சாவக்கச்சேரி பிரதேசத்தில் உள்ள மிசாலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்று கடந்த திங்கட்கிழமை (6) அவர்களின் ஆதரவாளர் ஒருவரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் 50 இற்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருந்தனர். அதிலும் பலர் கூட்டம் முடிவதற்கு முன்னர் சென்றுவிட்டனர். தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில் தேர்தலில் மக்கள் கவனம் செலுத்தவில்லை.

எல்லா கட்சிகளின் கூட்டங்களிலும் குறைவான மக்களே கலந்துகொண்டு வருகின்றனர். கொரேனா வைரஸ் அச்சம், தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சிகள் புறக்கணிப்பதால் ஆதரவாளர்களிடம்; ஏற்பட்ட விரக்தி, நிதிப் பற்றாக்குறை போன்றனவே இதற்கான காரணம்.

தேர்தல் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அதிக அக்கறை காண்பிக்கவில்லை ஆனால் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்  என சிறீலங்கா தேர்தல் ஆணையாளரும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here