இன்று தியாகி வாஞ்சிநாதன் நினைவுநாள். வாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற தினமான ஜூன் 17ம் நாள் வீரவணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிறையில்.அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்போதைய நெல்லை கலெக்டர் ஆஷ்துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார்.

இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர்.

அதன்படி 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட கலெக்டர் ஆஷ்துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.

பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு களமரணம் அடைந்தார்.

வாஞ்சிநாதன் மரணம் அடைந்த ஜூன் 17ம் தேதியில் ஆண்டுதோறும் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுக்கல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

1987ம் ஆண்டு இலங்கை வந்த இந்திய ராணுவம் 10000ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர். கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை சேதமாக்கினர்.

இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களுக்கு உத்தரவிட்ட பிரதமர் ராஜீவ்காந்தியை தானு என்ற தமிழ் பெண் வெடி குண்டு மூலம் கொன்றார். தானும் அதில் மரணமடைந்தார்.

ஆனால், நாலு பேர் இறப்புக்கு காரணமான ஆஷ்துரையை கொன்ற வாஞ்சிநாதனை தியாகி என்று கொண்டாடும் இந்திய அரசு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் இறப்புக்கு காரணமான ராஜீவ்காந்தியை கொன்ற தானுவை பயங்கரவாதி என்கிறது.

இது என்ன நியாயம்?

-தோழர் பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here