முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்குப் பின்னரான சூழமைவில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தைத் தக்க வைப்பதில் காத்திரமான பாத்திரத்தை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் வகித்து வருகிறது.   தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றுள்ள நிலையிலும், தமிழீழத் தனியரசுக்கான தமது வேணவாவை வெளிப்படுத்த முடியாது சட்டகச் சிறைக்குள் தமிழீழ தாயகச் சமூகம் குரல்வளை நெரியுண்டு கிடக்கும் பின்புலத்திலும், தமிழீழ தேசத்தின் தனியரசு வேட்கையை உலகெங்கும் ஓங்கியொலிக்கக் கூடியவர்களாகப் புலம்பெயர்வாழ்   [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   மேற்குலகுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்ந்த முரண்பட்ட நிலை, மேற்குலக நலனை இலங்கைத் தீவிலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் நிலைநிறுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச பொருத்தமானவராக இல்லை என்ற மேற்குலகின்   [ மேலும் படிக்க ]

தேசிய புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ணவை புதிய அர­சாங்கம் குறி­வைத்­தி­ருக்­கி­றது. அவ­ரது வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்­கல்கள் குறித்த விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு, பொலிஸ் நிதிக்­குற்ற விசா­ரணைப் பிரிவு, கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­திடம் கடந்த வாரம், அனு­ம­தியைப் பெற்­றி­ருக்­கி­றது.   இத­னுடன், யாழ்ப்­பா­ணத்­திலும், ஐரோப்­பா­விலும் இயங்கும் தொலைக்­காட்சி ஒன்றின் பணிப்­பா­ள­ரான தமிழர் ஒரு­வ­ரது வங்கிக் கணக்­குகள், கொடுக்கல் வாங்­கல்கள் குறித்தும் விசா­ரிக்க நீதி­மன்றம்   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மாதம் 17 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பில் தென்னிலங்கையில் என்றுமில்லாதவாறு கட்சிகளிடம் பிளவுகள் அதிகரித்துள்ளன. தென்னிலங்கையின் மிகப்பெரும் அரசியல் கட்சியான ஆளும் சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.   தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தலைiமையில் ஒரு அணியும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சா தலைமையிலான அணியும் ஒரு கட்சிக்குள் இருந்து இரு வேறு நோக்கங்களுக்காக அல்லது இரு வேறு   [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.   அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.   இந்தத்தேர்தலில் தமிழரசு   [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைபெற்ற போற்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கமே நடத்துவது என்பதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களை தானே விசாரணை செய்வது முறையானது அல்ல. இலங்கையில் பலதடவை உள்ளக விசாரணை குழுக்கள் அமைத்து விசாரணை நடைபெற்றும் இன்றுவரை எதுமே சரியாக நடத்தப்படவில்லை. மூன்றாம் தரப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்பினால் மேற்கொள்ளபடும் விசாரணைகளே சரியாக நடைபெறும் என்று நம்பிக்கை எமக்குள்ளது. இதற்கு அமெரிக்கா ஜனாதிபதி அவர்களும் ஆதரவினை   [ மேலும் படிக்க ]

28.06.2015 ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்ற ‘எஸ்.என்.நாகராசன் கருத்துலகு’ கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை சிற்சில விரிவுபடுத்தல்களுடன் இங்கு முன்வைக்கப்படுகிறது. ‘மார்க்சிய ஆய்வு வட்டம்’ நண்பர்களுக்கு எனது நன்றி   ஐரோப்பியன் கமிஷன், சர்வதேசிய நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவற்றுடன் கிரீஸ் நாட்டுக்கு முன்னர் இருந்த கடன் மீளுதல் ஒப்பந்தங்கள் 30.06.2015 செய்வாய் நள்ளிரவு முடிவுக்கு வந்தன. இரு தரப்புக்களுக்கும் இடையில் எந்தவிதமான ஒப்புதலும் உருவாகியிருக்கவில்லை. இந்தச் சூழலில்,   [ மேலும் படிக்க ]

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளல் ஆபத்து என்று தாக்கல் செய்த மனுவை திருத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   விடுதலைப் புலிகள் தொடர்பான குறிப்பை நீக்கி மறு மனு தாக்கல்   முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சமீப மனுவுக்கு பதிலாக புதிய மனு ஒன்று உடனடியாக தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.     [ மேலும் படிக்க ]

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.   இன்றோடு 28 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.   கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும்   [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.   யூலை 05 ஆம் திகதி முதல் மாவீரனான மில்லர் வீரகாவியம்  ஆனார். அந்த நாளையே விடுதலைப்புலிகள் கரும்புலிகள் நாளாக பிரகடணப்படுத்தி அனுஷ்டிக்கப்படுவது வழமை.   எனினும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் கரும்புலிதினம்  எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும்  தாயகப்பகுதியிலும் பிரத்தியேகமான இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.   இன்றும்  யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள்   [ மேலும் படிக்க ]

ஜூலை 5 ஆம் திகதி தமிழீழ விடுதலைக்கான மாணவர் மற்றும் இளையோர் கூட்டியக்கம் நடத்தும் “தொடரும் இனப்படுகொலை” ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம். சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறுகிறது.   * இலங்கையில் நடந்தது நடந்து கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலை.   * தொடரும் இந்த இனப்படுகொலைக் குற்றம்   [ மேலும் படிக்க ]

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பிலான உண்மைத்தன்மையை அரசு அறிவிக்க கோரியும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   காணாமல்போனோர்,காணி மீள்குடியேற்றம் போன்றவற்றிற்கு வெகுஜன போராட்டங்கள் மூலம் ஆதரவு கொடுத்ததைப் போன்று, அண்மை காலத்தில் அதிகரித்து வரும் பாலியல் துஸ்பிரயோகங்கள்,சமூக சீரழிவுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு   [ மேலும் படிக்க ]

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சாவிற்கு பீல்ட் மார்சல் பட்டத்தை கொடுத்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.   காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு உண்மை நிலையினை தெரியப்படுத்த வேண்டும் என்றும் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இன்று   [ மேலும் படிக்க ]

சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 29-வது கூட்டத் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன என பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளரும் பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகியுமான வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.   இது தொடர்பில் விகடன் க்கு அளித்த செவ்வியில் கே.பாலு .   ஜெனீவாவில் இப்போது நடைபெற்றுள்ள இந்தக் கூட்டம் எந்த அளவுக்கு முக்கியத்துவம்   [ மேலும் படிக்க ]

சுமந்திரன், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய விசாரணைக்கு உள்நாட்டு பொறுமுறையைக் கேட்பதன் மூலம் முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள வெறியர்களை காப்பாற்ற முயல்கின்றார் – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு!   ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு   [ மேலும் படிக்க ]