அதிகாலையிலிருந்து மாணவர்களையும், இளைஞர்களையும் போராட்டக்களங்களிலிருந்து கலைப்பதற்கு ஜனநாயக நெறியற்ற முறைகளில் தமிழக அரசு – காவல்துறை ஈடுபட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர் மீது கடுமையான அடக்குமுறைகளை   [ மேலும் படிக்க ]

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்   ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை   சல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் ஒற்றுமையுடனும், கட்டுப்பாடுடனும், அமைதியாகவும், யாருக்கும் எவ்வித இடையூறில்லாமலும் ஒருவார காலமாக நடத்தியப் போராட்டம் மக்களின் பேராதரவைப் பெற்றது.   இதன் விளைவாக டில்லிக்கு விரைந்து சென்ற தமிழக முதல்வர் பிரதமருடன் கலந்து பேசி சல்லிக்கட்டு நடத்துவதற்கான   [ மேலும் படிக்க ]

இன்று ( ஜனவரி 22)  சென்னை உமாபதி கலையரங்கத்தில் ‘அறிவாயுதம்’ குழுவினரின் ஏற்பாட்டில் ‘ தமிழினப் படுகொலையும் ஐநாவின் அணுகுமுறையும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசும்  போதே போருக்கு பின்னரான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்த பின் கற்கை ஆய்வாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான பரணி கிருஸ்ணரஜனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.   (தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த உரை முழுமையாக ஒலிபரப்பபடவில்லை. அந்த உரையின்   [ மேலும் படிக்க ]

1982 நவம்பரில் பிரிட்டனின் அப்போதைய பிரதமராக இருந்த மார்க்கரெட் தாட்சருக்கு ஒரு கடித வெடிகுண்டு அனுப்பபட்டு அது அவரது அலுவலகத்தில் வெடித்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லையெனினும் அதுவொரு பரபரப்பான நிகழ்வாக அமைந்தது. ARM (Animal Rights Militia) என்கிற விலங்குரிமை தீவிரவாத அமைப்பின் பெயரில் அது அனுப்பட்டிருந்தது. HSUS, PETA, ALF போன்ற விலங்குரிமை அமைப்புகள் இவ்வளவு தீவிரமாக இயங்குவதற்குக் காரணம் அவர்கள் உயிரினங்களின் மீது கொண்டுள்ள கருணை அல்ல.   [ மேலும் படிக்க ]

தமிழ் இனத்தை முற்றாக அழித்து ஒழிப்பது என்ற இந்திய ஒன்றியத்தின் திட்டத்திற்கு எதிராக தமிழ் இளம் தலைமுறை எரிமலையாக எழுந்து நின்கின்றது. தமிழ் இனத்தின் பிரதான தாய்நிலமான தமிழகத்திற்காக தமிழீழம் உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களின் அதரவுக்கரம் நீண்டுள்ளது.   ஒரு இனம் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றப் போராடுகின்றது. இந்த போராட்டத்திற்கு எதிராக தனது இரும்புக்கரத்தை நீட்ட இந்திய மாத்திய அரசு தயாராகி வருகின்றது.   [ மேலும் படிக்க ]

PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.   (எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி… அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும்   [ மேலும் படிக்க ]

எந்த வருடமும் இல்லாமல் இது தமிழர்களுக்கு சிறப்பான பொங்கல். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உலக தமிழர்கள் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க வைத்த பெருமை கொண்ட தை மாதமிது.   ஹிப் பாப் தமிழா, ஆர்ஜே பாலாஜி என ஒரு நாகரீக சமுதாயத்தில் வாழ்பவர்களும், காங்கேயம் காளை வளர்க்கும் நாட்டு தமிழனும் அறிவியல் பூர்வமாக பகுத்தாய்ந்து ஒரே கருத்தாக உலகிற்கு சொன்னார்கள்.   மேலை நாடுகளில் தமிழன் என்று   [ மேலும் படிக்க ]

தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதில் இந்திய தேசம் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. தழிழீழத்தில் முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசத்துடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான இனஅழிப்பை மேற்கொண்ட இந்திய தேசம் அதன் பின்னர் தமிழகத்தின் குரல்வளையை மெல்ல மெல்ல இறுக்கி வருகின்றது.   ஒரு இனத்தை அழித்துவிடுதற்கான முதற்படியானது அதன் கலாச்சாரத்தையும், மொழியையும் சிதைத்துவிடுவதே. அதற்கான பணிகளைத் தான் இந்திய மத்திய அரசும், தமிழகத்தில் காலூன்றியுள்ள தமிழின விரோதிகளும்   [ மேலும் படிக்க ]

நியாயமாக நல்ல ஒருங்கிணைப்புடன் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெற வேண்டிய சல்லிக்கட்டு விளையாட்டை உச்சநீதிமன்றத்தின் தடையின் காரணமாக இப்போது எந்த முறைப்படுத்தலும் இல்லாமல் சல்லிக்கட்டு விளையாட்டு நடந்துள்ளது. ஆங்காங்கே மாடுகளை அவிழ்த்து விட்டும் பொதுமக்கள் பலரும் மாடுகளை சூழ்ந்து கொண்டும் எந்த வித முறைப்படுத்தலும் இல்லாமல் சல்லிக்கட்டு விளையாட்டுகள் நடந்துள்ளன. இதனால் தமிழினம் தான் அடங்கி விடப்போவதில்லை என்பதை இந்தி அரசிடமும், தமிழக எடுபிடி அரசிடமும், பீட்டா அமைப்பிடமும் உறுதியாக   [ மேலும் படிக்க ]

(கடந்த வாரம் பிரித்தானியாவில் தமிழர் தகவல் மையத்தினால் நடாத்தப்பட்ட ‘புலம் பெயர்வாழ் தமிழர்’ மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) டயஸ்போறா’ (Diaspora) என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புலம் பெயர்வாழ் மக்களை குறிப்பிடுகிறது. இச் சொற்பதம், சிதறல் என பொருள்படுகிறது. இச் சொற்பதத்தை அழமாகஆராயுமிடத்து, தாயாக பூமியிலிருந்து சிதறியவர்களென கூறுகிறது. இவ் அடிப்படையில், இலங்கைதீவில் தமது தாயாக பூமியான வடக்கு கிழக்கிலிருந்து சிதறி, வெளிநாடுகளின்வாழும் ஈழத் தமிழர்களை, இச் சொற்பதம்   [ மேலும் படிக்க ]