இப்போதைய சூழல்ல போர் புரியும் பொருளாதார தகுதி இந்தியாவுக்கு இல்லை.

போர் மூளுமானால் போரில் ஏற்படும் இழப்பை விட அதிகமான இழப்பை சாமானியர்கள் சந்திப்பார்கள்.

அதை வெளிப்படையாக பேசினாலே தேசதுரோகம், தேசக்குற்றம் எனும் அளவிற்கு இழப்புச்செய்தி இருக்கும்.

சீனாவின் இந்த போக்கிற்கு காரணம். அதன் பொருளாதாரத்திற்கு இந்தியாவால் பாதிப்பு ஏற்படுமோ எனும் எண்ணம்தான்.

மோடி பேசிய சுயசார்பு என்பதே உலக நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்வது போல், இந்தியாவும் செய்யும் என உலத்திற்கான ஒரு அறிவிப்பு.

சீனா வுக்கு மாற்று யாருமே இல்லை. ஒரு சில துறைகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவே சீனாவின் மாற்று என சில நாடுகள் நினைக்கின்றன.

வெகு சில விசயங்களுக்கு அது சரியாக இருக்கலாம். ஆனால் 90% சீனாவின் உற்பத்தியை இந்தியாவால் உடனடியாக கொடுக்க முடியாது. நெடுநாட்களிலும் அதற்கான சாத்தியங்கள் இல்லை.

சும்மா மக்களை சந்தோசப்படுத்த, தன் இயலாமையை வெளிக்காட்டாமல் இருக்க மோடி பேசிய ஒரு பேச்சுதான் இதுக்கு காரணம்.

சீனாவின் தொழில்துறை முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் ஊழலற்ற ஆட்சி, ஒரே இனம் எனும் ஒற்றுமை, அரசின் கட்டுப்பாடுகள் இருந்தாலும், மக்களின் மீது பிறப்பின் அடிப்படை ஏற்றத்தாழ்வு அற்ற நிலை என நிறைய இருக்கு.

ஆனா இந்தியா லஞ்சம், ஊழலில் திளைக்கும் நாடு.

பல்வேறு சாதிகள் இருக்கும் நாட்டில், ஒரே சாதியை சார்ந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் 80% இருக்கும் நாடு.

பெரும் தொழிலதிபர்கள் முன்னேறினால் நாடே முன்னேறும் எனும் தவறான கொள்கை.

பல்வேறு இன மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு சிலருக்கு மட்டுமே ஆதரவான நிலை எடுக்கும் அரசின் அயோக்கியத்தனம்.

ஒரு நாட்டின் 20% மக்களை மதத்தால் வெறுப்பது, 30% மக்களை சாதியால் வெறுப்பது. 10% மக்களை மொழிக்காக புறக்கணிப்பது என 70 கோடிக்கும் மேலான மக்களின் உயர்வை விரும்பாத நாட்டில் முன்னேற்றம் எவ்வகையில் இருக்கும்?

ஒரு இயக்கம், ஒரு கட்சி, ஒரு சாதி க்காக இந்திய வீரர்கள் தான் பலிக்கடா ஆவார்கள்.

நம் பொருளாதாரம் 20 ஆண்டுகள் கழித்து சரி செய்யப்படலாம். ஆனால் ராணுவ வீரனின் உயிர் திரும்ப வராது.

ஒரு சில பெருச்சாலிங்க பொய்யும், போலியான வீரவசனங்கள் நிறுத்தினால் போர் தவிர்க்கப்படும்.

ராணுவ வீரன் உயிர், நாட்டு மக்கள் பொருளாதாரம் காக்கப்படும்.

மூடுங்க மோடி சார்.

தோழன் ஜேகே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here