ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இருந்து இலங்கை விலகிச்சென்றுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளமையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் மற்றும் உலக ஜனநாயகம் தொடர்பான, 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியும் அவரது இடைக்கால அரசாங்கமும் எடுத்த முக்கியமான கொள்கை தீர்மானங்களில் ஒன்றாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில்லை என்பதும், இலங்கையில் உத்தேச புதிய சட்டமூலத்தை நீக்குவது என்பதும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஜி.எஸ்.பி .சலுகையை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதென்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் குறித்த வாக்குறுதியில் இருந்து இலங்கை பின்வாங்கியுள்ளதென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here