Archive for July, 2018

2007-2009 மே மாதம் வரை இலங்கையில் தமிழீழ மண்ணில் நடந்த மிகப்பெரிய தமிழின அழிப்பு போரின்போது தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தலைப்பு தான் அது. சொந்த இனத்தை முற்றாக அழித்து விட சிங்கள பேரினவாத அரசு இந்திய அரசின் முழு உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த கையாலாகாத கோழைத்தனமான துரோக தீர்மானம் தாய் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.   டெல்லி ஏகாதிபத்திய அரசில் முக்கிய   [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் பாத்திரம் துரோகத்துடன் தொடங்கி துரோகத்துடனேயே முடியப் போகிறது.   தமிழகத்தில் போராளி இயக்கங்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்த காலம் அது.   இந்திய உளவுத்துறை இயக்கங்களை பிரித்து வைத்து கையாள சதிகளை முடுக்கி விட்டிருந்த போதும் அதற்குப் பலியாகாமல் இயக்கங்கள் ஓரளவு கருத்துடன்பாடுடன் இயங்கிய காலம் அது.   அந்த நேரத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் போராளி இயக்கங்களின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் உள்நாட்டு நிறைவுபெற்றதாக சிங்கள அரசு 2009 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் உண்மையில் உள்நாட்டு போர் நிறைவடைந்துவிட்டதா என்பதே தற்போதைய கேள்வி? இதற்கான பதில் இல்லை என்பதே.   தமிழீழத் தேசிய தந்தை மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்றுள்ளது. அதாவது போரட்டம் தொடர்கின்றது.   விடுதலைப்புலிகளின் ஆயுதப்போரானது மக்கள் போராட்டமாக பரிணமித்துள்ளது. தமது காணிகளில் நிலைகொண்டுள்ள சிங்கள படையினரை வெளியேறுமாறு கூறி   [ மேலும் படிக்க ]

உலகெங்கும் வாழும் தமிழர்கள் கருப்பு சூலையை நினைவு கூறும் இந்நாட்களில் சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் தானும் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார்.   கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில்:   “ 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில்,   [ மேலும் படிக்க ]

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி   [ மேலும் படிக்க ]

.ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தென்னிலங்கை தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், தமிழர் சொத்துகளை அழித்து சூறையாடியும் , தமிழர் உயிர்களை பறித்தும், தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்தும் என சிங்கள இராணுவ உதவியோடு சிங்கள காடையர்கள் கொலைவெறியாட்டம் ஆடிய நாட்கள் அவை…   சுமார் 3000 தமிழர்கள் தென்னிலங்கையில் இந்நாட்களில் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டார்கள்.   மறக்க முடியாத கோர படுகொலைகளை அரசின்   [ மேலும் படிக்க ]

இந்திய மத்திய அரசின் உதவியின் அடிப்படையின் பெருமளவான நோயாளர் காவு வண்டிகள் சிறீலங்காவின் வட மாகாணத்திற்கு இந்திய அரசினால் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற இந்த வைபவத்தில் இந்திய அரசின் அனுதாபிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவரும் பங்குபற்றத் தவறவில்லை.   இது இவ்வாறு இருக்க அமெரிக்க கடற்படையினர் சிங்கள கடற்படையினருடனான கூட்டு ஒத்திகையில் திருமலைத்துறைமுக கடற்பகுதியில் ஈடுபட்டதாக கடந்த வாரம் செய்திகள் தெரிவிக்கின்றன.   இவற்றிற்கு எல்லாம் மகுடம்   [ மேலும் படிக்க ]

கட்டாய ஆட்சேர்ப்பு பூனைக்கு புலி என பெயர் வைக்கும். ஓர் தந்திர அரசியல். அவ்வளவே. ஆனால் அதே வேளையில் உலகளாவிய தேசிய இனங்களின் விடுதலைக்கான கோட்பாட்டை முன் வைக்கும் ஓர் இனமாக நாம் இதனை விடுதலைக் கோட்ப்பாட்டிர்க்குள் அர்த்தப்படுத்தும் விதமாக விளங்கப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இதனை தந்திர அரசியலாக இரு தரப்பும் பேதை அரசியலாக ஓர் தரப்பும் அணுக வாய்ப்புள்ளது.   இதனை தந்திர அரசியலாக இவ்வுலகத்தாரும் எமது நேரடி எதிரியும்   [ மேலும் படிக்க ]

இனப்படுகொலையாளி மகிந்த சிறீலங்கா அரசிடம் சலுகைகள் பெற்று அதற்காக பணியாற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் 30 நாட்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தம் – பதவியையும் இழக்கும் அபாயம்!   ஜ.நா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் சிறீலங்கா அன்றைய மகிந்த அரசு விழுத்திய போது அதில் மாட்டிக்   [ மேலும் படிக்க ]

தமிழீழத்தின் காவல் அரணாக விளங்கிய தமிழ் மக்களின் படை பலம் சிறீலங்கா, இந்திய அரசுகளினால் கூட்டாக முறியடிக்கப்பட்ட பின்னர் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தொடர் இனஅழிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது. கலாச்சார சீரழிவுகள், பொருளாதார முடக்கம், திட்டமிட்ட மதப்பரம்பல்கள் (புத்த கோவில்களின் வருகை), திட்டமிட்ட குடியேற்றங்கள், பொருளாதார வளங்களை சூறையாடல், முன்னால் போராளிகளை துன்புறுத்துதல் மற்றும் படுகொலை செய்தல் என தொடரும் இந்த மிகநுட்பமான   [ மேலும் படிக்க ]