ஐநாவின் 28வது கூட்டத்தொடர் 02.03.2015 திங்கட்கிழமை தொடங்கியது.   வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது. இதில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில் பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறியதுடன், மண்டபத்தின் கதிரைகள் வெறுமையாக காட்சியளித்ததுடன், ஐநா மனித உரிமைகள் ஆனையாளரும் உரையினை செவிமடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்க பிரதிநிதி தனது உரையில் இலங்கை தொடர்பில் கடந்த காலத்தை விட குறைவான கருத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் பலனாக கிழக்கு மகாணசபையை கைப்பற்றக்கூடிய வாய்ப்பு அதிக இடங்களை பெற்றிருந்த கூட்டமைப்புக்கு கிட்டியது.   ஆனால் குறுக்குவழியில் மக்கள தீர்ப்புக்கு முரணாக மாறி மாறி பல்டி அடித்தே கட்சியை மாற்றி மாற்றி தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் அதைக் கைப்பற்றியது.   ஆச்சர்யப்படத்தக்க வகையில் எதற்குமே அடிபணிந்து போகும் கூட்டமைப்பு தலைமை இதற்கு இணங்காது ஆட்சியமைக்க முற்பட்டது.   ஆனால் இனஅழிப்பு   [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.   அமைச்சுப் பதவி தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தோசிக்காமல், கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்காமல் தனியே சம்பந்தர் ஐயா மாத்திரம் எடுத்த தன்னிச்சையான இத்தெரிவை நாம் மிகுந்த வருத்தத்துடன் நிராகரிக்கின்றோம்.   [ மேலும் படிக்க ]

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலைத்திற்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களுடைய காணிகள் முழுமையான விடுவிப்பதற்காக அழுத்தத்தினை அமெரிக்க அரசாங்கம் கொடுக்க வேண்டும்.   வலி.வடக்கு வாசிகள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவது ஆனுமதிக்க முடியாததொன்று என்றும் யாழ்.வருகைதந்த அமெரிக்க அரசியல் விவசாரக் குழுவிடம் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .   இன்று காலை யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட அமெரிக்காவின் அரசியல் விவகார குழுவினர் பிரத்தியோக இடம்   [ மேலும் படிக்க ]

புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அந்தந்த நாட்டின் பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர், இதில் அரசியல் முக்கியாமான ஒன்று ஜரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது அரசியல் வெற்றிகளை உறுதி செய்து எதிர்காலத்தை ஸ்திறப்படுத்தி வருகிறார்கள், நாட்டின் அரசியல் கொள்கை வகுப்பாக்கங்களில் மீதான தாக்கத்தை தமது அரசியல் பலத்தினூடாக வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவுஸ்திரேலியாவிலும் தமிழர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வருவது வரவேற்க தக்க ஒன்றே.   [ மேலும் படிக்க ]

இலங்கை அரசாங்கத்தின் வெளி முகங்கள் மாறி இருந்தாலும் உட்கட்டமைப்புக்கள் எதுவும் மாறவில்லை . 100 நாள் செயல் திட்டத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் அடக்கப்படவில்லை. வட கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் திருப்பி வழங்கப்படவில்லை. நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ள அரசியல் கைதிகள் நீதி விசாரணையின்றி சிறைகளில் வாடுகின்றார்கள். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தம் உறவுகளை தேடியலையும் பெற்றோர் மற்றும்   [ மேலும் படிக்க ]

24.02.2015 செவ்வாய்க் கிழமை லண்டனில் அமெரிக்க தூதுவராலயம் முன்னதாக ,பாரிய ஆர்பாட்டம் இடம்பெற்றது சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. அமெரிக்க அரசே உள் நாட்டு விசாரணை தேவையில்லை. சர்வதேச சுயாதீன விசாரணை தான் வேவை என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. சர்வதேசம் தலையிட்டால் தான் இலங்கையில் ஒரு தீர்வு வரும் என்ற விடையத்தை , பிரித்தானியா வாழ் தமிழர்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் விடுதலைச் சுடர் ஸ்ராஸ்பூர்க் நகரத்தை தொடர்ந்து நேற்றைய தினம் பெல்ஜியம் தலைநகரை நாட்டை வந்தடைந்தது. மதியம் 2 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.   தாயகத்தில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து, ஐ.நா விசாரணை அறிக்கை தாமதப் படுத்தியதால் கடும் வேதனை அடைந்துள்ளதை காட்டவும் ஐ.நா எவ்வாறு நடந்து   [ மேலும் படிக்க ]

இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்றரை லட்சம் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். ஐ.நா சபை தாமதமின்றி  போர்க்குற்ற விசாரணை அறிக்கை உடனே வெளியிடக் கோரி  யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம். யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் சமநேரத்தில் நடைபெற்ற முற்றுக்கைப் போராட்டத்தில் நூற்றிக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை  மீதும் தமிழ் மக்கள்   [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது.   யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பேரணியாக பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது.     [ மேலும் படிக்க ]

ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக சமூகம்  அழைப்பு விடுத்துள்ளது.     பேரணி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் நேற்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதன்போதே ஆசிரியர் சங்க தலைவர் ஆ.இராசகுமாரன் இந்த   [ மேலும் படிக்க ]

தமிழீழத்தில் நடைப்பெற்ற தமிழர் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் போர்குற்ற அறிக்கையை தாமதமின்றி வருகின்ற மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி யாழ்இபல்கலைகழக சமூகம் எமக்கு நீதி வேண்டும்இஎன்ற மாபெரும் அமைதி பேரணியை 24.2.2015, அன்று நடத்துவதாக அறிவித்துள்ளனர்.   இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதே நாளில் 24.2.2015, காலை 10.00 மணியளவில் சென்னை அடையாரில்லுள்ள ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்.எனவே இப்போராட்டத்திற்கு எம்   [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார்.   இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று இலங்கையின் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றும்   [ மேலும் படிக்க ]

ஏற்கனவே திட்டமிட்டபடி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழகச் சமூகம் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித் துள்ளார்.   இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு அவர் கோரியுள்ளார்.    இலங்கையின் இறுதிப்   [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை கழக மாணவர்களின் கைகளை பலபடுத்த இளைஞர்களே ஒன்றிணையுங்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ் மாவட்ட தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்துள்ளார்.   இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:-     எதிர்வரும் 24ம்திகதி செவ்வாய்கிழமை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் இணைந்து ஜெனீவா பிரேரணை பிற்போடப்பட்டத்தை கண்டித்தும் குறிப்பிட்ட திகதியில் அறிக்கை சமர்பிக்கப்பட   [ மேலும் படிக்க ]