யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 330 பேர் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரு மாவட்டங்களிலும் 571,848 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வடமாகாணத்தின் வாக்குச் சீட்டு மிகவும் நீளமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 20 மேற்பட்ட கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் 6 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன. இந்த மாவட்டங்களில் 287,013 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here