.ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தென்னிலங்கை தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், தமிழர் சொத்துகளை அழித்து சூறையாடியும் , தமிழர் உயிர்களை பறித்தும், தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்தும் என சிங்கள இராணுவ உதவியோடு சிங்கள காடையர்கள் கொலைவெறியாட்டம் ஆடிய நாட்கள் அவை…   சுமார் 3000 தமிழர்கள் தென்னிலங்கையில் இந்நாட்களில் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டார்கள்.   மறக்க முடியாத கோர படுகொலைகளை அரசின்   [ மேலும் படிக்க ]

இந்திய மத்திய அரசின் உதவியின் அடிப்படையின் பெருமளவான நோயாளர் காவு வண்டிகள் சிறீலங்காவின் வட மாகாணத்திற்கு இந்திய அரசினால் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற இந்த வைபவத்தில் இந்திய அரசின் அனுதாபிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவரும் பங்குபற்றத் தவறவில்லை.   இது இவ்வாறு இருக்க அமெரிக்க கடற்படையினர் சிங்கள கடற்படையினருடனான கூட்டு ஒத்திகையில் திருமலைத்துறைமுக கடற்பகுதியில் ஈடுபட்டதாக கடந்த வாரம் செய்திகள் தெரிவிக்கின்றன.   இவற்றிற்கு எல்லாம் மகுடம்   [ மேலும் படிக்க ]

கட்டாய ஆட்சேர்ப்பு பூனைக்கு புலி என பெயர் வைக்கும். ஓர் தந்திர அரசியல். அவ்வளவே. ஆனால் அதே வேளையில் உலகளாவிய தேசிய இனங்களின் விடுதலைக்கான கோட்பாட்டை முன் வைக்கும் ஓர் இனமாக நாம் இதனை விடுதலைக் கோட்ப்பாட்டிர்க்குள் அர்த்தப்படுத்தும் விதமாக விளங்கப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இதனை தந்திர அரசியலாக இரு தரப்பும் பேதை அரசியலாக ஓர் தரப்பும் அணுக வாய்ப்புள்ளது.   இதனை தந்திர அரசியலாக இவ்வுலகத்தாரும் எமது நேரடி எதிரியும்   [ மேலும் படிக்க ]

இனப்படுகொலையாளி மகிந்த சிறீலங்கா அரசிடம் சலுகைகள் பெற்று அதற்காக பணியாற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் 30 நாட்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தம் – பதவியையும் இழக்கும் அபாயம்!   ஜ.நா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் சிறீலங்கா அன்றைய மகிந்த அரசு விழுத்திய போது அதில் மாட்டிக்   [ மேலும் படிக்க ]

தமிழீழத்தின் காவல் அரணாக விளங்கிய தமிழ் மக்களின் படை பலம் சிறீலங்கா, இந்திய அரசுகளினால் கூட்டாக முறியடிக்கப்பட்ட பின்னர் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தொடர் இனஅழிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது. கலாச்சார சீரழிவுகள், பொருளாதார முடக்கம், திட்டமிட்ட மதப்பரம்பல்கள் (புத்த கோவில்களின் வருகை), திட்டமிட்ட குடியேற்றங்கள், பொருளாதார வளங்களை சூறையாடல், முன்னால் போராளிகளை துன்புறுத்துதல் மற்றும் படுகொலை செய்தல் என தொடரும் இந்த மிகநுட்பமான   [ மேலும் படிக்க ]

“தமிழின அழிப்பை கைகட்டி வேடிக்கை பார்த்த உலகம், தாய்லாந்தில் சிறுவர்களை மீட்க மட்டும் வரிசையாக ஓடியது ஏன்?” என்று சில தமிழர்கள் ஆற்றாமையும், வன்மமுமாக எழுதிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. இந்த கோபமும் அதன் பின்னுள்ள கேள்விகளும் நியாயமானதே..   ஆனாலும் இரு நிகழ்வுகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.   உலகின் கூட்டு மனச்சாட்சியை மூலதனமாக்கி அதன் மீது ஒரு சாகசம் நிகழ்த்தக் கூடிய வாய்ப்பை உலக ஊடகங்கள்   [ மேலும் படிக்க ]

தமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தமது உயிர்களை துச்சமாக மதித்தது எட்ட முடியாது என எதிரிகளால் கணிக்கப்பட்ட இலக்குகளையும் உள்நுளைந்து தகர்த்தவர்களே கரும்புலிகள்.   துரோகிகளாளும் எதிரிகளாலும், அனைத்துலக சமூகத்தாலும், இந்திய அரசினாலும் பலவீனப்படுத்தப்பட்ட எமது விடுதலைப்போரின் பலமிக்க ஆயுதமாக விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டவர்களே கரும்புலிகள்.   இவ்வாறான மாவீரர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் தான் சிங்கள அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டு; இனவிடுதலையை கூறுபோடும்   [ மேலும் படிக்க ]

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.   இன்றோடு 28 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.   கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும்   [ மேலும் படிக்க ]

நேற்று சிரியக் குழந்தைகளின் படுகொலைகளை முன் வைத்து திமுக வின் தமிழின அழிப்பில் அதன் பங்கை நினைவூட்டியிருந்தேன்.   உடனே சிலர் கருணாநிதி மீதான இந்த வரலாற்று குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் அவர் நினைத்திருந்தாலும் – பதவியை துறந்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்று கிளம்பி விட்டார்கள்.   கடவுளே ஏற்கனவே எழுதிய ஒரு விடயத்தை திரும்பத் திரும்ப எத்தனை தடவைதான் எழுதுவது?   இதுவே கடைசியாக இருக்கட்டும்..   [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சிங்கள மக்களிடம் இனத் தீவிரவாதம் கூடுதலாக வளர்ந்துள்ளதையே காட்டுகின்றன. மொத்தமுள்ள 341 உள்ளாட்சி சபைகளில் 239-ஐ இராசபட்சேயின் சிறீலங்கா பொதுசன பெரமுனா வென்றுள்ளது. தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, மிகக் குறைவாக 41 சபைகளில்தான் வென்றுள்ளது.   குடியரசுத் தலைவர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திக் கட்சி வெறும் 10 இடங்களில் தான் வென்றுள்ளது.   இதனால் இப்போது இலங்கை கூட்டணி   [ மேலும் படிக்க ]

எதிர் வரும் பெப்ரவரி 20, 2018, செவ்வாய் கிழமை அன்று கனடிய மண்ணில் கனடா தமிழ் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.   • தாயகத்தில் வவுனியாவில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும். • அவர்கள் போராட்டத்தை ஏறெடுத்து பாராதிருக்கும் சிறிலங்கா அரசின் செயலை வன்மையாக கண்டித்தும். •   [ மேலும் படிக்க ]

காதல் செய்வோம்..   இன அழிப்பு பின்புலத்தில் மனித உறவுகள் எப்படி சிதையும் என்பதற்கு ஈழத் தமிழர்களாகிய நாம் சமகால உதாரணங்களாகும்.   இனஅழிப்பின் பக்க விளைவாகவும் போருக்கு பிந்திய சமூகத்தில் தோற்றம் பெறும் அடிப்படை சிக்கல்களின் – முரண்பாடுகளின் விளைவாகவும், குறிப்பிட்ட இனக் குழுமத்திற்குள் பல்வேறு வகையான மனப் பிறழ்வுகளை – உளவியற் சிக்கல்களை அடையாளம் காண முடியும்.   நம்மில் ஒவ்வொருவரும் – புலம் பெயர்ந்திருந்தாலும் கூட   [ மேலும் படிக்க ]

ஈகைப்பேரொளி முருகதாசன் உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்   என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்.   எனது பெயர் முருகதாசன் பிறந்த திகதி 02 – 12 – 1982   இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் நாட்டின் முகவரியில் வசிக்கும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவன்.   இலங்கையில் வாழும் தமிழ் இனம்   [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை(Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது   [ மேலும் படிக்க ]

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும்.   அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம்   [ மேலும் படிக்க ]