ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது.   அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான ஆவணங்கள் மீதான விசாரனை நடாத்தப்பட்டது. 2013. 4. 28 அன்று எனது வாக்குமூலம், மற்றும் சில ஆவணங்கள், சில கானொளிகள் என்பன அவையில் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களாக   [ மேலும் படிக்க ]

சிங்கள யாப்புக்குட்பட்ட தேர்தல்கள் எமக்கு நிரந்தர தீர்வை தரப்போவதில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ளும் அதே சமயத்தில் மறுவளமாக கிடைக்கும் வெற்றிகளினூடாக தாயக – சுயநிர்ணய கோட்பாடுகளை வலுப்படுத்துவதுடன் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிலிருந்து எம்மை தற்காலிகமாகக் காத்துக்கொள்ளவும் முடியும் என்ற உண்மையையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.   அதை பல படிமுறைகளாக விளக்கம் செய்ய முடியும். அவற்றை வரும் காலங்களில் பேசுவோம். நாம் தற்போது உடனடியாக கவனத்தில் கொள்ள   [ மேலும் படிக்க ]

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயார் என்று தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.   இன்று புதன்கிழமை(19.8.2015) மதியம் யாழ்.ஊடக மையத்தில் தமிழ் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்     [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் தமிழ்மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். எமது செயற்பாட்டைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயத்தில் காலதாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும் என த.தே.கூவின் தலைவர் திரு சம்பந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   அவரின் அறிக்கை வருமாறு:   வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம்   [ மேலும் படிக்க ]

“வெற்றி தோல்வி முக்கியமில்லை. அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டு செல்ல வேண்டும்.” தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்     நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ததேமமு படுதோல்வி அடைந்ததை பலரும் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஆனால் அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை யாரும் உணாந்ததாகத் தெரியவில்லை.   தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ததேமமு தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிந்த மறுகணமே ததேமமு யினரையும் அவர்களது அனுதாபிகளையும் தொடர்பு கொண்டு.   [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 14 இடங்களை வென்றிருந்தது.   தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில்16ஐத் தொடக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.   தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,   [ மேலும் படிக்க ]

நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனஅழிப்பை மறந்து விட்டு தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்துக் கொண்டு பெரும் அக்கப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.   சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட எந்த தீர்வும் குறிப்பாக தேர்தல்கள் எமக்கு விடுதலையை தந்துவிடப்போவதில்லை என்ற உண்மையை இவர்களது அதிகார போதை மக்களுக்கு செல்லவிடாமல் மறைத்துக்கொண்டிருக்கிறது.   2009 இனஅழிப்புக்கு பிறகு இந்த உண்மை இன்னும் ஆழமாக உணரப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அரசியலுக்குள் மக்களை   [ மேலும் படிக்க ]

அன்புக்குரிய புலம் பெயர்வாழ் தமிழ் மக்களே!   மிக முக்கியமான வரலாற்றுக் கடமையாற்ற வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம்.   இத் தேர்தல் நிச்சயமாக எமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள தேர்தல் ஆகும். வழமையான தேர்தல் போலன்றி இம் முறை தமிழர்கள் சரியான வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அது கட்சி என்ற வட்டத்தினைத் தாண்டி சரியான வேட்பாளர்கள் தெரிவாக இருக்கவேண்டும் . அதுவே புதிய ஆரோக்கியமான தலைமையை   [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 17 ஆகஸ்ட் 2015 இல் இலங்கையில் மேலும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இத் தேர்தல்கள் அர்த்தமற்ற நிகழ்வுகளாகவே இருந்து வந்துள்ளன. சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றம் சனநாயகப் போர்வையில் தமிழர் தேசியத்தின் அத்திவாரத்தையே அழித்தொழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கின்றது. இதே பாராளுமன்றமே எமது மக்கள் மீது மீண்டும் மீண்டும்   [ மேலும் படிக்க ]

உள்ளகப் பொறிமுறையென்பது, சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்வதற்கான ஒரு பொறியே தவிர, தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பொறிமுறையல்ல என்று கருத்து மேலோங்கி வருகிற சூழலில், ஈழப் போர் நான்கின் இறுதிக் கட்டங்களில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, தமிழ் மக்களுக்கு நீதியைத் தன்னிலும் வழங்குமா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.   இலங்கைத் தீவில் கடந்த சனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, கடந்த   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் நான்கு திசைகளிலும் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்த் தேசியம், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பான உறுதிமொழிகள் அள்ளி வீசப்படுகின்றன.   இந்த நிலையில் ஒரு சம்பவம் தான் என் நினைவில் வருகின்றது. அதாவது 1980 களின் முற்பகுதியில் நல்லூரில் உள்ள வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது அங்கு நவராத்திரி விழாவுக்கு வழை வெட்ட வைத்திருந்த வாளை எடுத்து   [ மேலும் படிக்க ]

கடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் தோற்கடிக்க வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டி சிங்கள தேசிவாத கட்சிகளை வெல்ல வாய்ப்பதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலமையும் காணப்படுகிறது என கவிஞர் திரு தீபச்செல்வன் அவர்கள்   [ மேலும் படிக்க ]

மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் அவர்களின் உடலடக்கத்தின் போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை! மதுஒழிப்புப் போராட்டக் களத்தில் உயிரீகம் செய்த ஐயா. சசிபெருமாள் அவர்களின், உடல் இன்று (07.08.2015) மாலை, சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது இல்லத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.   முன்னதாக, அவரது உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலிருந்து இன்று மதியம் சேலம் கொண்டு வரப்பட்டது.   [ மேலும் படிக்க ]

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை ஜநா முன்னெடுக்குமானால் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க தாம் விசாரணைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக ஜனநாயகப்போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது.   யாழ்ப்பாணத்தினில் இன்று இடம்பெற்ற அவ்வமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டினில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அதன் ஊடகப்பிரிவினர் இனப்படுகொலைக்கான  விசாரணை அறிக்கையினில் விடுதலைப்புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொள்ளப்படும் விசாரணை சர்வதேச விசாரணையானால் நாம் அதற்கு முன்னிலையாகி விளக்கமளிக்க தயாராக   [ மேலும் படிக்க ]

1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.   புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.   இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார்.   [ மேலும் படிக்க ]