நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக ‘ கனடாவில் பல அமைப்புகள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 லட்சம் ( 212 மில்லியன்) ரூபாவுக்கும் என்ன நடந்தது? என தமிழரசுக்கட்சியின் மகளிர் அணிச்செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமைத்ததில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி கேள்வியினை எழுப்பியிருந்தார்.

மேற்குறிப்பிட்ட நிதி சம்பந்தமாக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பொருளாளர் கனகசபாபதியால் கேள்வி எழுப்பப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் வங்கி கணக்கு கூற்றுக்களில் குறித்த நிதி வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இவ் நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தானே கனடாவில் இருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் குறித்த 212 மில்லியன் ரூபாவுக்கும் என்ன நடந்தது என இன்றுவரை எந்த உத்தியோகபூர்வத் தகவல்களும் வெளிப்படுத்தபடவில்லை என்றும் அவ்வாறாயின் குறித்த நிதி எங்கே? அந் நிதியை யார் கையாண்டார்கள்? குறித்த நிதி மோசடி செய்யப்பட்டுவிட்டதா? போன்ற சந்தேகங்கள் இருப்பதாகவும் குறித்த நிதி தொடர்பாக விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம் என்று தமிழரசுக்கட்சியின் மகளிர் அணிச்செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் தெரிவித்தார்.

இதனிடையே தமிழரசுக் கட்சிக்கு கனேடிய தமிழ் மக்கள் வழங்கும் நிதி மறைமுகமாக தமிழ் இனத்தை அழிப்பதற்கு துணைபோவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here