இந்தியப் பிரதமர் மோடி எமது இந்து கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற உடனடியாக தலையிட வேண்டும்.

பௌத்த அடிப்படை வாதமே காணாமல் ஆக்கப்பட்டதறற்கும், அவர்களை கண்டு பிடிப்பதற்கும் தடையாக உள்ளது.

இந்து கோவில்களில் சிங்கள புத்த மத பிக்குகளால் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

சமீபத்தில், இரண்டு பெரிய மற்றும் வரலாற்று கோயில்கள் புத்த மதத்திற்கு சொந்தமானவை என தேரர்களின் கருத்து எம்மை எல்லாம் பயமுறுத்துகிறது , குறிப்பாக நல்லூர் கோயில் மற்றும் திருகோனேஸ்வரம் கோவிலும்.

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியாது குறிப்பிடத்தக்கது.

இப்போது சிங்கள பிக்குகள் கிழக்கு மாகாணத்திதில் 25 கோயில்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவை என்றும் அவர்கள் புத்த கோவிலைக் கட்டுவதற்கு முயற்சிப்பார்கள் என்றும் இந்துக்கள் பயப்பிடுகிறார்கள்.

புதிய சிங்கள அரசாங்கம் ஒரு குழுவை உருவாக்கி அதனை கிழக்கு மாகாண தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்று கூறி, இந்து கோவில்களை கைப்பற்ற முயற்றி செய்வதற்கு அவை வழக்கமாக இடங்களைத் தோண்டி, அடுத்த நாள் சில பழைய புத்த சின்னங்களை தோண்டிய இடத்தில் வைக்கின்றன. இது தங்களின் வரலாற்று புத்த இடம் என்று அவர்கள் கூறி , இலங்கை இராணுவத்தை அனுப்புவதன் மூலம் அந்த இடங்களை பாதுகாக்கிறார்கள், இறுதியில் ஒரு புத்த கோவிளை கட்டி சிங்கள மக்களை குடி ஏற்றுகிறார்கள்.

இதை நாம் இனப்படுகொலை என்று அழைக்கிறோம். இந்து இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் இந்து மதத்தைப் பாதுகாப்பதே பிரதமர் மோடியின் கடமையாகும்.

இந்திய காங்கிரஸ் கட்சி எந்தவொரு அரசியல் தீர்வும் இல்லாமல் தமிழர்களை பலவீனப்படுத்தி, மேலும் 2009 ல் நமது பாதுகாவலர்களை அழிக்க ஒரு பச்சை விளக்கு காட்டியது

திரு. மோடி இலங்கைய வந்த போது கூட்டுறவு கூட்டாட்சிக்கு உறுதியளித்தார் மற்றும் பரிந்துரைத்தார். கூட்டுறவு கூட்டாட்சி முறையை அமுல்படுத்துவதற்கு முன் விளக்கமளிக்க இந்திய அரசியலமைப்பு அறிஞர்களின் ஆரம்ப குழுவை அனுப்ப எதுவும் செய்யப்படவில்லை. நாம் அதனை மிக விரைவில் செய்யும் படி கேக்கிறோம்.

இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தைஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்தசத்தாதிஸ்ஸ தேரர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் என்பதும் இந்தியாவின் வல்லமையை இழிவு படுத்துவதாகும்.

எங்கள் இந்து கோவில்களில் சிங்கள பிக்குகளின் பல ஆக்கிரமிப்புக்கள் நடக்கின்றன . இதை நிறுத்த வேண்டும்.

இலங்கையின் வடகிழக்கில் உள்ள பண்டைய இந்து நாகரிகத்தையும் அவற்றின் கோவில்களையும் பாதுகாப்பது இந்து நாடு என்பதால் இந்தியாவின் கடமையாகும்.

2009 ஆம் ஆண்டில் இந்திய காங்கிரஸ் தமிழரின் பாதுகாப்பை அழித்ததாள், இன்று இது பிரதமர் மோடியின் ஒரு கடமையாகும்.

இது இந்தியாவினால் செய்ய முடியும்.1987 இல் இந்தியா இங்கு வந்து 13ம் சடடத்துன் வட கிழக்கை இணைத்து இது ஒரு தமிழர் தேசம் என்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை கொடுத்ததும், சம்பந்தன் இந்தியாவில் இலங்கை ஒரு புத்த நாடு என்று சொன்னதுமே இவை யாவற்றுக்கும் காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here